ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா தோட்டத்தில் இன்று காலை 11.30 மணியளவில் குளவி கொட்டியதால் 30 பேர் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
டிக்கோயா கோவில் ஒன்றில் ஆலய பூசை ஒன்றில்; கலந்து கொண்டவர்களே இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
ஆலய யாக பூசையின் போது கிளம்பிய புகை ஆலயத்தின் அருகில் உள்ள மரத்தில் இருந்த குளவி கூட்டுக்கு பரவியதால் குளவி கலைந்து பூசையில் ஈடுப்பட்டிருந்தவர்களின் மீது கொட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதில் சிலருக்கு பெரும் பாதிப்பு இல்லையெனவும் சிலர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாகவும் ஏனைய 15 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. இதில் சிறுகுழந்தையொன்றும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment