சீரற்ற காலநிலையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
மத்திய மாகாணம் நுவரெலியா, லபுக்கலை, நானுஓயா, வட்டவளை போன்ற பல்வேறு பகுதிகளில் பெய்து வருகின்ற அடைமழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது.
இந்த நிலையில் மழையினால் நுவரெலியா மாவட்டத்தில் கடுங்குளிரோடு கூடிய காலநிலை தொடர்வதால் சிறுவர்களும் முதியோர்களும் பெரும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
மேற்படி இப் பகுதிகளில் மேக மூட்டம் காணப்படுவதால் வாகனங்களைச் செலுத்துவதில் சாரதிகள் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment