குத்தகைக்கு விடப்பட்டுள்ள அரச தோட்டங்களை நிர்வகித்த 14 கம்பனிகள் இதுவரை 17 கோடி ரூபா வரை அரசுக்கு வரி செலுத்தவில்லையென பெருந்தோட்டத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இவற்றில் எனவே நாம் அரசாங்கத்துடன் இணைந்திருப்பதன் மூலமே எமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்றார். குருநாகல் தோட்டக் கம்பனி மூன்றரை கோடி ரூபாவை திறைசேரிக்கு செலுத்த வேண்டியுள்ளது. இவ்வரி ஜூன் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்பு செலுத்தப்பட வேண்டுமென தோட்டத்துறை அமைச்சு அரச மற்றும் தனியார் தோட்டக் கம்பனிகளுக்கு அறிவித்துள்ளது. வரி செலுத்தத் தவறியுள்ள 14 கம்பனிகளில் 3 அரச தோட்டங்களும் 11 தனியார் கம்பனித் தோட்டங்களும் அடங்கும். பெருந்தோட்டத்துறை அரசின் நிர்வாகத்தில் இயங்கும் தோட்டக் கம்பனிகள் அரசுக்கு வரியாக 7 கோடி ரூபாவை செலுத்தியுள்ளன. தோட்டக் கம்பனிகள் வரிப்பணத்தை அரசுக்கு செலுத்தவில்லையெனின் அந் நிர்வாகங்களுக்கெதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment