தற்போது மலையக பகுதிகளில் நிலவும் வெயிலுடனான காலநிலை காரணமாக ஆறுகளில் நீர் மட்டம் குறைவடைந்து காணப்படுகின்றது. இதனால் மலையகத்தில் காணப்படும் நீர்த்தேக்கங்களிலும் நீர் மட்டம் குறைவடைந்துள்ளது.
மஸ்கெலியா நகருக்கு அண்மையில் அமைந்துள்ள மவுசாக்கலை நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் வழிந்தோடும் நிலையில் இருந்து 40 வீதமாக குறைவடைந்துள்ளதாக லக்ஷபான நீர் மின் உற்பத்தி
நிலையத்தின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மவுசாக்கலை நீர்தேக்கத்தில் மூழ்கிய மஸ்கெலிய பழைய நகரத்தில் காணப்பட்ட கதிரேசன் கோயில் முழுமையக வெளித்தோன்றியுள்ளது. அத்துடன், அப்பகுதியிலிருந்த பௌத்த விகாரை மற்றும் முஸ்லிம் பள்ளிவாசல் போன்றனவும் வெளித்தோன்றியுள்ளன.
இந்த காலநிலை தொடர்ந்து நிலவும் பட்சத்தில் இன்னும் ஒரு வார காலத்தில் கோயிலை சென்றடைவதற்கான பாதை முற்றாக பயன்படுத்தக்கூடிய நிலையை அடையும் போது அதிகளவானவர்கள் இந்த கோயிலை தரிசிப்பதற்கு செல்வது வழமை.
தற்போது சிவனொளிபாதமலை யாத்திரையில் ஈடுபடும் யாத்திரர்களாலும் இந்த பழைய கோயில் பார்வையிடப்படுவதால் இது ஓர் சுற்றுலா தளமாகவும் பயன்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment