Thursday, March 31, 2016

மலையக மக்கள் இலங்கைத் தமிழரா?

மலையக மக்களின் தீர்க்கமான தேசிய இனத்துவ அடையாளத்திற்கான தேவை குறித்த சில குறிப்புகள் 

தோட்டத் தொழிலாளர் சமூகத்தை மையமாகக் கொண்ட மலையக மக்களின் தேசிய இனத்துவ அடையாளம் குறித்து மீண்டும் பல கருத்துக்கள் முன் வைக்கப்படுகின்றன. இவை பெரும்பாலும் அம்மக்களை நோக்கி அனுதாப அணுகுமுறையில் முன்மொழியப்படுபவையாகும். தமிழர்கள் என்றும் இலங்கையர் என்ற வகையிலான வேர் கழன்ற அடையாளங்களாகவே இவை உள்ளன. ஆனால் இதற்கு மாறாக இலங்கையின் கூட்டு மொத்த சட்ட மற்றும் ஆவண ரீதியிலான தேசிய இனவாரியான அடையாள பகுப்புக்களுக்கிடையே தமது உறுதியான இருப்பும் அடையாளமும் என்ன என்பது குறித்த தெளிவு மலையக மக்களிடையே இருப்பது இன்று அவசியமாகிறது. 

01. சட்ட ஆவண ரீதியில் இலங்கை தமிழருக்கான வரைவிலக்கணமும், மலையக மக்களில் ஒரு பிரிவினர் இலங்கை தமிழர் என அடையாளப்படுத்தப்படுவதற்கான சமூக உளவியல் காரணிகளும்

02. நாம் இந்திய வம்சாவளி  தமிழரா? மலையக மக்களா? 21ம் நூற்றாண்டில் நமது தீர்க்கமான தேசிய இனத்தவ அடையாளம் என்ன?
சட்ட ஆவண வரைவிலக்கணமும்  இலங்கை தமிழராக அடையாளப்படுத்தும் சமூக உளவியல் தாக்கங்களும்

1823ஆம் ஆண்டு கண்டியை அடுத்து சின்னப்பட்டியில் குடியேற்றப்பட்;ட தென்னிந்திய கிராமியக் குடும்பங்களின் இருப்பை ஒரு வரலாற்றின் தொடக்க எல்லையாகக் கொண்டால் இலங்கையில் மலையக மக்களின் வரலாறு மூன்று நூற்றாண்டுகளை தொட்டு நிற்கிளது. இவ்வளவு நீண்ட பாரம்பரியம் கொண்ட மக்கள் தமது தேசிய இனத்துவ அடையாளம் குறித்து நிச்சயமற்று இருப்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. நிவர்த்திக்கப்பட வேண்டியதுமாகும். 

1901ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட முதல் சனத்தொகை கணக்கொடுப்பிலேயே (யேவழையெட ஊநளெரள) பிரதான தேசிய இனங்கள் வரையறுக்கப்படுகின்றன. அவை சிங்களம், இலங்கைத்தமிழர், இந்தியத்தமிழர், இந்திய சோனகர், இலங்கை சோனகர் என்பவையாகும். சுமகால 2011ம் ஆண்டு கணக்கெடுப்பு பின்வரும் பிரிவுகளை உள்வாங்குகிறது. அவை சிங்களவர், இலங்கைத் தமிழர் இந்திய வம்சாவளித்தமிழர், முஸ்லீம்கள், பறங்கியர், மலே கொழும்பு செட்ச ஏனையோர் என்பவையாகும். 

2001ஆம் ஆண்டு மற்றும் 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்புக்களில் கவனிக்க வேண்டிய பிரதான அம்சம் கணிசமான இந்திய வம்சாவளித்தமிழர், இலங்கைத் தமிழர் என்ற பிரிவிற்குள் பதிவாகி உள்ளமையாகும். இதன் காரணமாக ஒரு கட்டத்தில் 12 சதவீதமாக இருந்த இம் மக்கள் இன்று இலங்கையின் மொத்த சனத்தொகையில் 4.2 வீதம் என்ற மட்டத்துக்கு இறங்கி வந்துள்ளார்கள். 
இனத்துவ விகிதாசாரத்தின் அடிப்படையில் தேசிய வளப்பகிர்வு உட்பட பல முக்கிய வாழ்வியல் அரசியல் அம்சங்கள் தீர்மானிக்கப்படுகின்ற ஒரு நாட்டில் இனத்துவ விகிதாசாரத்திலான பாரிய வீழ்;ச்சி பல பாரதூரமான எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும். மேலும் இந்த பாதிப்பு சர்வதேச மட்டத்திலும் நீடிக்கும். ஐக்கிய நாடுகள் சபையின் இணை அமைப்பாகிய ருNர்ஊசு அடையாளப்படுத்தியுள்ள 2050ம் ஆண்டளவில் உலகில் தமது இனத்துவ இருப்பினை இழக்கும் இனங்களின் பட்டியலில் இந்திய வம்சாவளி சமூகமும் இடம்பெறுகின்றது. 

1981ஆம் ஆண்டில் கணக்கெடுப்பில் 8,18.700 ஆக இருந்த இந்திய வம்சாவளி மக்கள் 2011ஆம் ஆண்டில் (30 வருடங்களின் பின்னர்) 8,32.300 ஆகவே பெருகியுள்ளர். 30வருடங்களில் 13,600 பேரே பிறந்துள்ளனர் என்றால் ஆச்சரியம்தான். இதற்கு என்ன காரணம்? இலங்கை தமிழர் என்று தம்மை பெரும்பாலானவர்கள் பதிவு செய்து கொண்டமையாகும். - (கதிர் குறிஞ்சி, வீரகேசரி வார­ வெளியீடு 24-3-2013)

இப்படியே போனால் அடுத்த 2021ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் இந்திய வம்சாவளித் தமிழர் என்ற ஒதுக்கீட்டு வரையறையின் கீழும், இந்த இனத்திலும் எவருமே புதிதாக பிறந்திருக்கமாட்டார்கள் என்ற நிலையையே நிதர்சனம் கொள்ளவேண்டியிருக்கும்.
இவ்வாறு சனத்தொகை விகிதாசாரக் குறைப்பினால் ஏற்படும் எதிர்மறை விளைவுகள் குறித்து ஒரு பட்டி­யலே இடலாம். அவற்றுள் மிக முக்கியமானவை எனக் கருதத்தக்கவை:

இன விகிதாசார அடிப்படையில் வழங்கப்படும் வேலைவாய்ப்புகள் சுருங்குதல்.(எதிர்காலத்தில் இதனை நடைமுறைப்படுத்த மலையக தமிழ் தலைமை­களின் அழுத்தம் அவசியம்)
இன விகிதாசார அடிப்படையிலான அரச அபிவிருத்தி, வள உள்ளீடுகளில் பாரிய வெட்டு விழுதல்.

இதே அடிப்படையிலான பல்கலைக்கழகங்களில் மருத்துவ, பொருளியல், சட்டம், கலையியல் போன்ற துறைகளுக்கான அனுமதி மட்டம் குறைக்கப்படல். (இக்குறைபாட்டைத் தீர்க்க மலையக தமிழ் தலைமைகளின் அழுத்தம் அவசியம்)
உள்ளூராட்சி மன்றங்கள், மாகாண சபைகள் மற்றும் பாராளு­மன்ற பிரதிநிதித்துவம் வெகுவாக பலவீனப்படல்.

சர்வதேச மட்டத்தில் மலையக மக்களின் இருப்பும் முக்கியத்துவமும் கிரமமாக சயனித்து போகுதல்.

ஒட்டுமொத்தத்தில் சுய தேசிய இன அடையாள மறுப்பு போக்கு இம்மக்­களின் இளம் தலைமுறையினர் மீதும், எதிர்கால சந்ததியினர் மீதும் பாரதூரமான பாதிப்புக்களுக்கே வழிவகுக்கும்.

மலையக மக்கள் தம்மை இலங்கைத் தமிழர் என ஆவண மற்றும் அமைப்பு ரீதியாக அடையாளப்படுத்தலாமா என்ற கேள்விக்கு முதலில், இலங்கைத் தமிழர் என்ற வரைவிலக்கணத்திற்குள் உள்வாங்கப்படக்கூடியவர்கள் யார்? அதற்கான தகுதிகள் எவை? அத்தகைய தகுதிகள் இந்திய வம்சாவளி தமிழர் என்ற பிரிவினருக்கு உண்டா? ஆகிய கேள்விகளுக்கு விடையளிக்கப்பட வேண்டும்.
‘இலங்கைத் தமிழர்’ என்று சட்டஆவண ரீதியாக அடையாளப்படுத்த பின்வரும் தகைமைகள் இன்றியமையாதன ஆகின்றன:

1. இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களை பூர்வீகமாகவும் பிறப்பிடமாகவும் கொண்டவர்களையும் அவர்களது பரம்பரையினரும் இவர்கள் சமகாலத்தில் வடகிழக்கிலோ, இலங்கையின் ஏனைய பகுதிகளிலோ அல்லது வெளிநாடுகளிலோ நிரந்தரமாகவோ தற்காலிகமாகவோ குடியிருப்பவர்களாகவும் இருக்கக்கூடும்.

2. வட பிராந்தியத்தை பிறப்பிடமாக அல்லது பூர்வீகமாகக் கொண்டவர்கள் இருப்பின் அவர்கள் சிவில் விவகாரங்களை பொறுத்தவரை தேசவழமை சட்டம் மற்றும் நடைமுறையின் கீழ் வருபவர்களாக இருப்பர். 

3. கிழக்குப் பிராந்தியத்தை பிறப்பிடமாக அல்லது பூர்வீகமாக கொண்டவர்களாக இருப்பின் சிவில் விவகாரங்களைப் பொறுத்தவரையில் பெரும்பாலும் மரபுவழிச்சட்டம் அல்லது முக்குவர் சட்டம் மற்றும்   நடைமுறைகளின் கீழ் வருபவர்களாக இருப்பர். மேற்குறித்த பிராந்திய அடையாளங்கள் மற்றும் சிவில் விவகாரங்களுக்கான பிரத்தியேக சட்ட அம்சங்களோடு மேலும் நடைமுறை பிரயோககங்கள் . இவை எவற்றிலும் இந்திய வம்சாவளித்தமிழர் எவரும் உள்வாங்கப்படமாட்டார்கள்.

எனவே வெறுமனே உணர்வு பூர்வமாகவும் சொந்த விருப்புக்களை சார்ந்தும் இலங்கைத் தமிழர்என தம்மை அர்த்தப்படுத்துவதும் அடையாளப்படுத்துவதும் 

எனவே வெறுமனே உணர்வுபூர்வமாகவும் சொந்த விருப்புகளைச் சார்ந்தும் இலங்கைத் தமிழர் என தம்மை அர்த்தப்படுத்துவதும் அடையாளப்படுத்துவதும் எந்த விதத்­திலும் ஏற்புடைய ஒன்றல்ல. இது இலங்கையில் பிறிதொரு தனித்துவமான தேசிய இனத்தின் அடையாளத்தோடு தம்மை வலிந்து இணைத்துக் கொள்வதற்கு ஒப்பானது என்பதோடு பகுத்தறிவிற்கு அப்பாற்பட்ட ஒரு அணுகுமுறையுமாகும். இனி, மேற்குறித்த யதார்த்தங்களின் பின்னணியில் மலையக மக்­ ளின் ஒரு பகுதியினர் தம்மை இலங்கை தமிழர் என அடையாளப்படுத்தி ஆவணங்களிலும் அவ்வாறு பதிவு செய்வதற்கான சமூகஉளவியல் காரணங்கள் குறித்து நோக்குவதும் பயனுள்ளதாக இருக்கும். யதார்த்தரீதியாகவும், துரதிஷ்டவசமாக இலங்கைத் தமிழர் என கூறுவோரில் கணிசமானவர்களைப் பொறுத்தவரையில் இதற்கு பகைப்புலமாக இருப்பது நாம் இலங்கையர் என்ற தேசிய உணர்வோ அல்லது எல்லை தாண்டிய நாம் அனைவரும் தமிழர்கள் என்ற பரந்த இன பற்றுதலோ அல்ல. மாறாக பின்வரும் போக்குகளே முன்னிலை வகிப்பதை காணலாம்.

1. 1980க்களை அடுத்து மலையக மக்களின் சமூக அமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் உருக்கொள்ள ஆரம்பிக்கின்­றன. இதில் குறிப்பிடத்தக்க விடயம், தொழிலாளரை தவிர்த்து உருவாகியிருந்த பல சமூக கூறுகள் ஒரு மத்தியதர வர்க்கமாக கால்கோள் கொள்வ­தாகும். இதைச் சேர்ந்தவர்கள் கல்வி  ரீதியாகவும், உத்தியோகம் மற்றும் பல்துறை ரீதியாகவும் மேல்நோக்கிய நகர்வினை (upward mobility) எட்ட ஆரம்பித்தனர். ஆனால் இந்த முன்னேற்றத்தோடு ஒரு எதிர்வினை விளைவும் தொற்றிக் கொண்டது. தோட்டப்புற, விசேடமாக தோட்ட தொழிலாளர் குடும்பப் பின்னணியைக் கொண்டவர்களைப் பொறுத்தவரை மேல் நோக்கிய நகர்வு அவர்கள் தாங்கள் சார்ந்திருந்த குடும்ப, சமூக சூழலில் இருந்தும் அந்நியப்படுத்தும் (Alienation) போக்கிற்கான உந்து சக்தியாக அமைந்து விட்டது. இதனை விட்டகலல் என்று கூறலாம். இவ்வாறு தமது சொந்த சமூக இனசூழலிலிருந்து அந்நிய மாணவர்களுக்கு வசதியான புகலிடமாக இலங்கைத் தமிழர் என்ற அடையாளம் அமையவே செய்தது.
2. தலைமுறை தலைமுறையாக ஒரு உள்நோக்கிய வாழ்க்கை நெறிக்கு ( inward looking life ) நிர்ப்பந்திக்கப்பட்டிருந்த சமூக இறுக்­கத்தில் 1980களை அடுத்து உடைப்புகள் ஏற்படுவதை காணலாம். வெளியிலிருந்து வந்த புதிய தொடர்புகளையும் பொறுப்புக்களையும் தரிசித்து கொண்டவர்களில் பலரின் மத்தியில் கூடவே தாங்கள் இதுவரை சார்ந்திருந்த குடும்ப - சமூக சூழல் குறித்த தாழ் உணர்ச்சி உருவாவதை அவர்கள் நடத்தை முறைமைகளில் (Behaviuor trends) காணக்கூடியதாக இருந்தது. உள்ளார்ந்த தாழ்வு மனப்பான்மை ஒருவரை, தான் இதுமட்­டிலும் மூலமாக சார்ந்தி­ருந்த குடும்ப - சமூக - இன ரீதியான பின் புலத்தை மறைக்க அல்லது அதற்கு புது வடிவம் கொடுக்க ஏதுவாகின்றது. ஒரு கட்டத்தில் இத்தகைய மனப்பாங்கிற்கு உள்ளானவர்கள் தம்மை கொழும்பு தமிழர் என்றும் கண்டித் தமிழர் என்றும் அடையாளப்படுத்த ஆரம்பித்தனர். இந்தப் போக்கு 1983ம் ஆண்டின் இன வன்செயலில் தாக்கத்தோடு மறைய ஆரம்பித்தாலும் இம் மனோபாவமும் தொடரவே செய்ததுடன் இத்தகைய பிரிவினரும் இலங்கைத் தமிழர் என்ற அடையாளத்திற்குள் தஞ்சமடைவதைக் காணலாம். 

03. மூன்றாவது பிரதான காரணி மலையக தோட்டப்புற சார்ந்தவர்களுக்கான சமூக அரசியல் தளங்களிலான காத்திர பூர்வமான முன்மாதிரிகள் (Role model) இல்லாமையாகும். முக்கியமாக வடக்கு கிழக்கு யுத்தம் அதன் விளைவாக மலையக மக்கள் விசேடமாக இளைஞர் யுவதிகள் மோசமான அடக்கு முறைகளுக்கு உள்ளாக்கப்பட்டமை ஆகிய யதார்த்த நிலைமைகள் மலையகத்திற்கு வெளியிலான சமூக அரசியல் முன்மாதிரி நபர்கள் நோக்கிய ஈர்ப்பினை இவர்களுக்கு மத்தியில் ஏற்படுத்தின. தாங்கள் முகம் கொடுத்த இக்கட்டான நிலைமைகளில் நிதர்சனம் கண்ட ஸ்தாபிக்கப்பட்ட மலையக தலைமைகளின் கையாலாகாத தன்மை வெளிவாரி முன் மாதிரிகள் குறித்த ஈர்ப்பு என்பனவும் இலங்கை தமிழர் என்ற அடையாளத் தேடலுக்கான உந்து சக்தியாக அமைந்தது எனலாம். 

மேற்குறித்த பின்னணிகளோடு தற்போது உருவாகியுள்ள வேறுபட்ட சமூகம்- அரசியல் யதார்த்தங்களையும் நாம் கவனத்தில் கொள்வது அவசியமாகும். 

இலங்கையின் கடந்தகால அனுபவங்களையும், பெரும்பான்மையினரின் அரசியல்- மத தலைமைத்துவ போக்குகளையும் கவனத்தில் கொள்கின்றபோது மலையக மக்கள் முக்கியமான சட்ட ஆவண ரீதியில் தமது தேசிய இனத்துவ அடையாளத்தை இழப்பதானது சிறுபான்மையினர் என்ற ரீதியில் எதிர்காலத்தில் பெரும்பான்மை இனத்திற்கு அடிபணியும் நிலைக்கும் சேவகம் புரியும் சமூகமாக மாறும் நிலைக்கும் நிர்ப்பந்தித்து விடும். 

மலையகத் தமிழர் தமது தமிழ் உணர்வை பிரதிபலிக்க தமது சொந்த இனத்து அடையாளத்தை இழக்கத் தேவையில்லை. கலை, இலக்கிய மற்றும் ஏளைய அதிகாரபூர்வமான தளங்களில் வடக்கு கிழக்கு இலங்கை தமிழருடன் ஒருமைப்பாட்டை ஆரோக்கியமான வழிகளில் நிலைநிறுத்த முடியும். வட கிழக்கை ஆதார தளமாக கொண்ட இலங்கை தமிழர் ஒப்பீட்டளவில் வேறுபட்ட அரசியல் சமூக போராட்ட அனுபவ பின்னணியை கொண்டவர்களாக தோற்றம் பெற்றுள்ளனர். அவர்களின் எதிர்கால மாறுதல்களுக்கான யாத்திரை பல தரப்பட்ட உள்ளக மற்றும் வெளியார் சக்திகளினால் தீர்மானிக்கப்படுகின்றன. இதில் வளமான ஒரு சமூக இருப்பாக தோற்றம் பெற்றுள்ள புலம் பெயர் தமிழர்களின் தாக்கம் தவிர்க்க முடியாதது.

இத்தகைய பகை புலத்தில் வட - கிழக்கு தமிழ் மக்களின் போராட்டங்கள், துயரங்கள், தேவைகள் இவற்றில் மலையக மக்களை சார்ந்தவர்கள் புரிந்துகொள்வதும் தங்களின் தார்மிக கரிசனங்களை வெளிப்படுத்துவதும் நிச்சயமாக இருக்கவே செய்யும். ஆனால் வட - கிழக்கு மக்களின் தேசிய - இனத்துவ அடையாளமாகிய இலங்கைத் தமிழர் என்ற அடையாளத்திற்கும் தம்மைப் புகுத்திக் கொள்வது வட - கிழக்கை சார்ந்த தமிழ் மக்கள் மற்றும் இந்திய வம்சாவளித் தமிழரான மலையக மக்கள் ஆகிய இரு சாரார் இடையேயும் தேவையற்ற சிக்கல்களையும் தர்மசங்கடங்களையும் உருவாக்குவதிலேயே போய் முடியும்.

மேற்குறித்த அம்சங்களில் இவற்றோடு தொடர்புடைய வரலாற்று மற்றும் சமகால பிற காரணிகளையும் தேசிய - சர்வதேசிய யதார்த்தங்களையும் கவனத்தில் கொண்டு நோக்கும் போது இம்மக்களுக்கான ஒரு தீர்க்கமான தேசிய - இன அடையாளம் தேவை என்பது புலனாகின்றது, சட்ட - ஆவண ரீதியாக மாத்திரமின்றி அத்தகைய அடையாளம் சமூக உணர்வு சார்ந்தும் அங்கீகாரம் பெற்ற ஒன்றாக அமைவது அவசியம்.

கூட்டு மொத்தத்தில் இலங்கை இந்திய வம்சாவளித் தமிழர் அல்லது இலங்கை சார் இந்திய வம்சாவளி தமிழர் - ( Sri lanka Tamils of Indian Origin ) என்பது ஆவணங்கள் பொறுத்தும் மற்றும் சட்ட ரீதியான தேவை­களுக்குமான ஒரு அடையாள பிரயோகமாக இருக்கும்.
அதே நேரத்தில் மலையக மக்கள் (மலையகத் தமிழர்) என்பது தேசிய - இன பகைபுலங்களில் தமது மொழி மற்றும் கலாசார பாரம்பரியங்ளை நிலைப்படுத்த ஒரு நிரந்தர பிரயோகமாக தொடர்ந்திருப்பதே பொருத்தமாக அமையும்.

எல். சாந்திகுமார்

நன்றி – வீரகேசரி.

Tuesday, March 29, 2016

1,500 பட்டதாரி ஆசிரியர்கள் சேவையில் இணைத்துக்கொள்ளப்படுவர்

சப்ரகமுவ மாகாணத்தில் மேலும் 1,500 பட்டதாரி ஆசிரியர்கள் சேவையில் இணைத்தக் கொள்ளப்படவுள்ளதாகவும் அதற்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளதாகவும் சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மஹிந்த எஸ்.வீரசூரிய தெரிவித்தார்.
சப்ரகமுவ மாகாணத்தில் பட்டதாரிகளுக்கு அசிரியர் நியமனம் வழங்குவது குறித்து நேற்று(28) சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே  தெரிவித்தார்.

இது குறித்து அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், சப்ரகமுவ மாகாணத்தில் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு மேலும் 1,500 பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்து கொள்வதற்கு, மாகாண கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதனடிப்படையில், விஞ்ஞானம், கணிதம், தகவல் தொழில்நுட்பம், விவசாயம், சுகாதாரம் மற்றும் உடற்பயிற்சி ஆகிய பாடங்களை கற்பிப்பதற்கு பட்டதாரிகளிடமிருந்து  விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இதற்கமைய, 2016-04-04 திகதி தமது பட்டத்தை முழுமையாக முடித்துக்கொண்ட, சப்ரகமுவ மாகாணத்தில் நிரந்தர வதிவிடத்தை கொண்ட பட்டதாரிகளை, ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்வதற்கு சப்ரகமுவ மாகாண சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

ஆங்கில ஆசிரியர் குறித்து உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் பாடநெறியை டிப்ளோமா பாடநெறியை முழுமையாக முடித்துக்கொண்டவர்கள் விண்ணப்பிக்க முடியுமென சப்ரகமுவ மாhகண கல்வி அமைச்சின் செயலாளர் மஹிந்த எஸ்.வீரசூரிய மேலும் தெரிவித்தார்.

மலையகத்தில் தேசிய வீடமைப்பு தொடர்பாக கலந்துரையாடல்

பெருந்தோட்டப் புறங்களில் தேசிய வீடமைப்பு அதிகாரசபையினூடாக வீடமைப்பு திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பான கலந்துரையாடலொன்று, மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் அலுவலகத்தில் நேற்று(24) இடம்பெற்றது. மலையக பெருந்தோட்டப் புறங்களில் கடந்த காலங்களில் தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் கடனுதவி மூலமாக நிர்மாணிக்கப்பட்ட சில வீடுகள், முழுமையாக பூர்த்திசெய்யப்படாத நிலையில் உள்ளன. அவ்வாறு நிர்மாணப்பணிகள் பூர்த்தி செய்யப்படாத வீடுகளை முழுமைப்படுத்துவதற்கான கடனுதவிகளை வழங்குவது தொடர்பிலும் முழுமையாக நிர்மாணிக்கப்பட்ட வீடுகளுக்கு மேலதிக கடன் வழங்கி வீடுகளை மேலும் விரிவுப்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. 

இதுவரை தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஏறத்தாழ 3900 வீடுகளுக்கு 'பசுமைபூமி' வேலைத்திட்டத்தின் கீழ், காணி உரித்து வழங்குவதற்கான ஏற்பாடுகளை மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சு முன்னெடுப்பது தொடர்பிலும் இணக்கம் காணப்பட்டது. தேசிய வீடமைப்பு அதிகார சபையின் ஊடாக, தேசிய ரீதியில் கடனடிப்படையில் 25 வீடுகளைக் கொண்ட 200 கிராமங்களை அமைக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. பெருந்தோட்டபுறங்களில் வாழும் தொழிலாளர்களுக்கு நிர்மாணிக்கப்படவிருக்கின்ற ஒரு தொகுதி(25வீடுகள்) தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் 250,000 ரூபாய் கடன் வழங்கப்பட்டு நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்படும். அத்தோடு மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் மூலமாக 250,000 ரூபாய் இனாமாகவும் அமைச்சின் கீழ் இயங்கும் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தினூடாக நிர்மாண பணிகளுக்கான நில தயார்படுத்தல், தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையத்தின் அறிக்கை பெறல் போன்ற ஆரம்பக்கட்ட வேலைகளுக்கு 90000 ரூபாய் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக குறித்த வீடமைப்பு தொகுதிகளுக்கு மின்சாரம், பாதை வசதிகள், குடிநீர் மலசலகூடம் போன்ற உட்கட்டமைப்பு வசதிகள் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் சமுதாய அபிவிருத்தி அமைச்சினால் மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

தோட்டத் தொழிலாளர்கள் அல்லாத அரச சேவையாளர்கள், தோட்ட சேவையாளர்கள், தனியார்த்துறை சேவையாளர்கள் போன்றவர்களுக்கு அவர்களின் தகைமைக்கேற்றவாறு கடனடிப்படையில் வீடமைப்புத் திட்டங்களை மேற்கொள்வது தொடர்பிலும் அதற்கான உதவிகளை மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சு முன்னெடுப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. இவ்வாறான ஒன்றிணைந்த வேலைத்திட்டத்துக்காக தேசிய வீடமைப்பு அமைச்சும் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சு இணைந்து கூட்டு அமைச்சரவை பத்திரம் ஒன்றை சர்ப்பித்து அனுமதி பெறுவது தொடர்பாகவும் பேசப்பட்டது. இக்கலந்துரையாடலில் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜா, அமைச்சின் செயலாளர் ரஞ்சினி நடராஜபிள்ளை, தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் எல்.எஸ்.பாலசூரிய, அதிகார சபையின் பொதுமுகாமையாளர் எச்.எம்.தயானந்த உட்பட பலர் கலந்துகொண்டனர்.

நன்றி- தமிழ் மிரர்


Monday, March 28, 2016

சுயநலவாத முன்னெடுப்புகளால் தொழிற்சங்க நலன்கள் பாதிப்பு

அர­சி­யலும் தொழிற்­சங்­கமும் இணை­யும்­போது ஒரு பல­மான சக்தி உரு­வெ­டுக்க வேண்டும். ஆனால் மலை­ய­கத்தைப் பொறுத்­த­வ­ரையில் இது சாத்­தி­யப்­ப­ட­வில்லை. சுய­ந­ல­வாத முன்­னெ­டுப்­புகள் கார­ண­மாக தொழி­லா­ளர்­களின் நலன்கள் பாதிப்­ப­டைந்­துள்­ளன என்று சிரேஷ்ட கலா­நிதி ஏ.எஸ். சந்­தி­ரபோஸ் தெரி­வித்தார். சம­கால தொழிற்­சங்­கங்­களின் போக்­குகள் குறித்து கருத்து வின­வி­ய­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரி­விக்­கையில்; மலை­யக மக்கள் இன்னும் பல்­வேறு உரி­மை­களைப் பெற்­றுக்­கொள்ள வேண்­டி­யுள்­ளது. நிறைவு செய்­யப்­ப­டாத நிலையில் தேவை­களும் இன்னும் அதி­க­முள்­ளன.
இவற்றைப் பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்­கான முனைப்­பு­களும் அழுத்­தங்­களும் உரி­ய­வாறு இடம்­பெ­று­கின்­ற­னவா? என்­பதில் திருப்தி கொள்ள முடி­ய­வி­லலை. இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் மலை­யக தொழிற்­சங்க வர­லாற்றில் முக்­கி­ய­மான இடத்­தினை பெறு­கின்­றது. பல தொழிற்­சங்­கங்­க­ளுக்கு முன்­னு­தா­ர­ண­மா­கவும் இது விளங்­கி­யுள்­ளது. சாதா­ரண தொழி­லா­ளர்­களும் இத் தொழிற்­சங்­கத்தில் முக்­கி­ய­மான பத­வி­களில் இருந்­துள்­ளனர். தொழி­லா­ளர்­களின் சக்­தியை மையப்­ப­டுத்தி பல்­வேறு வேலைத்­திட்­டங்­க­ளையும் இ.தொ.கா. முன்­னெ­டுத்­தது.
மலை­யக மக்கள் பிர­ஜா­வு­ரி­மை­யையும் வாக்­கு­ரி­மை­யையும் பெற்றுக் கொண்­டதைத் தொடர்ந்து மலை­யக தொழிற்­சங்­கங்கள் நிலை­மாற்றம் பெற்­றன.
இத் தொழிற்­சங்­கங்கள் அர­சியல் ஸ்தாப­னங்­க­ளா­கவும் உரு­மாற்றம் பெற்­றன. அர­சி­யலும் தொழிற்­சங்­கங்­களும் இணை­கையில் ஒரு பல­மான சக்தி உரு­வாக வேண்டும். ஆனால் மலை­ய­கத்தைப் பொறுத்­த­வ­ரை­யிலும் இது சாத்­தி­யப்­ப­ட­வில்லை. தொழி­லா­ளர்­க­ளுக்கு உரி­மை­களைப் பெற்றுக் கொடுக்க வேண்­டிய தொழிற்­சங்­கங்கள் நிலை­மாறி செயற்­ப­டு­வ­த­னையே அவ­தா­னிக்கக் கூடி­ய­தாக உள்­ளது. இலங்­கையின் தொழில் வழக்­கு­களில் மலை­யக தொழிற்­சங்­கங்கள் ஒரு காலத்தில் சிம்­ம­சொப்­ப­ன­மாக விளங்­கின. தொழிற்­சங்கம் என்றால் ஒரு அச்ச நிலை மேலோங்கிக் காணப்­பட்­டது. ஆனால் இன்று அந்த நிலை­மையை காண முடி­ய­வில்லை. தொழி­லா­ளர்­களின் சாதா­ர­ண­மான பிரச்­சி­னை­களைக் கூட தீர்த்து வைக்க முடி­யாத வெற்­றி­யினை ஏற்­ப­டுத்திக் கொடுக்க முடி­யாத நிலையில் சம­கால தொழிற்­சங்­கங்கள் காணப்­ப­டு­வது வருந்­தத்­தக்க விட­ய­மாக உள்­ளது.
தொழிற்­சங்­கங்­களை உரு­வாக்­கு­வதன் நோக்­கமே அர­சியல் களத்­திற்­குச்­செல்ல ஆயத்­தப்­ப­டுத்­து­வ­தாக இப்­போ­துள்­ளது. தொழிற்­சங்­கத்தை மையப்­ப­டுத்தி அர­சி­ய­லுக்­குச்­செல்லும் முனைப்­புடன் பலர் செயற்­ப­டு­கின்­றனர். இதில் வெற்­றியும் கண்­டுள்­ளனர். எனினும் அர­சி­ய­லுக்­குச்­சென்ற பின் தொழி­லா­ளர்­க­ளுக்கு இவர்கள் எந்­த­ளவு நன்மை செய்­கின்­றனர் என்­பது கேள்­விக்­கு­றி­யே­யாகும். தொழிற்­சங்­கங்­க­ளுக்கு அதி­க­ளவில் சந்­தாப்­பணம் வந்து சேரு­கின்­றது. அர­சி­யலில் தோல்­வி­ய­டைந்­தாலும் வெற்­றி­ய­டைந்­தாலும் தமக்­கு­ரிய வரு­வா­யினை தொழிற்­சங்­க­வா­திகள் பெற்றுக் கொள்­கின்­றனர். இதனால் தொழி­லா­ளர்­களின் பிரச்­சி­னை­களை இவர்கள் பெரி­தா­கக்­கண்டு கொள்­வதே கிடை­யாது.
இலங்­கையை பொறுத்­த­வ­ரையில் தொழிற்­சங்­கங்­க­ளுக்கு சந்­தாப்­பணம் பெரி­ய­ளவில் கிடைக்­கின்­றது. 60 ரூபாவில் இருந்து 145 ரூபா வரை­யிலும் தொழிற்­சங்­கங்­க­ளுக்கு சந்­தாப்­பணம் கிடைக்­கின்­றது. இது இன்னும் அதி­க­மா­கவும் இருக்­கலாம். தொழிற்­சங்­கங்கள் இந்த வரு­வாயை மையப்­ப­டுத்தி தம்மை வளர்த்­துக்­கொள்­வதில் அக்­கறை காட்­டு­கின்­றன. தேர்தல் காலங்­களில் அர­சி­யல்­வா­தி­களின் பொய்­யான வாக்­கு­று­தி­களை நம்பி மக்கள் வாக்­க­ளிக்­கின்­றார்கள். எனினும் தேர்­தலின் பின்னர் பல அர­சி­யல்­வா­தி­க­ளி­னதும் பொய் முகத்­தைக்­கண்­டு­கொள்­ளக்­கூ­டி­ய­தாக உள்­ளது.
இலங்­கையில் பல்­வேறு தொழிற்­சங்­கங்கள் உள்­ளன. குறிப்­பாக வைத்­தியர் தொழிற்­சங்கம், ஆசி­ரியர் தொழிற்­சங்கம், பல்­க­லைக்­க­ழக விரி­வு­ரை­யாளர் தொழிற்­சங்கம், விவ­சா­யி­களின் தொழிற்­சங்கம் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். இத் தொழிற்­சங்­கங்கள் தங்­க­ளது நிவா­ர­ணங்­களைப் பெற்­றுக்­கொள்ள தேசிய ரீதியில் செயற்­ப­டு­கின்­றன. ஆனால் மலை­யக தொழிற்­சங்­கங்கள் தேசிய ரீதி­யாக செயற்­பட முடி­யாத நிலையில் உள்­ளன. தொழி­லா­ளர்­களின் நலன்­க­ளுக்கு எதனைச் செய்ய வேண்டும் என்ற விழிப்­பு­ணர்வு இல்­லா­மையே மலை­யக தொழிற்­சங்­கங்­களின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாகும் என்றார்.

Wednesday, March 16, 2016

குளவி தாக்குதல்: 11 பேர் மருத்துவமனையில்

தோட்டத் தொழிற்துறையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை குளவிகள் கொட்டியதினால் 11 பேர் ஹல்துமுல்லை, தியத்தலாவை அரசினர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஹல்துமுல்லை பகுதியின் இதல்கஸ்ஹின்ன தோட்டத்தில், தேயிலைத் தளிர்கள் கொய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களே, குளவி கொட்டுக்கிழக்காகியுள்ளனர். இச்சம்பவம் 16.03.2016 காலை இடம்பெற்றுள்ளது.
மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களில் மூன்று பேர் பெண்களாகவும் எட்டுப் பேர் ஆண்களாகவுமுள்ளனர். இவர்களில் இரு பெண்களும், ஒரு ஆணுமாக மூன்று பேர் தியத்தலாவை அரசினர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

தலவாக்கலையில் லொறி விபத்து – வீடு சேதம்

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லோகி தோட்ட குடியிருப்புக்கு சொந்தமான ஒரு வீட்டில் லொறி ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்து அட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் லோகி தோட்ட தேயிலை தொழிற்சாலைக்கு அருகில் 15.03.2016 அன்று இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்துக்குள்ளான லொறி வீதியில் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டதன் பின் அதன் சாரதி அருகில் உள்ள தனது வீட்டிற்கு சென்று வருவதற்கு முன்னர் வாகனத்தின் நடத்துனர் ஒருவரால் வாகனத்தை செலுத்த முற்படுகையில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்விபத்தினால் குறித்த வீடு முற்றாக சேதமாகியுள்ளது. எனினும் இதன்போது எவருக்கும் பாதிப்புகள் ஏற்படவில்லை.

460 ரூபா சம்பளத்தில் குடும்பத்தை நடத்துவதா?

பெருந்தோட்ட இந்திய வம்சாவளித் தமிழ் மக்களை ஒரு தனித்தேசிய இனமாகப் பிரகடனப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. அம்மக்களை அவ்வாறு தனித்தேசிய இனமாகப் பிரகடனப்படுத்திவிட்டால் அவர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தீர்த்துவிடுமா? அவர்களுக்கு ஏற்படுத்தப்படும் புறக்கணிப்புக்கள் முடிவுக்கு வந்து விடுமா? இது பற்றிச் சிந்திக்கவேண்டும். முதலில் அம்மக்களின் அடிப்படை வாழ்வாதாரப் பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டும்.
இந்நாட்டில் பொருளாதாரத்தை கணிசமான அளவில் கட்டிக்காக்கும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் நாட்டின் ஏனைய சமூகங்கள் அனுபவிக்கும் அடிப்படை உரிமைகள் பலவற்றை அனுபவிக்க வழியின்றி அல்லலுறுகின்றன. அண்மையில் இது தொடர்பாகப் பாராளுமன்றத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற எதிர்க் கட்சிப் பிரதம கொரடாவுமான அனுரகுமார திசாநாயக்க ஒத்திவைப்பு பிரேரணை கொண்டு வந்தார். வரவேற்கத்தக்க சம்பவமாக அது வரலாற்றில் பதியப்படவேண்டியதாகும்.
தலைகுனிந்து தொழில் செய்யும் பெருந்தோட்டத் தமிழ்த் தொழிலாளர்கள் இந்நாடு தலை நிமிர்ந்து நிற்க உழைக்கின்றார்கள் என்றார் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் பிரதிநிதி ஜி. ஸ்ரீநேசன், தோட்டத் தொழிலாளர்கள் அனுபவிக்கும் துன்பங்களைப் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் பட்டியலிட்டு உரையாற்றியுள்ளனர். இதுவரை தோட்டத் தொழிலாளர் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் பாராளுமன்றத்தில் இவ்வாறு தெளிவாக எடுத்துக்காட்டப்பட்டதாகப் பதிவேதுமில்லை.
நாட்டிலேயே குறைந்த நாட்கூலிக்கு தொழில் செய்யும் அவர்களது வருமானம் ஏனைய தரப்பினர் பெறும் வருமானத்துடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவானது. வேலை செய்யும் நாட்களுக்கு மட்டுமே சம்பளம் வழங்கப்படுகின்றது.
கிடைக்கும் அந்த சொற்ப சம்பளத்தை வைத்து நாட்டில் நிலவும் பொருளாதார நிலையில் எவ்வாறு வாழமுடியும் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். நாளொன்றுக்கு நானூற்று அறுபது ரூபா என்ற சம்பள வரையறைக்கு மட்டுப்படுத்தப்பட்ட அவர்களின் சம்பளம் வாழ்க்கைச் செலவைச் சமாளிக்கக்கூடிய அளவு உயர்த்தப்படவேண்டியுள்ளது.
கூட்டு ஒப்பந்தம் மூலம் பெருந்தோட்டத் தொழிலாளரின் சம்பளம் மீளாய்வு செய்யப்படுவது வழக்கமாக இருந்தபோதிலும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இடம்பெறவேண்டிய சம்பள மீளாய்வு ஒரு ஆண்டு கடந்துவிட்ட நிலையிலும் கவனத்தில் கொள்ளப்படாது கிடப்பில் போடப்பட்டுள்ளது. உரிய தொழிற்சங்கங்களோ, முதலாளிமார் சம்மேளனமோ, தொழில் திணைக்களமோ அக்கறை செலுத்துவதாகத் தெரியவில்லை. ஏன் இந்தப்பாரா முகம்?
பெருந்தோட்டங்களில் வசிக்கும் தமிழ்த் தொழிலாளர்களுக்கு வருமானப் பற்றாக்குறையால் பல்வேறு பாதிப்புக்கள் ஏற்படுகின்றமை தெரியவந்துள்ளது. போசாக்கின்மையால் வளர்ந்தவர்களும், வளரும் இளம் பிள்ளைகளும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். நாட்டிலே சமத்துவக் கல்வி, சகலருக்கும் உயர்ந்த, உரிய கல்வி, பதினான்கு வயது வரை கட்டாயக் கல்வி என்ற கொள்கை நடைமுறையிலே கொள்கையாக இருந்த போதிலும் அது தோட்டப்பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை.
சிறுவர்களை வேலைக்கமர்த்தும் வயதெல்லைச் சட்டம் நாட்டில் அமுலிலிருந்தபோதும் தோட்டப் பகுதி சிறு பிள்ளைகள் தொழில் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டவர்களாயுள்ளனர். பெற்றோரின் வருமானப் பற்றாக்குறையால் கல்வி கற்க வேண்டிய வயதிலுள்ள பிள்ளைகளை வீட்டு வேலைக்காக அனுப்பும் பெற்றோர் பெருமளவு தோட்டப் பகுதிகளிலுள்ளனர்.
மருத்துவமனைகளோ, பாடசாலைகளோ, நூல் நிலையங்களோ, ஏனைய பொழுதுபோக்கு வசதிகளோ அமைத்துக் கொடுப்பதில் காட்டப்படாத அக்கறை மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் மதுபான விற்பனை நிலையங்களை உருவாக்குவதில் காட்டப்பட்டுள்ளது. மதுபானக் கடைகள் பல்கிப் பெருகியுள்ள பகுதிகளாக மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளுள்ளன. இதனால் அம்மக்களில் அதிகமானவர்கள் மதுவுக்கு அடிமைப்பட்டவர்களாகவேயுள்ளனர்.
சிசு மரணவீதமும் அதேபோல் வாழ்வின் வயதெல்லை குறைந்ததுமாக மலையகப் பெருந்தோட்டப் பகுதி விளங்குகின்றது. நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு வழங்கப்படும் சுகாதார வசதிகள் இவர்களுக்கும் உரியபடி வழங்கப்படுமானால் இந்நிலையிலிருந்து மீளமுடியும், மீட்கமுடியும்.
குடியிருப்பு பெரும் பிரச்சினையாயுள்ளது. லயன் அறைகள் என்று சொல்லப்படும் தோட்ட வரிசை வீடுகளிலேயே அவர்கள் பெரும்பாலும் வாழ்கின்றனர். தனி வீட்டுத் திட்டம் வருகின்றது. வரப்போகின்றது என்று கூறப்படுகின்றது. அது எப்போத அனைத்துத் தோட்ட மக்களுக்கும் கிடைக்குமென்று காலவரையறை எதுவும் இல்லாத நிலையும் காணப்படுகின்றது.
உணவு, கல்வி, தொழில், வருமானம், குடியிருப்பு, சுகாதாரம், குடிநீர், போக்குவரத்து, மின்சாரம்,காணி பாதுகாப்பு என்பவற்றில் பல்வேறு குறைபாடுகளுடன் வாழும் பெருந்தோட்ட தமிழ்த் தொழிலாளரின் பிரச்சினைகள் உரிய முறையில் ஆராய்ந்து அணுகப்பட்டு தீர்வுகள் காணப்பட்டால் மட்டுமே அம்மக்கள் நிம்மதியாக வளமான வாழ்வு வாழ வழியேற்படும்.
தொழிற்சங்கம், அரசியல் என்று அம்மக்களைப் பிளவுபடுத்துவதை விட அம்மக்களது அடிப்படைத் தேவைகளைப் பெற்றுக்கொடுக்க ஒன்றுபட்டு உழைப்பதே மனிதாபிமானமாகவும், நாகரிகமாகவும் அமையும். ஆகவே இன்றைய முதல்தேவை முக்கிய தேவை.
நன்றி- தினகரன்

மலையகத்தின் அபிவிருத்திக்கு ஐரோப்பிய ஒன்றியம் நிதி

இலங்கையின் அபிவிருத்திப் பணிகளுக்காக் 43.7 யூரோ மில்லியன் மதிப்பிலான நிதியுதவியையும் தொழில்நுட்ப உதவிகளையும் வழங்க முன்வந்துள்ள் ஐரோப்பிய ஒன்றியம் மலையக பிரதேசங்களின் கிராம அபிவிருத்திக்காக 30 மில்லியன் நிதியுதவியை வழங்கவும் முன்வந்துள்ளது. 

இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கொழும்பிலுள்ள நிதியமைச்சில் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, ஐரோப்பிய ஒன்றியத்தின் சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்திக்கான ஆணையாளர் நெவென் மிமிகா ஆகியோரின் தலைமையில் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடலில் மலையக பெருந்தோட்ட மக்கள் பெருவாரியாக வாழும் மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் மிகவும் பின்தங்கிய மாவட்டங்களின் கிராம அபிவிருத்திக்காக 30 யூரோ மில்லியன் பெறுமதியான நிதியுதவிக்கான ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டது.

இலங்கையின் வர்த்தக நடவடிக்கைகளுக்கான செயல்திட்டத்திற்காக 8 யூரோ மில்லியன் நிதியும் தேசிய குடிநீர் மற்றும் நீர்வடிகாலமைப்பு சபைக்காக 5.7 யூரோ மில்லியன் மதிப்பிலான தொழில்நுட்ப உதவியை வழங்கவும் ஐரோப்பிய ஒன்றியம் முன்வந்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி வரிச்சலுகையும் விரைவில் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

ஏற்றுமதிப்பொருட்களுக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் வரிச்சலுகை கிடைப்பதற்கான ஜிஎஸ்பி நடைமுறை, இலங்கையின் மனித உரிமை விவகாரங்களை காரணம் காட்டி, 2010-ம் ஆண்டில் ரத்துசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த ஒப்பந்தம் குறித்து உரையாற்றிய ஐரோப்பிய ஒன்றியத்தின் சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்திக்கான ஆணையாளர் நெவென் மிமிகா இலங்கையில் நிலையான அமைதிக்கும் முன்னேற்றத்துக்கும் முக்கிய முன்நிபந்தனையாக இருக்கின்ற நல்லிணக்கம் தொடர்பில் அரசாங்கம் காட்டுகின்ற அக்கறைக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கான சிறந்த தருணம் இன்று ஏற்பட்டிருக்கின்றது என்றார். 

Tuesday, March 15, 2016

நுவரெலியா - வேலையில்லா பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்


நுவரெலியா மாவட்டத்தில் வேலையில்லா பட்டதாரிகளுக்கு உடன் தொழில் வழங்க கோரி நுவரெலியா மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினால் இன்று (15) காலை அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. 

இந்த ஆர்ப்பாட்டம் நுவரெலியா மாவட்ட செயலகத்திற்கு முன்பு பொலிஸ் பாதுகாப்புடன் இடம்பெற்றது. இதன்போது 50ற்கும் மேற்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் கலந்து கொண்டனர். 

ஆர்ப்பாட்டத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள், தங்களின் பட்டப்படிப்பினை முடித்து வேலையில்லாத நிலையில் மிகவும் கஷ்டத்தினை எதிர்நோக்கி வருவதாகவும் உடனடியாக அரசாங்கம் வேலை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்குமாறு இதன்போது தெரிவித்தனர். 

அத்தோடு பட்டதாரிகள் மூலம் தயாரிக்கப்பட்ட மணு ஒன்றும் நுவரெலியா பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டது. 

உரிய நடவடிக்கை மேற்கொள்ளாத பட்சத்தில் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டத்தினை மேற்கொள்வதாக ஆர்ப்பாட்டகாரர்கள் மேலும் தெரிவித்தனர். 

கடும் வெயில், பொருளாதார சிக்கல்... - அல்லலுறும் மலையக மக்கள்


மலையகத்தில் கடும் வரட்சியால் பெருந்தோட்ட தொழிலாளர்கள் பல்வேறுபட்ட பிரச்சினைகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

கடந்த மூன்று மாத காலமாக பெருந்தோட்ட பகுதியில் கடுமையான வெயில் நிலவி வருவதோடு காலை வேளையில் கடும் பணி பொழிவும் ஏற்பட்ட வண்ணமே உள்ளன. 

கடுமையான பணி காரணமாக அதிகமான தேயிலை செடிகள் கருகி காணப்படுவதோடு, தேயிலை செடிகளில் கொழுந்து விளைச்சலும் குறைவடைந்துள்ளது. இதனால் தொழிலாளர்களுக்கு அதிகமான வேலை நாட்களை வழங்க முடியாத சூழ்நிலைக்கு தோட்ட நிர்வாகங்கள் தள்ளப்பட்டுள்ளன. 

தொழிலாளர்களுக்கு வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள் மாத்திரமே தொழில் வழங்கப்படுவதால் பொருளாதார ரீதியில் தனது குடும்ப சுமையுடன் வாழ வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு முகங்கொடுக்கின்றனர். 

ஒரு நாள் சம்பளத்திற்காக தோட்ட தொழிலாளர்களை 18 கிலோ கொழுந்தினை பறிக்குமாறு தோட்ட நிர்வாகம் அழுத்தம் கொடுக்கின்றது. தற்போது தேயிலை செடிகளில் கொழுந்தின் விளைச்சல் குறைந்தே காணப்படுவதால் நிர்வாகங்கள் கேட்கும் 18 கிலோ கொழுந்தினை பறிக்க முடியாத இக்கட்டான சூழ்நிலைக்கு தொழிலாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். 

கூட்டு ஒப்பந்தம் முடிந்து ஒரு வருடம் காலவதியாகிய போதிலும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் அசமந்த போக்கினை கடைப்பிடிப்பதாக தொழிலாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். 

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆயிரம் ரூபாய் பெற்று தருவதாக தொழிலாளர்கள் மத்தியில் உறுதி மொழி வழங்கிய போதிலும், இக்கட்சி எவ்வித பேச்சுவார்த்தையையும் சரியான முறையில் முன்னெடுக்கவில்லை என தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். 

இதேவேளை, தற்போது அமைச்சராக இருக்கின்ற பழனி திகாம்பரம், தேர்தல் காலத்தில் மக்கள் மத்தியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஆயிரம் ரூபா பெற்று தருவதாக கூறியதாகவும், ஒரு நாளுக்கு நூறு ரூபாய் அடிப்படையில் மாதாந்தம் இரண்டாயிரத்து ஐந்நூறு ரூபாய் வழங்குவதாக குறிப்பிட்டதாகவும், இப் பணம் தொழிலாளர்களுக்கு கிடைக்கவில்லை எனவும் இதனால் அவர்கள் மன வேதனையுடன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர். 

அத்தோடு கோதுமை மாவின் விலை அதிகரிப்பு மலையக மக்களுடைய வயிற்றில் அடித்த ஒரு விடயம் என தோட்ட தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, இம் மாதம் தொழிலாளர்களுக்கு நிர்வாகத்தினால் வழங்கப்பட்ட சம்பளம் 3000 ரூபாய்க்கும் கீழ்ப்பட்ட தொகையே எனவும் தெரியவந்துள்ளது. 

இதனால் இவர்கள் தனது குடும்ப தேவைகளை செய்து கொள்ள முடியாத பெரும் கஷ்டத்திற்கு உள்ளாகியுள்ளனர். மேலும் கடுமையான வெயில் காரணமாக குடிநீர் தட்டுப்பாடு காணப்படும் இதேவேளை அதிகமான பகுதியில் காடுகளை எரித்ததால் அங்கிருந்த நீர் ஊற்றுகள் வற்றிப்போயுள்ளது. 

குடும்ப பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்வதற்காக விவசாய நடவடிக்கைகளை முன்னெடுப்பவர்கள் நீர் வசதியில்லாமல் பாதிக்கப்படுவதோடு, விவசாய நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

அத்தோடு அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதால் இரவு நேரங்களில் மின்சாரம் இல்லாமல் பல்வேறு இடர்களை சந்திக்க வேண்டியுள்ளதாகவும் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். 

தற்போது தோட்ட பகுதியில் வேலைவாய்ப்பு குறைவடைந்துள்ளதால் குடும்ப வருமானத்தினை ஏற்படுத்திக் கொள்வதற்காக வெளிமாவட்டங்களுக்கு மலையக இளைஞர்கள் படையெடுக்கின்றனர். 

எனவே இதனை கருத்தில் கொண்டு அரசாங்கம் உட்பட மலையக அரசியல்வாதிகள் நிவாரண உதவிகளை வழங்க வேண்டுமென மலையக தொழிலாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். 

- அத தெரண- 

தோட்டத் தொழிலாளர்கள் நடு வீதியில்

கடவுளின் மக்கள் என கருதப்படும் மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் இன்று நடு வீதியில் விடப்பட்டுள்ளனர், ஆயிரம் ரூபா சம்பள உயர்வு வழங்கப்படும் என கூறி ஆட்சியைப் பிடித்தவர்கள் இன்று தொழிலாளர்களை கண்டுகொள்வதேயில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஹட்டன் - வட்டவளை ரொசல்ல கிளிஸ்டன் தோட்டத்தில்  ஸ்ரீ ஞான கணேசர் ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவத்தில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். 


அவர் மேலும் கூறியதாவது, எனது ஆட்சியின் போது மலையக மக்களுக்காக பல அபிவிருத்தித் திட்டங்களை நான் முன்னெடுத்தேன். வீதி அமைப்பு, பாடசாலை அமைப்பு என உட்கட்டமைப்பு வசதிகள் விரிவாக்கப்பட்டன. இவ்வளவு செய்தும் மக்கள் மத்தியில் போலிக் கதைகளை கட்விழ்த்துவிட்டு சதிகாரர்கள் அவர்களை திசை திருப்பிவிட்டனர். 

மலையக மக்கள் கடவுளின் மக்களென சிங்கள கவிஞர் ஒருவர் கவிபாடியுள்ளார். ஆன்மீக வழிபாடுகளில் அதீத நம்பிக்கை கொண்டுள்ளனர். இறைவழிபாடுகளில் ஈடுபடுகின்றனர். இதன் ஊடாக மேற்படி கூற்று உறுதியாகின்றது. 

எனது ஆட்சியின்போது தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வை பெற்றுக்கொடுத்தேன். ஆனால், இன்று என்ன நடக்கின்றது. 1000 ரூபா தரப்படும் என்றனர். 2500 ரூபா வழங்கப்படும் என பாராளுமன்றத்தில் அறிவித்தனர். இவை நடந்துள்ளனவா? 

மலையக இளைஞர்களுக்கு கொழும்புக்கு செல்லமுடியாத நிலை காணப்பட்டது. பாதுகாப்பு கெடுபிடிகள் உச்சமட்டத்தில் இருந்தன. ஆனால், போரை முடித்து வடக்கு, கிழக்கு உட்பட அனைத்து பகுதி மக்களுக்கும் நாம் சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுத்தோம். 

வடக்கு, கிழக்கிலும் பாரிய அபிவிருத்திகளை முன்னெடுத்தோம். ஆனால் அவர்களின் இதயங்களை வென்றெடுக்க முடியவில்லை. அதை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும், என்றார். 

Thursday, March 10, 2016

இந்திய வம்சாவளி மக்கள் தனி தேசிய இனமாக அங்கீகரிக்கப்பட வேண்டும்

இந்திய வம்சாவளி தமிழ் மக்களுக்கு தனியாட்சி உருவாக்கப்பட்டு தனி தேசிய இனமாக புதிய அரசியலமைப்பில் அங்கீகரிக்கப்பட வேண்டுமென்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் பாராளுமன்றத்தில் புதிய அரசியலமைப்பு விடயம் குறித்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார்.

எமது நாட்டின் மிக உயர் சட்டமாகிய அரசியலமைப்பு சட்டத்தினை உருவாக்குகின்ற அரசாங்கதின் நோக்கத்தினை நாம் வரவேற்கின்றோம். இலங்கை அரசியல் வரலாற்றில் பல அரசியல் யாப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவை அந்தந்த கால சூழ்நிலைக்கேற்ப உருவாக்கப்பட்டவையாகும். காலத்துக்குக் காலம் உருவாக்கப்பட்டபோதிலும் நீண்டகால அடிப்படையில் அதன் நோக்கங்கள் பிரதிபலிகாததால் காலத்துக்கு காலம் புதிய யாப்புக்களை உருவாக்க வேண்டியேற்பட்டது. 

இலங்கையில் அரசியலமைப்பு வரைபுகளில் இந்திய வம்சாவளி தமிழர்களின் அபிலாசைகள், தேவைகள், உரிமைகள் தொடர்பில் அசமந்த போக்கே கடைபிடிக்கப்பட்டு வந்துள்ளது. டொனமூர் யாப்பில் இலங்கையில் 21 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டது. சோல்பரி யாப்பில் சிறுபான்மையினர் காப்பீடுகள் தொடர்பாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 1948ம் ஆண்டு எமது சமூகத்தின குடியுரிமையும், வாக்குரிமையும் பறிக்கப்பட்டது அகாரணமாக தேசிய அரசியலில் எமது சமூகம் ஒதுக்கப்பட்டது. 

1948 தொடக்கம் 1978 வரையிலான காலப்பகுதியில் எமது மக்கள் அரசியல் உரிமைகளை அனுபவிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டோம் இதன் விளைவாக பொருளாதாரம், கல்வி, சமூக மேம்பாடு என அனைத்து விடயங்களில் எமது சமூகம் பின்நோக்கி தள்ளப்பட்டது. இன்றும் இது தொடர்கின்றது. 
1978ம் ஆண்டு அரசியலமைப்பின் கீழ் எமது அரசியல் உரிமைகளை பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டபோதும் தற்போதைய அரசியலமைப்பில் இலங்கையர்களை ஆட்கள், பிரஜைகள் என வெவ்வேறாக குறிப்பிடப்பட்டiமால் பாரபட்சத்தினை காட்டுகிறது.  எமது இந்திய வம்சாவளி சமூகம் தனது உழைப்பினை மட்டும் நம்பி கடல் கடந்து இலங்கைக்கு வந்தவர்களாகும் எங்களிடம் உடல் உழைப்பு என்ற மூலதனம் மாத்திரமே இருந்தது. 

எமது மக்களின் உழைப்பினை மட்டும் சுரண்டிக் கொண்டவர்கள் எமக்கு கொடுத்தது நாடற்றவர்கள் கள்ளத்தோணி, தோட்டக்காட்டான் என்ற பட்டமோ. அதைக் கண்டு நாங்கள் வருத்தப்படவில்லை. இன்று பசுமையாக தெரிகின்ற பெருந்தோட்டங்கள் அனைத்தும் அன்று காடுகளாக கிடந்தவைகள் அவற்றை வளப்படுத்தி தோட்டங்களாக்கி ஆங்கிலேயர்களுக்கும் உள்நாட்டு முதலாளிகளுக்கு வருமானம் பெற்றுத் தருகின்றனர்கள் எமது சமூகத்தினர். இன்றும் உழைத்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள் எமது மக்கள் உழைப்பினால் உயர்ந்தவர்கள் அல்ல. இதுவரையில் எமது சமூகத்தை கண்டுகொள்ளவும் இல்லை என்றார். 

அன்று வாழ்pவாதாரத்தினை மட்டுமே சிந்தித்த நாங்கள்இன்று அதற்கப்பால் வாழ்வியல் உரிமைகள் பற்றியும் சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்.

வரலாறு எங்களுக்கு நல்ல பல பாடங்களை தந்திருக்கிறது. இதனால் இந்திய வம் சாவளி தமிழர்கள் என்ற சமூகம் சார்ந்த உரிமைகளை அரசியல் யாப்பு ரீதியாக பெற்றுக்கொள்ள வேண்டிய தேவையும் எங்களுக்கிருக்கிறது. இலங்கையின் சமூகங்களை வகைப்படுத்துகின்றபோது இன ரீதியாக நான்காவது இடத்தில் இருக்கின்ற நாங்கள் ஏனைய சமூகங்களை விடவும் பின்தங்கிய நிலையிலிருக்கிறோம்.

Wednesday, March 9, 2016

வடக்கின் தேசியவாத வளர்ச்சி மலையகத்தில் தாக்கம்

வட­ப­குதி தேசிய வாதத்தின் வளர்ச்­சி­யா­னது மலை­ய­கத்­திலும் கணி­ச­மானளவு தாக்­கத்­தினை ஏற்­ப­டுத்தி இருக்­கின்­றது. மலை­யக தேசிய வாதத்­திற்கு இந்­நி­லைமை வித்­திட்­டி­ருக்­கின்­றது. இதனை எவரும் மறுத்­து­விட முடி­யாது என்று பேரா­சி­ரியர் சோ.சந்­தி­ர­சே­கரம் தெரி­வித்தார்.

மலை­யக தேசி­ய­வா­தத்தின் மேலெ­ழும்­புகை தொடர்பில் கருத்து வின­வி­ய­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரி­விக்­கையில், மலை­யக தேசி­ய­வாதம் குறித்த கருத்­துக்கள் தற்­போது அதி­க­மாக வலி­யு­றுத்­தப்­பட்டு வரு­கின்­றன. புத்­தி­ஜீ­விகள் அர­சி­யல்­வா­திகள், சிவில் அமைப்­புகள் உள்­ளிட்ட பல தரப்­பி­னரும் மலை­யக தேசி­ய­வாதம் தொடர்பில் தனது கருத்­து­க்களை வெளிப்­ப­டுத்தி வரு­கின்­றனர். தமிழ் முற்­போக்கு கூட்­டணி மலை­யக தேசிய வாதம் தொடர்பில் கூடு­த­லான கவனம் செலுத்­தி­வ­ரு­வத­னையும் அறி­யக்­கூ­டி­ய­தாக உள்­ளது. கடந்த காலத்தில் கூட அமரர் பெ.சந்­தி­ர­சே­கரன் மலை­யக மக்கள் முன்­ன­ணியை ஏற்­ப­டுத்தி தேசிய வாதத்தின் அடிப்­ப­டையில் இம்­மக்­களை ஒன்­று­ப­டுத்­து­வ­தனை பெரு நோக்­காகக் கொண்டு செயற்­பட்டார் என்­பதே உண்­மை­யாகும். மலை­ய­கத்தில் தேசி­ய­வா­தத்தை தீவி­ர­மாக அறி­முகம் செய்­தவர் என்ற ரீதியில் அமரர் சந்­தி­ர­சே­க­ரனை குறிப்­பிட்டுக் கூற­மு­டியும். 

வட­ப­குதி தேசிய வாதத்தின் வளர்ச்­சி­யா­னது மலை­ய­கத்­திலும் கூட ஒரு காத்­தி­ர­மான தாக்­கத்­தினை ஏற்­ப­டுத்­தி­யது என்­ப­தனை எவரும் மறுத்­து­வி­ட­மு­டி­யாது. மலை­யகம் வட­ப­கு­தியில் இருந்து தொலைவில் இருந்­தாலும் வட­ப­கு­தியில் இடம்­பெற்ற சத்­தி­யாக்­கி­ர­கங்கள் போராட்­டங்கள், அர­சியல் முன்­னெ­டுப்­புகள் என்­ப­வற்றில் மலை­ய­கத்­த­வர்­க­ளுக்கும் பங்­கி­ருக்­கின்­றது. மலை­யக இளை­ஞர்கள் இப்­போ­ராட்­டங்­களில் பங்­கு­கொண்டு இறந்தும் போயுள்­ளனர். 1956,1958,1981,1983 என்று பல்­வேறு கால­கட்­டங்­களில் மலை­யக மக்கள் மீது பல்­வேறு தாக்­கு­தல்கள், கல­வ­ரங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. இதற்கு மலை­யக மக்கள் கார­ண­மல்ல. வட­ப­குதி நிலை­மை­களின் எதி­ரொ­லி­யாக தமிழ் மக்­க­ளுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும் என்ற நோக்­கி­லேயே இத்­த­கைய தாக்­கு­தல்­களும் கல­வ­ரங்­களும் ஏவி­வி­டப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்க விட­ய­மாகும். எனவே வட­ப­கு­தியின் நிலை­மைகள் மலை­ய­கத்தில் எது­வி­த­மான தாக்­கமும் செலுத்­த­வில்லை என்று கூறி­வி­ட­மு­டி­யாது.

மலை­ய­கத்தை பொறுத்­த­வ­ரையில் இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் தொழிற்­சங்க ரீதி­யான முன்­னெ­டுப்­புக்­களை மேற்­கொண்­டது. தொழி­லா­ளர்­க­ளுக்கு சம்­பள உயர்­வினை பெற்­றுக்­கொ­டுத்தல் தொழில் பிணக்­கு­களை தீர்த்து வைத்தல் என்று இ.தொ.கா. பல்­வே­று­பட்ட நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­தது.

தொழி­லா­ளர்கள் பல்­வேறு உரி­மை­க­ளையும் பெற்­றுக்­கொள்­வ­தற்கு அமரர் தொண்­டமான் உந்­து­சக்­தி­யாகத் திகழ்ந்தார். எனினும் தேசி­ய­வாத தலை­வ­ராக தொண்­டமான் பரி­ண­மிக்­க­வில்லை. எனினும் பின்­வந்த தலை­வர்கள் தேசிய வாதத்தின் ஊடாக மலை­யக மக்­களை ஒன்­று­ப­டுத்த முனைந்­த­தையும் எம்மால் அவ­தா­னிக்கக் கூடி­ய­தாக உள்­ளது. கடந்த காலங்களில் திரா­விட முன்­னேற்ற கழ­கத்தின் செல்­வாக்கும் மலை­ய­கத்தில் பிர­தி­ப­லித்­தி­ருந்­தது. அத­னைக்­காட்­டிலும் வட­ப­குதி நிலை­மைகள் அதி­க­ளவில் மலை­ய­கத்தில் பிர­தி­ப­லித்­தன என்பதே உண்மையாகும். இதேவேளை வடபகுதி போராட்டமானது தமிழகத்தில் தமிழ் எழுச்சியை உண்டு பண்ணுவதற்கும் உந்து சக்தியாக அமைந்தது என்பதனை சகலரும் ஏற்றுக்கொள்வர். இலங்கையில் பல அமைப்புகள் ஏற்படவும் இப்போராட்டமே வழிவகுத்தது. இந்த நிலையில் மலையக தேசியவாதம், கிழக்கு தேசிய வாதம் ,முஸ்லிம் தேசிய வாதம் என்று எல்லாவற்றுக்கும் வடபகுதி தேசியவாதமே முக்கிய காரணமாக அமைந்தது என்றார்.

Thursday, March 3, 2016

இளைய தலைமுறையினர் பெருந்தோட்டத்துறையில் வேலை செய்வதற்கு பெரிதாக ஆர்வம் காட்டவில்லை

சமீபத்தில் உலக வங்கியினால் மேற்கொண்ட ஒரு ஆய்வு தெரிவிப்பது, நளவயவந றழசமநசளஸ்ரீலங்காவின் தோட்டப் பகுதிகளில் வேலை செய்யும் தமிழ் சிறுபான்மையினர் வேலை வாய்ப்பினை தேடும் முகமாக பெருந் தோட்டத்துறைப் பகுதிகளை விட்டு அதற்கு வெளியே மிகவும் நகர்ப்புறமாக உள்ள இடங்களை நோக்கி நகர்கிறார்கள் என்று. உலக வங்கியின் ஆய்வு பரிந்துரைப்பது, தோட்டப் பகுதி தமிழர்களின் இளைய தலைமுறையினர் பெருந்தோட்டத்துறையில் வேலை செய்வதற்கு பெரிதாக ஆர்வம் காட்டவில்லை என்தே.

நகர்மயமான பகுதிகளில் வேலைகளைத் தேடுவதில் அவர்கள் பிரச்சினைகளை எதிர்கொண்ட போதிலும்கூட, 2003 முதல் 2012 வரையான காலப்பகுதியில் 15 – 24 வயதினைக் கொண்ட குழுவினர்களைப் பொறுத்தமட்டில் தோட்டப் பகுதிகளை விட்டு வெளியேற விரும்புபவர்களின் எண்ணிக்கையில் சாதனை ஏற்படுத்துமளவுக்கு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் 15 – 19 வயதுடைய குழுவினர்களின் வருடாந்த சராசரி மாற்றம் அல்லது வளர்ச்சி சுமார் 4 விகிதமாகும் மற்றும் 20 – 24 வயதுடைய குழவினருடைய வளர்ச்சி சுமார் 1 விகிதமாகும்.

அதேவேளை தோட்டத்துறையை விட்டு கொழும்பை நோக்கி நகரும் இளைஞர்களிடம் உரிய கல்வித் தரம் இருப்பதில்லை, அவர்கள் தொழிலுக்கு அவசியமான தேவைகளைக் கொண்டிருக்காததால் தொழில் வழங்குவோர் அவர்களுக்கு நல்ல வேலைகளை வழங்கத் தவறிவிடுகின்றனர். அதனால் அவர்கள் சாரதிகள், தொழிற்சாலை தொழிலாளர்கள், கடை உதவியாளர்கள் அல்லது கட்டிடத் தொழிலாளிகள் போன்ற வேலைகளிலேயே ஈடுபடுத்தப் படுகிறார்கள், தோட்டத் தொழில்துறையை விட அவை சிறந்த சம்பளத்தை அவர்களுக்குப் பெற்றுத் தருகிறது.

அவர்களில் ஒரு சிலருக்கு சாரதிகள் அல்லது இயந்திரவினைஞர்கள் போன்ற அரை நிபுணத்துவ தொழில்களையும் தேடிக்கொள்ள இயலுமாக உள்ளது. நிபுணத்துவம் வாய்ந்த, நல்ல ஊதியம் வழங்கும் தொழில்களைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு அவர்களுக்கு இலகுவில் கிடைப்பதில்லை, ஏனெனில் அத்தகைய தொழில்களைக் கையாளுவதற்கு வேண்டிய அவசியமான கல்வித் திறமைகள் அவர்களிடம் இல்லை.

இருப்பினும் உலக வங்கியின் ஆய்வு மேலும் தெரிவிப்பது,15 – 20 வயதுக்கு இடைப்பட்ட குழுவில் உள்ள இளைஞர்களில் 50 விகிதமானவர்கள் ஆரம்பக் கல்வியை மட்டுமே கற்றுள்ள போதிலும் இளைஞர்களில் ஒரு பகுதியினர் உயர் கல்வியை கற்றுள்ளார்கள் என்று. அந்த எண்ணிக்கைகள் மேலும் வெளிப்படுத்துவது, நாட்டின் சராசரி கல்வியறிவு பெற்றவர்களின் விகிதம் மலைநாட்டில் 49 ஆகவுள்ள அதேசமயம் 66 விகிதமான குழந்தைகள் உரிய கல்வியை பெறத் தவறியுள்ளார்கள் என்பதை.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் (சி.டபிள்யு.சி) தலைவர் முத்து சிவலிங்கம் ‘த சண்டே லீடரிடம்’ பேசுகையில் சொன்னது “தோட்டத் தொழிற்துறையைத் தவிர சில்லறை கடைகள் மற்றும் தொடர்பாடல் மையங்கள் போன்ற சேவைத் துறைகளிலும் அவர்களுக்கு வேலை வாய்ப்புகளுக்கான சந்தர்ப்பங்கள் உள்ளன” என்று. “அவர்களுடைய இந்திய தமிழர் என்கிற இனத்தின் காரணமாகவும் மற்றும் தோட்டத் தொழிலாளி என்கிற அடையாளத்தின் காரணமாகவும் அவர்கள் மேலும் பாரபட்சத்துக்கு உள்ளாவதுடன் அவர்களின் நற்பெயருக்கு களங்கமும் உண்டாகிறது, மேற்கூறிய இரண்டும் தோட்டத் தொழில்துறையைச் சாராத வாய்ப்புக்களை அவர்கள் தேடிச்செல்வதற்கு தடைக்கல்லாக இருக்கின்றன” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

15 – 30 வயதுக்கு இடைப்பட்ட குழுவில் உள்ள சுமார் 60,000 இளைஞர்கள் தற்சமயம் தோட்டத் தொழில் துறையில் ஈடுபட்டுள்ளார்கள் மற்றும் இந்த எண்ணிக்கை பெருந்தோட்டங்களை விட்டு வெளியேறும் நடவடிக்கை விரைவாக இடம்பெற்று வருவதால் எதிர்வரும் வருடங்களில் குறைவடையக் கூடும். தோட்டத் தொழில்துறையில் உள்ள குடும்பங்களில் சில தங்கள் குடும்பத்தில் உள்ள பொருளாதாரப் பிரச்சினைகள் காரணமாக அவர்களின் பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்பத் தவறிவிடுவதாகச் சொல்லப்படுகிறது, இதன் காரணமாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தோட்டப்பகுதி இந்தியத் தமிழர்கள் ஆரம்பக் கல்வியை பின்பற்றுவதற்கான உதவிகளைச் செய்வதற்கான பணியில் தற்சமயம் ஈடுபட்டு வருகிறது.

எனினும் தொழிற்சங்கம், பெருந்தோட்டத் தொழில்துறையில் உள்ள பெற்றோர்களுக்கு அவர்களின் பிள்ளைகளின் எதிர்காலம் மற்றும் அவர்களின் வாழ்க்கையில் கல்வி ஏற்படுத்தும் பங்களிப்பு என்பனவற்றின் முக்கியத்தை பற்றி எடுத்துக்காட்டுவதற்காக பல விழிப்புணர்வு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. எனினும் அவர்களில் சிலர் தங்கள் பிள்ளைகளை உயர்கல்வி பெறுவதற்கு அனுப்பவேண்டும் என்பதில் பிடிவாதமாக உள்ள அதேவேளை மற்றும் சிலர் தங்கள் பிள்ளைகள் தோட்டத் தொழில் துறையில் வேலை செய்வதையே விரும்புகிறார்கள். தோட்டப் பகுதி தமிழர்களின் இளைய தலைமுறையினர் சிறந்த வேலை வாய்ப்புகளை பெறுவதற்கு உதவி செய்யும் சேவை மையங்களும் உள்ளன. இந்த மையங்கள் இளைஞர்களுக்கு தையல் போன்ற பல துறைகளிலும் பயிற்சிகளை வழங்கி வருகின்றன. ஆயினும்கூட பெண்கள் தொகையினரின் கல்வி நிலையையும் மற்றும் ஆண்கள் தொகையினரின் கல்வி நிலையையும் ஒப்பிடும் போது, பெண்கள் மிகவும் திறமையாக செயற்படுகிறார்கள் மற்றும் தோட்ட அலுவலகங்கள் மற்றும் நிருவாகத் திணைக்களங்களிலும் அவர்கள் வேலை செய்து வருகிறார்கள், அத்துடன் தொழிலாளர்களாய் வேலை செய்வது அரிதாகியும் வருகிறது. மலைநாட்டில் உள்ள பாடசாலைகளில் வசதிகளுக்கு குறைவில்லை, அவைகளும் நாட்டின் ஒரு பகுதியானபடியால் அங்கு இலவசக் கல்வி வழங்கப்படுகிறது மற்றும் ஒரு அரசாங்கம் வழங்கக்கூடியளவு வசதிகளும் வழங்கப்படுகின்றன, ஆனால் கல்வியின் முக்கியத்துவத்தைப் பற்றி பெற்றோர்களுக்கு போதிக்க வேண்டியுள்ளது என்று சிவலிங்கம் தொடர்ந்து கூறினார்.

கொழும்பு மற்றும் மேல் மாகாணத்தில் வேலை செய்துவரும் தோட்டப் பகுதி தமிழ் தொழிலாளர்களுக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உதவிகளைச் செய்து வருகிறது. சில தொழில் தருனர்கள் இந்த தொழிலாளர்களின் ஊதியத்தை செலுத்த தவறிய வேளைகளில்  அவர்களுடன் தொடர்புகளை மேற்கொண்டு பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன என்றும் சிவலிங்கம் தெரிவித்தார்.

மறுபுறத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கும் அவர்களது செயல்திறனின் அடிப்படையில் வருடாந்தம் ஊதிய உயர்வு வழங்கப்பட்டு வருகிறது, ஆனால் இந்த வருடம் ஸ்ரீலங்கா தேயிலைக்கான சந்தை அரசியல் செற்பாடுகள் காரணமாக குறைவடைந்துள்ளதாக கூறப்படும் காரணத்தால் அவர்களுக்கு ஊதிய உயர்வுகள் வழங்கப்படவில்லை. இதற்கிடையில் தோட்டத் தொழில் துறையில் இளையோரின் எண்ணிக்கை வீழ்ச்சி அடைவதற்கு முரணாக 60 வயதும் அதற்கு மேற்பட்டதுமான மூத்த பிரஜைகளின் எண்ணிக்கை வருடாந்தம் சராசரி 8 விகிதத்தால் அதிகரித்துள்ளது. இளைய தலைமுறையினரால் அதைவிட்டு வெளியேற முடியும் ஆனால் மூத்த குடிமக்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுக் கொள்வதற்கான மாற்றீடான வாய்ப்புகள் கிடையாது, ஆதலால் அவர்கள் தங்கள் வாழ்க்கையை கொண்டு நடத்தவதற்காக ஓய்வு பெறும் வரை தோட்டங்களிலேயே வேலை செய்ய முனைகிறார்கள்.

எனினும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ஜே.சிறிரங்கா ‘த சண்டே லீடரிடம்’ தெரிவித்தது. இந்தப் பிரச்சினை மாகாண கல்வி திணைக்களங்களில் உள்ள சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள் மற்றும் அரசாங்கம் என்பனவற்றாலேயே தீர்க்கப்பட வேண்டும். இளைய தலைமுறையினர் தொழில் திறனுள்ள வேலைகளை நோக்கி நகர்வதை ஊக்கப்படுத்த வேண்டும், இதனால் அவர்கள் உயர்கல்வியை தொடரவேண்டியதில்லை. சமீபத்தைய கடந்த காலங்களில் தோட்டப்பகுதி தமிழர்களான பல அங்கத்தவர்கள் கல்வி ராஜாங்க அமைச்சர்களாக அமைச்சரவையில் பதவிகளை பெற்றுக்கொண்ட போதிலும், அவர்கள் வாக்குகளில் மட்டுமே அக்கறை காட்டுகிறார்கள் ஆனால் அவர்களது சமூத்து மக்களைப்பற்றி அக்கறை காட்டுவதில்லை, இதன் காரணமாக இந்தப் பிரச்சினை இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளதுடன் மற்றும் ஒரு நிலையான தீர்வுக்கும் வரவேண்டி உள்ளது என அவர் குற்றம் சாட்டினார்.

“அரசாங்கம் இந்தப் விடயத்தை ஒரு தேசிய பிரச்சினையாகப் பார்க்கவேண்டுமே தவிர, மலையக மக்களின் வாழ்க்கைப் பாணியை அபிவிருத்தி செய்யும் ஒரு உள்ளுர் பிரச்சினையாக அல்ல. தெற்காசியாவில் உள்ள நாடுகள் மத்தியில் கல்வியில் முதலிடம் பெற்றிருப்பது ஸ்ரீலங்காவே என்று பல ஆய்வுக் கற்கைகள் தெரிவித்துள்ளன, ஆனால் நுவரெலியா மாவட்டத்தை பொறுத்தமட்டில் சிறிய தொகையினரான இளைய தலைமுறையினர் வெறுமே ஆரம்பக் கல்வியை மட்டுமே பின்தொடர்வதால் அந்த மாவட்டம் கடைசி இடத்தில் உள்ளது” என அவர் மேலும் தெரிவித்தார்.

தோட்டப்பகுதி மக்கள் வாக்களித்து பாராளுமன்றம் சென்ற பொறுப்புள்ளவர்கள் இந்தப் பிரச்சினையை கவனத்தில் கொள்ளவேண்டும், மற்றும் இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்காக ஒரு நிலையான தீர்வையும் வழங்கவேண்டும் அத்துடன் கைவிடப்பட்ட நிலையில் உள்ள பெருந்தோட்ட தொழில்துறை இளைஞர்களுக்கு சிறப்பான எதிர்காலம் கிடைப்பதை உறுதிப் படுத்தவும் வேண்டும்.

தேனீ மொழிபெயர்ப்பு எஸ்.குமார்

நன்றி- தேனீ இணையம்

கூட்டு ஒப்பந்த மூலம் கிடைக்கும் சம்பள உயர்வே நிரந்தரம்

பெருந்தோட்டக் கம்பனிகளுக்கும் தொழிற்சங்கங்களுக்குமிடையே இடம்பெறும் கூட்டு ஒப்பந்தம் மூலம் கிடைக்கும் சம்பள உயர்வே நிரந்தரமாகும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான டி.வி.சென்னன்  தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் அரசு சார்பு தொழிற்சங்கங்கள் கூறுவதைப்போல் 2,500 மூபா சம்பள உயர்வு என்பது தோட்டத் தொழிலாளர்களுக்கு முழுமையாக கிடைக்கப் போவதில்லை. வேளைநாட்களுக்கு அமையவே அது வழங்கப்படும் என்றார்.

பெருந்தோட்டங்களில் பெண் தொழிலாளர்கள் இல்லா விட்டால் தோட்டங்களில் தொழிற்சங்கங்கள் இருக்கவே முடியாது. பெருந்தோட்டங்களும் பெண் தொழிலாளர்களை மையப்படுத்தியே இருந்து வருகின்றன. இலங்கையில் மட்டுமல்ல சர்வதேச ரீதியிலும் இப் பெண் தொழிலாளர்கள் குறித்து பேசப்பட்டு வரும் நிலைமையினை அவதானிக்க முடிகிறது என்றார். பெருந்தோட்ட மக்களின் உரிமைகள் தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களில் பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டதுடன் பலியான சம்பவங்களும் கடந்த காலங்களில் இடம்பெற்றுள்ளன. 

பெருந்தோட்ட பெண்கள் எதிர்வரும் காலங்களில் இடம்பெறவிருக்கும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் ஊடாக அரசியலில் பிரவேசிக்க வேண்டும். அதன் மூலம் அப்பெண்கள் வெற்றி பெற்று பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து அவர்களாகவே குரல் எழுப்ப வேண்டும். அதனடிப்படையில் பெண்களுக்கான ஆரோக்கிய சூழல் ஏற்படும்.