Wednesday, February 10, 2016

திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தருக்கான விண்ணப்ப முடிவுத்திகதி 19 வரை

திவி­நெ­கும அபி­வி­ருத்தி உத்­தி­யோ­கத்­த­ருக்­கான விண்­ணப்ப முடிவு திகதி இம்­மாதம் 19 ஆம் திகதி வரை நீடிக்­கப்­பட்­டுள்­ளது. அதே­வேளை வய­தெல்­லையும் 30 இல் இருந்து 35 வரை உயர்த்­தப்­பட்­டுள்­ளது. எனவே விண்­ணப்­பிக்க தவ­றி­ய­வர்­களும் வய­தெல்லை பிரச்­சி­னைக்­கு­ரி­ய­வர்­களும் இவ்­வாய்ப்பை தவ­றாது பயன்­ப­டுத்­திக்­கொள்­ளு­மாறு ஐக்­கிய தேசிய முன்னணியின் பதுளை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும், தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் உப­த­லை­வ­ரு­மா­கிய அ. அர­விந்­த­குமார் தெரி­வித்­துள்ளார்.
அவர் மேலும் குறிப்­பிட்­டுள்­ள­தா­வது, சுமார் 7000 திவி­நெ­கும அபி­வி­ருத்தி உத்­தி­யோ­கத்தர் நிய­ம­னங்கள் வழங்­கப்­ப­ட­வி­ருக்கும் இவ்­வே­ளையில் மலை­ய­கத்தில் படித்த இளைஞர், யுவ­தி­களை அதி­க­ளவில் உள்­வாங்­கப்­பட வேண்­டு­மென்ற இலக்­கோடு தமிழ் முற்­போக்கு கூட்­டணி செயற்­பட்டு வரு­கின்­றது. எமது கூட்­ட­ணியின் தலை­வரும், அமைச்­ச­ரு­மா­கிய மனோ­க­ணேசன் இவ்­வி­டயம் தொடர்­பாக அமைச்­ச­ர­வை­யிலும் அதிக அழுத்­தத்தை பிர­யோ­கிக்­க­வுள்ளார். தற்­போது இந்­நாட்டில் சுமார் 19 இலட்சம் பேர் சமுர்த்தி நிவா­ர­ணத்தின் பய­னா­ளி­க­ளாக உள்­ளனர்.
ஆனால் துர­திஷ்­ட­வ­ச­மாக மிக­வ­றுமை கோட்­டிற்கு கீழுள்ள மலை­யக மக்­களோ இதில் மூவா­யி­ரத்­திற்கும் குறை­வா­ன­வர்­க­ளா­கவே பய­னா­ளி­க­ளா­க­வுள்­ளனர். எனவே திவி­நெ­கும அபி­வி­ருத்தி உத்­தி­யே­ா­கத்­தர்கள் எம்­ச­மூ­கத்­தி­லி­ருந்து அதி­க­ளவில் நிய­மனம் பெரும் பட்­சத்தில் சமுர்த்தி நிவா­ர­ணத்தை பெறு­ப­வர்­களின் எண்­ணிக்­கை­யையும் உணர்த்­து­வ­தற்கு இந்­நி­ய­மனம் ஏது­வாக அமையும். கீழ் கண்ட தக­மை­களை உடை­ய­வர்கள் தவ­றாது விண்­ணப்­பிக்க வேண்டும்.
க.பொ.த சாதா­ர­ண­தர பரீட்­சையில் தமிழ், கணிதம் அடங்­க­லாக நான்கு பாடங்­களில் திறமைச் சித்­தி­யுடன் ஒரே தட­வையில் ஆறு பாடங்­களில் சித்­தி­ய­டைந்­தி­ருத்தல் வேண்டும். க.பொ.த உயர்­தர பரீட்­சையில் 1 பாடத்­தி­லா­வது சித்­தி­ய­டைந்­தி­ருத்தல் வேண்டும். வய­தெல்லை:- விண்­ணப்­பங்கள் ஏற்­றுக்­கொள்­ளப்­படும் இறுதித் திக­திக்கு 18 வய­துக்கு குறை­யா­மலும் 30 வய­துக்கு மேற்­ப­டா­மலும் இருத்தல் வேண்டும். பரீட்சைக் கட்­டணம் :- ரூபா 500/– (திவி­நெ­கும சமுர்த்தி வங்­கியில் செலுத்­தலாம்)
மேற்­படி பத­விக்கு விண்­ணப்­பிக்கும் விண்­ணப்­ப­தா­ரர்கள் பூர­ணப்­ப­டுத்­தப்­பட்ட விண்­ணப்­ப­ப்ப­டி­வங்­களை பதி­வாளர் ஸ்ரீ ஜெய­வர்­தன விஷ்வ வித்­தி­யா­ல­யம், கங்­கொ­ட­வி­ல, நுகே­கொட என்ற விலா­சத்­திற்கு அனுப்­புதல் வேண்டும்.
விண்­ணப்பம் அனுப்­பப்­படும் கடி­த­வு­றையின் இட­து­பக்க மேல் மூலையில் திவி­நெ­கும அபி­வி­ருத்தி உத்­தி­யோ­கத்தர் சேவைக்கு ஆட்சேர்ப்­ப­தற்­கான திறந்த போட்டிப் பரீட்சை 2016 என தெளிவாக குறிப்­பிட்டு 19.02.2016ஆம் திக­தி­யன்றோ அல்­லது அதற்கு முன்­ப­தா­கவோ கிடைக்­கக்­கூ­டி­ய­வாறு பதி­வுத்­த­பாலில் அனுப்பி வைக்­கப்­படல் வேண்டும்.
விண்­ணப்­பப்­ப­டி­வங்­களை மலை­யக மக்கள் முன்­னணி மற்றும் மலை­யக தொழி­லாளர் முன்­ன­ணியின் அட்டன் தலைமைக் காரி­யா­லயம் உள்­ளிட்ட அனைத்து பிராந்­திய மாவட்ட காரி­யா­ல­யங்­க­ளிலும் மலை­யக மக்கள் முன்­ன­ணியின் அனைத்து உள்­ளூராட்சி சபை­களின் முன்னாள் உறுப்­பி­னர்­கள், அமைப்­பா­ளர்கள் மற்றும் மாவட்டத் தலைவர்கள் ஆகியோர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை இது தொடர்பான மேலதிக தகவல்கள் எமது அனைத்து காரியாலயங்கள் மற்றும் பிரதேச அமைப்பாளர்களிடமிருந்தும், 051-4920300, 051-4020302, 051-2222793, 052-2223052, 055-2229838, 055-4928206, 055-2231526 ஆகிய தொலைபேசி இலக்கங்களோடு தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளவும் முடியும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tuesday, February 9, 2016

புதிய அரசியலமைப்பில் மலையக மக்களுக்கும் இடம்..... ?

புதிதாக அமைக்கப்படவுள்ள அரசியலமைப்பில் மலையகத்தில் இருந்து இடம்பெயர்ந்து வடக்கு மாகாணத்தில் வாழும் மலையக மக்களுக்கான அபிவிருத்தி முதல் அரசியல் வரையான விசேட ஏற்பாடுகள் கொண்டு வரப்படவேண்டுமென அம்மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இன்று கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற புதிய அரசியலமைப்பு சீா்திருத்தம் மீதான மக்கள் கருத்தறியும் அமா்விலேயே மேற்படி கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
45 வீதமான மலையக மக்கள் வாழ்கின்ற போதும் வடக்கு மாகாண சபையில் தங்கள் சார்பாக ஒரு உறுப்பினர் கூட இல்லை. இதுவே இந்த மக்களின் நிலைமைகளுக்கான சிறந்த உதாரணம். எனவே உள்ளுராட்சி சபைகளிலும் கூட வடக்கு வாழ் மலையக மக்களின் விகிதாசாரத்திற்கு ஏற்ற அளவு பிரதிநிதித்துவம் வழங்கப்படுவதில்லை.
கிளிநொச்சி மேற்கில் 16 கிராம சேவையாளர் பிரிவுகளை உள்ளடக்கிய பிரதேசம், ஆணைவிழுந்தான், ஜெயபுரம் கிராம அலுவலர் பிரிவுகள் மற்றும் கிளிநொச்சி கிழக்கில் உழவனூர், புதிய புன்னை நீராவி, தருமபுரம், கல்மடுநகர், மாயவனூர், இயக்கச்சியில் கொற்றாண்டார்குளம், மேற்படி பிரதேசங்களில் மலையகத்திலிருந்து இடம்பெயர்ந்து வந்து மாவட்டத்தின் சனத்தொகையில் ஏறக்குறைய 45 வீதமான மக்கள் வாழ்கின்றனர்.
இவர்கள் தனித்துவமான சமூக, பொருளாதார, கலாசார கட்டமைப்பைக் கொண்டு இருக்கின்றனர். எனினும் இவர்கள் பரந்துபட்ட ஏனைய தமிழ் மக்களின் இனத்துவ அடையாளங்களுடன் வாழ்கின்ற போதும் இவர்களுக்கான தனித்துவம் மிக்க அடிப்படை பிரச்சினைகளும், தேவைகளும் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார நிலைமைகள், குடியிருக்கும் பிரதேசங்களின் அபிவிருத்தி என்பவற்றில் முன்னுரிமை பெறவேண்டிய அளவு நலிவுற்றவர்களாக காணப்படுகின்றனர்.
எனவே இவர்கள் இலங்கையில் வாழும் மலையகத் தமிழர் என்கின்ற தேசிய இனத்துவ அடையாளங்களுக்குள் உள்வாங்கப்படுவதுடன் இவர்களுடைய நலன்களுக்கும் முன்னுரிமை பெறப்படும் வாய்ப்பு உள்ளதால் இந்த தனித்துவமான தேசிய அடையாளத்தை மலையக மக்களுடன் இணைந்து பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பை அமையப்போகும் புதிய அரசியலமைப்பு அங்கீகரிக்க வேண்டும் என கோருகின்றோம்.
அத்துடன் இவர்களுக்கான அரசியல், சமூக, பொருளாதார அந்தஸ்தையும் பிரதிநிதித்துவத்திற்கான இடத்தையும் வழங்குவதற்கு இடமளிக்கப்பட வேண்டும். எனவும் தங்களின யோசனைகளை அவர்கள் இக்குழுவினரிடம் முன்வைத்தனர்.

Monday, February 8, 2016

இந்­திய வம்­சா­வளி மக்கள் "தனித்­து­வ­மான இன­மாக" ஏற்றுக் கொள்­ளப்­பட வேண்டும்

புதிய அர­சி­ய­ல­மைப்பில் இந்­திய வம்­சா­வளி மக்கள் "தனித்­து­வ­மான இன­மாக" ஏற்றுக் கொள்­ளப்­பட வேண்டும் இதற்கு இந்­திய அர­சாங்கம் முழு­மை­யான ஆத­ரவை வழங்க வேண்டும் என இந்­திய வெளியு­றவுத் துறை அமைச்சர் சுஷ்­மா ­சு­வ­ரா­ஜிடம் வலி­யு­றுத்­தி­ய­தாக இலங்கை தொழி­லாளர் காங்­கி­ரஸின் தலைவர் முத்து சிவ­லிங்கம் தெரி­வித்தார். "தோட்டம்" என்ற சொல் கிரா­ம­மாக மாற்­றப்­பட வேண்டும் என்­ப­தையும் வலி­யு­றுத்­தி­ய­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.
இலங்­கைக்கு இரண்டு நாள் உத்­தி­யோ­க­பூர்வ விஜ­யத்தை மேற்­கொண்டு வருகை தந்­தி­ருந்த வெளியு­றவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவ­ரா­ஜை கடந்த சனிக்­கி­ழமை இ.தொ.கா. தூதுக் குழு­வி­னர் சந்­தித்து பேச்­சு­வார்த்­தை­களை நடத்­தினர். இது தொடர்­பாக மேலும் கூறு­கையில் ,
இந்­திய வெளியு­றவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை கடந்த சனிக்­கி­ழமை கொழும்பில் மரி­யா­தையின் நிமித்தம் சந்­தித்தோம். இச் சந்­திப்பில் இ.தொ.கா. செய­லாளர் ஆறு­முகம் தொண்­டமான் உட்­பட முக்­கி­யஸ்­தர்கள் கலந்து கொண்­டனர்.

இதன்­போது புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பாக எமது தரப்பு யோச­னை­களை முன்­வைத்தோம். அதா­வது இலங்­கையில் பல தசாப்­தங்­க­ளாக வாழும் இலங்­கையின் பொரு­ளா­தா­ரத்­திற்கு உயிர் கொடுத்த இந்­திய வம்­சா­வளி மக்­கள் தனித்­து­வ­மான இன­மாக ஏற்றுக் கொள்­ளப்­பட வேண்டும். அதனை புதிய சட்­ட­மாக உள்­ளீர்க்­கப்­பட வேண்டும். இதற்­காக இந்­திய அர­சாங்கம் தமது ஆத­ரவை வழங்க வேண்டும் என்ற எமது பக்க வேண்­டு­கோளை முன்­வைத்தோம்.
அத்­தோடு "தோட்டம்" என்ற சொல் மாற்­றப்­பட்டு மலை­யக பெருந்­தோட்ட தொழி­லா­ளர்கள் வாழும் இடங்கள் "கிராமம்" என அழைக்­கப்­பட வேண்டும். அதற்­காக அர­சாங்கம் விசேட வர்த்­த­மானி அறி­விப்பு வெளியிட வேண்டும். இதற்கு இந்­தியா ஆத­ரவை வழங்க வேண்டும் என்ற விட­யத்­தையும் முன்­வைத்தோம்.

தற்­போது தேயிலை தொழில்­துறை, இறப்பர் தொழில்­துறை என்பன அழிந்து கொண்­டி­ருக்­கின்­றன. ஆனால் மலை­யக மக்கள் தமது குடி­யி­ருப்­புக்­களை விட தயா­ராக இல்லை. இந்­திய அரசின் உத­வியும் எமது காலத்தில் உறு­தி­ய­ளிக்­கப்­பட்ட 4000 வீட்டுத் திட்டம் தொடர்­பிலும் இப் பேச்­சுக்­களின் போது கலந்­து­ரையாடப்­பட்­டது.

அத்­தோடு இந்­தி­யாவின் புல­மைப்­ப­ரி­சில்கள் திட்­டத்தில் அதி­க­ளவு இந்­திய வம்­சா­வளி மக்­களின் பிள்­ளை­க­ளுக்கே அவை வழங்­கப்­பட வேண்டும் என்ற விட­யத்­தையும் எடுத்­து­ரைத்தோம். இந்­திய வம்­சா­வளி மக்கள் தனித்­து­வ­மான இன­மாக ஏற்றுக் கொள்­ளப்­பட வேண்­டி­ய­தோடு, கல்வி, சுகா­தாரம், அடிப்­படை வச­திகள் உட்­பட முக்­கிய விட­யங்­களில் எமது மக்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­பட வேண்டும்.

இவ்வாறான விடயங்களை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜிடம் முன்­வைத்து இதற்கு இந்­தியா ஆதரவை வழங்க வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்தோம் என்ர்.

மலை­ய­கத்­த­வர்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கும் விரைவில் நிரந்­தர தீர்வு

இன­வா­தத்தை வேர­றுத்து அமைதிச் சூழலை மேம்­ப­டுத்த நல்­லாட்சி அர­சாங்கம் முனைப்­புடன் செயற்­பட்டு வரு­கின்­றது. தூர­நோக்­குடன் செயற்­படும் நல்­லாட்சி அர­சாங்­கத்தின் செயற்­பா­டு­களால் நாட்டு மக்கள் பெரிதும் நன்­மை­ய­டைவர். மேலும் மலை­ய­கத்­த­வர்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கும் விரைவில் நிரந்­தர தீர்வு கிடைக்கும் என்ற நம்­பிக்கை எமக்­குள்­ளது என்று ம.ம.மு  செய­லாளர் நாயகம் ஏ.லோறன்ஸ் தெரி­வித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரி­விக்­கையில், நல்­லாட்­சி அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்து ஒரு வருட காலமே நடந்து முடிந்­துள்­ளது. இந்­நி­லையில் இந்த அர­சாங்கம் தொடர்பில் பலரும் பல்­வேறு விமர்­ச­னங்­க­ளையும் முன்­வைத்து வரு­கின்­றனர். இத்­த­கைய விமர்­ச­னங்­களின் நம்­ப­கத்­தன்மை தொடர்பில் நாம் சிந்­திக்க வேண்­டி­யுள்­ளது. கடந்­த­கால அரசாங்கம் இனவாதத்திற்கு துணைபோன ஒரு அர­சாங்­க­மாக இருந்­தது. நாட்டு மக்கள் இன­வாத சிந்­த­னைக்குள் மூழ்­க­டிக்­கப்­பட்­டி­ருந்­தனர். தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்­ப­டு­வதை கூட அனு­ம­திக்­காத நிலையில் சில இனவாதிகள் உள்­ளனர். எனினும் புதிய அர­சாங்கம் தமிழ்மொழிக்கு உரிய அந்­தஸ்­தினை வழங்­கு­வ­தற்கு உறுதி பூண்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்க விட­ய­மாகும்.

19 ஆவது திருத்­தத்தின் ஊடாக இலங்­கையில் தற்­போது பல்­வேறு ஆணைக்­கு­ழுக்கள் நிறு­வப்­பட்­டுள்­ளன. இத்­த­கைய நட­வ­டிக்­கைகள் நீண்­ட­கால இலக்­கி­னைக் கொண்­ட­ன­வாக விளங்­கு­கின்­றன. தூர­நோக்­குடன் நல்­லாட்சி அர­சாங்கம் செயற்­ப­டு­கின்­றது. இதனால் நாட்டு மக்கள் பெரிதும் நன்­மை­ய­டைவர். நல்­லாட்சி அர­சாங்­கத்தின் ஊடாக நாட்டில் வாழும் அனைத்து இன மக்­களும் ஒரு தாயின் மக்­க­ளாக கை­கோர்க்கும் நிலை உரு­வாகும். மேலும் மலை­யக மக்கள் உள்­ளிட்ட சகல இன மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கும் நிரந்­தரத் தீர்வு கிடைக்கும் என்ற நம்­பிக்­கையும் எமக்கு நிறை­யவே உள்­ளது. விலை­வாசி குறைப்பு போன்ற நட­வ­டிக்­கைகள் உட­ன­டி­யாக பலனைத் தரும். எனினும் தூர­நோக்­குடன் செயற்­படும் போது அதன் பலன்கள் உட­ன­டி­யாக வெளித்­தெ­ரி­வ­தில்லை என்­ப­தையும் விளங்கிக் கொள்­ளுதல் வேண்டும். நீண்ட காலப்­போக்கில் நன்­மைகள் வெளித்­தெ­ரியும். நல்­லாட்சி அர­சாங்­கத்தை விமர்­சிப்­ப­வர்கள் அரசின் செயற்­பா­டுகள் தொடர்­பாக மிகவும் கூர்ந்து கவனம் செலுத்­துதல் வேண்டும். எழுந்­த­மா­ன­மாக கருத்­து­களை தெரி­விப்­பது பிழை­யா­ன­தாகும். நாட்டில் இப்­போது இன­வாத சூழல் மெது­மெ­து­வாக குறைந்து கொண்டு வரு­கின்­றது.

இன­வாதம் பேசும் ஒரு குழு­வினர் இன்னும் அர­சி­யலில் இருந்து வரு­கின்­றனர். இவர்கள் மக்­களின் நலன்­களை கிஞ்­சித்தும் சிந்­திக்­காத சுய­ந­ல­வா­தி­க­ளாவர். ஆட்சி மாற்­றத்தை ஏற்­ப­டுத்தி அர­சி­யலில் ஆதிக்கம் செலுத்­து­வதன் ஊடாக தன் குடும்­பத்­தையும் தன்னைச் சார்ந்­தோ­ரையும் வாழ­வைப்­பதே இவர்­களின் நோக்­க­மாக உள்­ளது. இத்­த­கை­யோரின் வழியில் செல்­வ­தற்கு நாட்டு மக்கள் இனியும் தயா­ராக இல்லை. வர­லாறு கற்­றுத்­தந்த பாடங்­களை அடிப்­ப­டை­யாக கொண்டு இன­வா­திகள் தம்மை திருத்திக் கொள்­வது மிக மிக அவ­சி­ய­மாகும். நாட்டின் ஒரு­மைப்­பாட்­டிற்கு இன­வா­திகள் குந்­த­க­மாக செயற்­ப­டு­வ­தனை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

Tuesday, February 2, 2016

பெருந்தோட்டங்களையும் அரசாங்கம் கவனிக்க வேண்டும்

அரசாங்கம், பெருந்தோட்டங்கள் தொடர்பில் அதிகூடிய கவனம் செலுத்த வேண்டும் என்பதுடன் தோட்டத் தொழிலாளர்களையும் தோட்டங்களையும் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்' என தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. 

இது தொடர்பில் கூறியுள்ளதாவது, தோட்டத் தொழிலாளர்கள், சம்பள உயர்வு கோரிக்கையை முன்வைத்ததை அடுத்து, தேயிலைத் தோட்டங்களை தொழில்சார்  கடமைகளுக்கு மட்டும் தொழிலாளர்களுக்கு பிரித்துக்கொடுப்பதற்கு சில தோட்டக் கம்பனிகள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. பலாங்கொடை பிளான்டேசன் கம்பனியின் பொறுப்பிலுள்ள பதுளை மாவட்டத்தின் பல தோட்டங்களில், தேயிலை உற்பத்தி குறைந்த தேயிலை மலைகளை, தொழிலாளர்;களுக்கு பிரித்துக் கொடுப்பதற்கான முன்னெடுப்புகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.   தேயிலைத் தோட்டங்களில் தேயிலை தளிர்களை கொய்யவும் இறப்பர் தோட்டங்களில் இறப்பர் பால் எடுத்தல் மட்டுமே தொழிலாக இருந்து வருகின்றன. 

இதனால், தோட்ட உத்தியோகத்தர்கள் ஒரு சிலரை மட்டும் வைத்துக்கொண்டு, பெரும்பாலான உத்தியோகத்தர்களை கடமைகளிலிருந்து நீக்க முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன. தொழிலாளர்களுக்கு சேமநலன் திட்டங்கள் எதுவும் தோட்ட நிர்வாகத்தினால் முன்னெடுக்கப்படுவதில்லை. பெரும்பாலான தேயிலைத் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. தோட்டங்களில் உற்பத்தி குறைந்த தேயிலை மலைகளை தொழிலாளர்களுக்கு பிரித்துக் கொடுக்கும் நிலை அமுல்படுத்தப்படுமேயானால், தோட்டத் தொழிலாளர்களுக்கு தொழில் உத்தரவாதமோ அல்லது தொழில் பாதுகாப்போ இல்லாததோடு, ஆரோக்கியமற்ற சூழல் உருவாகும். 

அத்துடன், தொழிலாளர்களுக்கு செலுத்த வேண்டிய ஊழியர் சேமலாபநிதி, ஊழியர் நம்பிக்கை நிதியம், பிரசவ சகாயநிதி, சேவைகாலப் பணம் போன்ற சட்டப்பூர்வ கொடுப்பனவுகள் எதுவும் வழங்கப்பட மாட்டாது. இப்படிப்பட்ட உற்பத்தி குறைந்த தேயிலை மலைகளில் தொழில் செய்யும் வேளையில் விபத்துகள் ஏற்பட்டால், விபத்துக்குள்ளானவரை வைத்தியசாலைக்கு  எடுத்துச்செல்ல வாகன வசதிகளும் வழங்கப்படமாட்டாது. அத்துடன், நட்ட ஈடுகளும் கிடைக்காது. இந்நிலை நடைமுறைப்படுத்தப்படின், தோட்டத் தொழிலாளர்கள் பெரும் பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டி வருவதுடன் வாழ்வாதாரங்களில் பெரும் பாதிப்புகளை அடைய வேண்டி ஏற்படும். 

பெரும்பாலான தோட்டங்களில், ஆண் தொழிலாளர்கள்  தோட்டங்களை விட்டு வெளியேறி வெளியிடங்களில் தொழில்புரிந்து வருகின்றனர். தொழிலின் நிமித்தம் வெளியிடங்களுக்கு செல்ல முடியாத பெண்கள், தோட்டங்களை நம்பியே வாழ்ந்து வருகின்றனர். எனவே, அரசாங்கம் இவ்விடயங்களை கருத்திற்கொள்ள வேண்டும்' என தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன 

Thursday, January 28, 2016

மலையக மக்களை அடையாளப்படுத்துவதற்கு தவறியதால் விளைவுகளுக்கு முகம் கொடுக்கும் நிலை

மலை­யக மக்கள் உரி­ய­வாறு அடை­யா­ளப்­ப­டுத்­த­ப்ப­டா­மையின் கார­ண­மாக பாத­க­மான விளை­வு­க­ளுக்கு முகம் கொடுக்க வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. இந்­நி­லையில் இந்­தி­ய­வம்­சா­வளி மலை­யக தமி­ழர்கள் என்ற பொது வரை­ய­றையின் மூலம் மலை­யக மக்கள் அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட வேண்டும்.
தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் நிபுணர் குழு­விலும் இவ்­வி­டயம் கலந்­து­ரை­யா­டப்­பட்­டுள்­ளது என்று மலை­யக மக்கள் முன்­ன­ணியின் செய­லாளர் நாயகம் ஏ.லோறன்ஸ் தெரி­வித்தார்.
அதி­காரப் பகிர்வு மற்றும் அர­சியல் யாப்பு சீர்­தி­ருத்­தத்­திற்­கான தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் முத­லா­வது அமர்வு கடந்த செவ்­வாய்க்­கி­ழமை மலை­யக புதிய கிராமம், உட்­கட்­ட­மைப்பு மற்றும் சமூக அபி­வி­ருத்தி அமைச்சில் இடம்­பெற்­றது.
நிபுணர் குழுவின் தலைவர் பெ.முத்­து­லிங்கம் தலை­மையில் இடம்­பெற்ற இவ்­வ­மர்வு குறித்து கருத்து வின­வி­ய­போதே லோறன்ஸ் இவ்­வாறு தெரி­வித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரி­விக்­கையில்,
அர­சியல் யாப்பு சீர்­தி­ருத்த நட­வ­டிக்­கைகள் தற்­போது இடம்­பெற்று வரு­கின்ற நிலையில் மலை­யக மக்கள் விழிப்­புடன் செயற்­பட தேவை காணப்­ப­டு­கின்­றது. சீர்­தி­ருத்த விட­யத்தில் எம்­ம­வர்கள் அச­மந்தப் போக்­குடன் நடந்து கொண்டால் பின்னால் வருத்­தப்­பட வேண்­டிய நிலைமை உரு­வா­வதை தவிர்க்க முடி­யாது.
அர­சியல் யாப்பு சீர்­தி­ருத்த விட­யத்தில் மலை­யகம் சார்ந்த பல்­வேறு கருத்­துக்­க­ளையும் முன்­வைப்­ப­தற்கு தனி­ம­னி­தர்­களும் குழுக்­களும் தயா­ராகி வரு­கின்­றன. இந்­நி­லையில் இது தொடர்பில் ஆராயும் பொருட்டு தமிழ் முற்­போக்கு கூட்­டணி நிபுணர் குழு­வினை ஏற்­ப­டுத்தி இருக்­கின்­றது. இக்­கு­ழுவின் முத­லா­வது அமர்வு செவ்­வாய்க்­கி­ழமை நிறைவு பெற்­றுள்ள நிலையில் நாங்கள் பல்­வேறு விட­யங்கள் குறித்தும் ஆராய்ந்­தி­ருக்­கின்றோம்.
மலை­யக மக்கள் இந்­நாட்டின் மிகப்­பெரும் சக்­திகள். இவர்­க­ளது அடை­யாளம் உரி­ய­வாறு உறு­திப்­ப­டுத்­தப்­பட வேண்டும். இல்­லா­த­பட்­சத்தில் பல்­வேறு பாதக விளை­வுகள் ஏற்­ப­டு­வ­தனை தவிர்க்க முடி­யாது. மலை­யக மக்­களை அடை­யா­ளப்­ப­டுத்­து­வதில் குழப்­ப­நிலை காணப்­ப­டு­கின்­றது. மலை­யக மக்கள், இந்­திய வம்­சா­வளி தமி­ழர்கள் என்­றெல்லாம் இவர்கள் அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றார்கள். இவை மாற்­றப்­பட்டு ஒரே பெயரில் மலை­யக மக்கள் அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட வேண்டும். மலை­யக மக்­களின் உண்­மை­யான சனத்­தொகை 4.3 சத­வீதம் என்று சில ஆவ­ணங்கள் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளன.
எனினும் மலை­யக மக்­களின் தொகை ஏழு சத­வீ­த­மாக உள்­ளது என்­பதே உண்­மை­யாகும். இத்­த­கைய நிலை­மைகள் குள­று­ப­டி­யினை தோற்­று­விக்கும். எனவே மலை­யக மக்­களை பொது­வான வரை­ய­றையின் கீழ் இந்­திய வம்­சா­வளி மலை­யக தமி­ழர்கள் என்­ற­வாறு அடை­யா­ளப்­ப­டுத்­தப்­ப­டு­வது பொருத்­த­மாகும்.
இந்த அடை­யா­ளத்தின் ஊடாக நாம் எமது பிர­தி­நி­தித்­து­வத்தை உறு­திப்­ப­டுத்திக் கொள்­வ­தோடு மேலும் பல நன்­மை­க­ளையும் பெற்­றுக்­கொள்ளக் கூடி­ய­தாக இருக்கும்.
இலங்­கையில் பல்­லின மக்கள் வாழு­கின்­றார்கள். அவர்­களின் உரி­மைகள் யாப்பு ரீதி­யாக உறு­திப்­ப­டுத்­தப்­பட வேண்டும். பாரா­ளு­மன்­றத்தில் மேல்­சபை, கீழ்­சபை என்று இரண்டு சபைகள் உரு­வாக்­கப்­ப­டுதல் வேண்டும் என்ற கருத்தும் நிபுணர் குழுவின் அமர்வில் முன்­வைக்­கப்­பட்­டது. இலங்கை தொழி­லாளர் காங்­கி­ரஸும் நிபு­ணர்கள் குழு ஒன்­றினை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. எனவே கருத்­துகள் ஆரா­யப்­பட்டு பொது­வான இணக்­கப்­பா­டுகள் எட்டப்படுவதும் வரவேற்கத்தக்கதாகும். பல்வேறு தரப்பினரும் முன்மொழிவுகளை அரசியல் யாப்பு சீர்த்திருத்தக் குழுவிடம் முன்வைப்பது அவசியமாகும். ஒத்த கருத்துகளை முன்வைப்பதும் மிகவும் முக்கியமாகும். தமிழ் முற்போக்கு கூட்டணியின் நிபுணர் குழுவில் எதிர்வரும் காலங்களில் மேலும் பல விடயங்கள் இது தொடர்பில் ஆராயப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும் என்றார்.

இந்திய வம்சாவளி தமிழ் மக்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும்

புதிய அர­சியல் யாப்பில் இந்­திய வம்­சா­வளி தமிழர் இருப்­பையும் உரி­மை­களையும் பாது­காப்­பது பற்­றிய ஆலோ­ச­னை­களை முன்­மொ­ழி­வ­தற்கு ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்பின் நுவ­ரெ­லியா மாவட்ட அபி­வி­ருத்தி குழுத் தலை­வரும் இலங்கைத் தொழி­லாளர் காங்­கிரஸ் செய­லா­ள­ரு­மான ஆறு­முகம் தொண்­டமான் தலை­மையில் நிய­மிக்­கப்பட்ட நிபுணர் குழுவின் புதிய அர­சி­ய­ல­மைப்­பு பற்­றிய குழு நிலை விவா­தங்கள் இடம்­பெற்­றன.
இந்த நிகழ்வு கடந்த திங்­கட்­கி­ழமை வெள்­ள­வத்தை குளோபல் டவர் ஹோட்­டலில் இ.தொ.கா வின் தலைவர் முத்து சிவ­லிங்கம், நுவ­ரெ­லியா மாவட்ட அபி­வி­ருத்தி குழுத் தலை­வரும் இலங்கைத் தொழி­லாளர் காங்­கிரஸ் செய­லா­ள­ரு­மான ஆறு­முகம் தொண்­டமான், கோபியோ அமைப்பின் ஸ்தாபகத் தலைவர், மாகாண சபை உறுப்­பினர் சதா­சிவம், முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ராதா­கி­ருஷ்ணன் உள்­ளிட்­டோரின் பங்­கேற்­புடன் இடம்­பெற்­றது.
இதன்­போது உரை­யாற்­றிய கோபியோ அமைப்பின் ஸ்தாபகத் தலைவர் பி.பி.தேவராஜ் இந்­திய வம்­சா­வளி தமிழ் மக்­களின் இருப்­பையும் உரி­மை­களைப் பாது­காப்­ப­தற்கு மாவட்ட சுயாட்சி சபை­யொன்று அவ­சியம் என தெரி­வித்தார். இந்­திய வம்­சா­வளி தமி­ழர்­க­ளுக்­கான பிரத்­தி­யேக பொறி­மு­றை­யொன்றை உரு­வாக்க வேண்டும் என்றும் அவர் குறிப்­பிட்டார்.
அவர் மேலும் தெரி­விக்­கையில், புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கத்­திற்­கான தயார்­ப­டுத்­தல்­களை நல்­லாட்சி அர­சாங்கம் மேற்­கொண்டு வரு­கின்­றது. காலம்­கா­ல­மாக இந்­திய வம்­சா­வளி மக்கள் அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்க யோச­னை­களின் போது புறக்­க­ணிக்­கப்­பட்­டுள்­ளனர் வர­லாற்றை நோக்கும் போது அது புரி­கி­றது.
சோல்­பரி அர­சி­ய­ல­மைப்பு முதல் 2 ஆம் குடி­ய­ரசு யாப்­பு­வரை இந்­திய வம்­சா­வ­ளி­யி­ன­ருக்­கான பிரத்­தி­யேக சொற்­பதம் கூட பாவிக்­கப்­ப­ட­வில்லை.பல்­லின மற்றும் பல் கலா­சார நாடு என அடை­யா­ளப்­ப­டுத்தும் இலங்கை தமிழ் மக்­களை மாத்­தி­ரமே சிறு­பான்­மை­யாக கருத்­திற்­கொண்­டுள்­ளது என்­பதே உண்மை. இந்­திய வம்­சா­வ­ளி­யினர் தமக்­கான தனி­யான அடை­யா­ளங்­க­ளையும் வரலாற்றுப் பாரம்­ப­ரி­யங்­க­ளையும் பேணி வந்­துள்­ளனர் சோல்­பரி யாப்பில் சிறு­பான்­மையின் காப்­பீ­டாக 29 (2) சரத்து அமைந்­துள்­ளது. இதனைத் தழுவி 1972 யாப்பில் அடிப்­படை உரி­மைகள் குறிப்­பி­டப்­பட்­டாலும் அவை இந்­திய வம்­சா­வ­ளி­யி­ன­ருக்கு எந்­த­ளவு பய­னு­டை­யது என்­பதை கடந்த கால அனு­பவங்­களில் உணர முடிந்­தது.
13 ஆம் திருத்தத்தில் மாகா­ண­சபை அதி­கா­ரங்கள் கொண்­டு­வரப்­பட்­டாலும் நுவ­ரெ­லி­யாவில் பெரும்­பான்­மை­யாக வாழும் இந்­திய வம்­சா­வளி தமி­ழர்­களின் கருத்துச் சுதந்­தி­ரத்தை பயன்­ப­டுத்த முடிந்­ததா என்­பதும் கேள்­விக்­கு­றியே. தற்­போ­தைய அர­சி­ய­ல­மைப்பில் மலை­யகத் தமி­ழர்கள் உள்­வாங்­கப்­பட்­டாலும் இந்­தியத் தமி­ழர்­களின் உரி­மைகள் பாது­காக்­கப்­ப­ட­வேண்டும் என்று பிரத்­தி­யே­க­மான வசனம் பாவிக்­கப்பட்டால் சாலச் சிறந்­தது.
தந்தை செல்­வா­வினால் வரை­ய­றுக்கப்­பட்ட வடக்­க­ு, கி­ழக்கு தமி­ழர்கள் மற்றும் சிங்­க­ள­வர்கள் என்ற இரு பிரி­வுகள் மாத்­திரம் உள்­ளதால் வடக்­கு, கி­ழக்­குக்கு வெளியில் வாழும் தமிழ் மக்­க­ளுக்கு எவ்­வாறு அதி­காரம் பகிர்ந்­த­ளிக்­கப்­படும் என்ற கேள்­விக்­குறி எழு­ந்­துள்­ளது. அதனால் இந்­திய வம்­சா­வ­ளி­யினர் என்ற தனி அடை­யாளம் இருக்­கு­மாயின் வர­வேற்­கத்­தக்­கது.
இதன்­படி 1996 ஆம் ஆண்டு தென்­னா­பி­ரிக்க புதிய அர­சி­யல­மைப்பு சிறு­பான்­மை­யி­ன­ருக்­கான மக்­களின் நல­னுக்­காக வரை­யப்­பட்ட முதன்­மை­யான யாப்­பா­கின்­றது. குறித்த யாப்பில் சிறு­பான்­மை­யி­ன­ருக்­கான சுதந்­திரம் அர­சியல் பிர­தி­நி­தித்­துவம் அர­சியல் உரி­மைகள் பாது­காக்கப்­ப­டு­வ­தற்­கென விட­யங்கள் உள்­ளீர்க்­கப்­பட்­டுள்­ளன.
தென்­னா­பி­ரிக்க யாப்பின் மாதி­ரியை உள்­வா­ங­்கி இலங்­கையின் புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கப்­பட வேண்டும் என்­பதே எமது கோரிக்­கை­யாகும் மேலும் அந்த அர­சியல் யாப்பில் உள்ள அடிப்­படை உரிமை பற்­றிய விட­யங்­களும் அவ­சியம் உள்­வாங்­கப்­பட வேண்டும். அதேபோல் கணி­ச­மா­ன அளவு வாழும் இந்­திய வம்­சா­வளி தமிழ் மக்­களின் எமக்கு நியாயம் தரும் வகை­யி­லான தேர்தல் முறை­மை­யொன்­றினை உரு­வாக்­கப்­பட வேண்டும்.
வட­ப­கு­தியை கருத்­திற்­கொண்டு மாத்­திரம் முன்­னெ­டுக்­கப்­படும் அதி­கா­ரப்­ப­கிர்வு இனி­வரும் காலங்­களில் இந்­திய வம்­சா­வ­ளி­யி­ன­ரையும் கருத்திற் கொண்­ட­தாக அமைய வேண்டும்.
இந்­திய வம்­சா­வளி­யி­னரின் தனிப்­பட்ட கலா­சாரப் பின்­ன­ணியும் பாது­காக்­கப்­படும் வகையில் அரசியலமைப்பு வரையப்பட வேண்டும் என்றார்.