பெருந்தோட்டக் கம்பனிகளுக்கும் தொழிற்சங்கங்களுக்குமிடையே இடம்பெறும் கூட்டு ஒப்பந்தம் மூலம் கிடைக்கும் சம்பள உயர்வே நிரந்தரமாகும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான டி.வி.சென்னன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் அரசு சார்பு தொழிற்சங்கங்கள் கூறுவதைப்போல் 2,500 மூபா சம்பள உயர்வு என்பது தோட்டத் தொழிலாளர்களுக்கு முழுமையாக கிடைக்கப் போவதில்லை. வேளைநாட்களுக்கு அமையவே அது வழங்கப்படும் என்றார்.
பெருந்தோட்டங்களில் பெண் தொழிலாளர்கள் இல்லா விட்டால் தோட்டங்களில் தொழிற்சங்கங்கள் இருக்கவே முடியாது. பெருந்தோட்டங்களும் பெண் தொழிலாளர்களை மையப்படுத்தியே இருந்து வருகின்றன. இலங்கையில் மட்டுமல்ல சர்வதேச ரீதியிலும் இப் பெண் தொழிலாளர்கள் குறித்து பேசப்பட்டு வரும் நிலைமையினை அவதானிக்க முடிகிறது என்றார். பெருந்தோட்ட மக்களின் உரிமைகள் தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களில் பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டதுடன் பலியான சம்பவங்களும் கடந்த காலங்களில் இடம்பெற்றுள்ளன.
பெருந்தோட்ட பெண்கள் எதிர்வரும் காலங்களில் இடம்பெறவிருக்கும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் ஊடாக அரசியலில் பிரவேசிக்க வேண்டும். அதன் மூலம் அப்பெண்கள் வெற்றி பெற்று பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து அவர்களாகவே குரல் எழுப்ப வேண்டும். அதனடிப்படையில் பெண்களுக்கான ஆரோக்கிய சூழல் ஏற்படும்.
No comments:
Post a Comment