புதிய ஆட்சியில், மலையகத்தின் கல்வி வளர்ச்சியை அதிகரிக்கவும் மலையகத்தில் பல்கலைக்கழகம் அல்லது பல்கலைக்கழகக் கல்லூரியை ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நாவலபிட்டி, கெட்டபுலா தோட்டத்தில் பல்கலைக்கழக கல்லூரியொன்றை நிர்மாணிப்பாதற்காக 5 ஏக்கர் காணியொன்று ஒதுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க கல்வி அமைச்சர் வி.இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், 'நுவரெலியா மாவட்டத்தில் தமிழ், சிங்கள மொழி மூலமான மாணவர்கள், ஆங்கில மொழியில் கல்வி கற்பதற்காக புதிய பாடசாலை ஒன்று அமைக்கப்படவுள்ளது. 2016 தொடக்கம் 2020ஆம் ஆண்டுக் காலத்துக்கான புதிய கல்விக்கொள்கையில், மலையகக் கல்வி அபிவிருத்தி தொடர்பில் தேசிய கல்வி நிறுவனம் புதிய நடைமுறைகளையும் அதற்கான பிரிவையும் ஆரம்பிக்கவுள்ளது' என்றார். 'அதேபோல் தோட்டப் பாடசாலைகளின் உட்கட்டமைப்பு, ஆளனி பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உயர்தரத்தில் கணித, விஞ்ஞானப் பிரிவுகளை அபிவிருத்தி செய்யவும் அதற்கான ஆசிரிய நியமனங்களை பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்தாக அவர் மேலும் கூறினார்.
No comments:
Post a Comment