தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள
அதிகரிப்பை தாராளமாக வழங்க முடியும். அதனை மறுக்கின்ற அல்லது 1000
ரூபா சம்பள அதிகரிப்பை வழங்க முடியாதென்றும் தோட்டங்கள் நட்டத்தில்
இயங்குவதாகவும் என்றும் பெருந்தோட்டக் கம்பனிக்காரர்கள்
கூறுவார்களேயானால் தோட்டங்களை ஒப்படைத்துவிட்டு தாராளமாக
அவர்கள் வெளியேறிச் செல்லலாம் என்று உயர் கல்வி, நெடுஞ்சாலைகள்
போக்குவரத்து அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல புஸல்லாவை நகரத்தை அண்மித்த பிரதேசங்களில்
நடைமுறைப்படுத்தப்படவிருக்கும் அபிவிருத்திப்பணிகள்
தொடர்பாகவும் புதிய பாதைகளுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வும் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து
கொண்டு உரையாற்றும் போதே
தெரிவித்தார். இங்கு மத்திய மாகாண சபை உறுப்பினர் எஸ்.
இராஜரட்ணம், நகர வர்த்தகர்கள், பெருந்தோட்ட தொழிலாளர்கள் உட்பட
பலரும் கலந்துகொண்டனர். அமைச்சர் லக் ஷ்மன் கிரியெல்ல தொடர்ந்தும் உரையாற்றுகையில், தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா
சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கு தோட்டக் கம்பனிகளுக்கு
வசதிகளும் போதிய பணமும் இருக்கின்றது. ஆகவே 1000 ரூபா சம்பள
அதிகரிப்பை தாராளமாக வழங்க முடியும்.
அதனால் தொழிலாளர்களின் காலத்தையும் நாட்டின்
காலத்தையும் வீணாக்காமல் கட்டாயம் 1000 ரூபா சம்பளத்தை தோட்டத்
தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் என்று கம்பனிகளுக்கு கூறுகிறேன்.
தற்போது தோட்டங்களை குத்கைக்கு பெற்று முறையாக நிர்வகித்து தோட்டத்
தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளம் வழங்க தயாரான நிலையில் பல
நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு இருக்கின்றன. அவர்களைக் கொண்டு
தோட்டங்களை நிர்வகித்து தோட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த
முடியும். தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள அதிகரிப்பை
தாராளமாக வழங்க முடியும். அதனை மறுக்கின்ற அல்லது 1000 ரூபா சம்பள
அதிகரிப்பை வழங்க முடியாதென பெருந்தோட்டக் கம்பனிக்காரர்கள்
கூறுவார்களேயானால் தோட்டங்களை கொடுத்துவிட்டு தாராளமாக வீடு
செல்லலாம்.
நாட்டில் நல்லாட்சி நடைபெறுவதால் ஊடகங்களுக்கு
தற்போது செய்திகள் இல்லை. முன்னர் அப்படி அல்ல. தினந்தோறும்
கடத்தல்கள், கொலைகள். வெள்ளை வேன் கலாசாரம் என அனைத்தும் இருந்தன.
அப்போது செய்தி இருந்தது. தற்போது அவை இல்லை. 1977 ஆம் ஆண்டு
கிளிநொச்சியில் விஞ்ஞான பிரிவிற்கான பல்கலைக்கழக பிரிவு
அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டு 30 வருடங்களுக்கு பின் 2015 ஆம்
ஆண்டே திறக்கப்பட்டது.
பல்கலைக்கழகம் அமைத்து திறக்க 30 வருடங்களுக்கு மேல்
காலம் செல்ல காரணம் யுத்தம் இடம்பெற்று வந்தமையாகும். இதனால் இளைஞர்,
யுவதிகள் பலர் இறந்துள்ளனர். இவ்வாறான நிலைமைகளை முடிவுக்கு கொண்டு வரும்
முகமாகவே ஜனாதிபதியும் பிரதமரும் சகல இன மக்களும் ஒற்றுமையாக வாழும் புதிய
நாட்டை உருவாக்கும் செயலில் ஈடுபட்டுள்ளனர் என்று கூறினார்.
நன்றி- வீரகேசரி
No comments:
Post a Comment