Sunday, October 4, 2015

மண்சரிவு அபாயம் - 220 பேர் பாடசாலையில்

சீரற்ற கால­நிலை மற்றும் மண்­ச­ரிவு அபாயம் கார­ண­மாக பண்­டா­ர­வளை அம்­பிட்­டி­கந்த பெருந்­தோட்­டத்தில் 67 தொழி­லாளர் குடும்­பங்­களைச் சேர்ந்த 220 பேர் கடந்த சனிக்­கி­ழமை அங்­கி­ருந்து வெளியேற்­றப்­பட்டு அம்­பிட்­டி­கந்த தமிழ் வித்­தி­யா­ல­யத்தில் தங்க வைக்­கப்­பட்­டுள்­ளனர். மேற்­படி தோட்­டத்தில் மண் சரிவு அபாயம் ஏற்­பட்­டதைத் தொடர்ந்து, அங்­கி­ருந்து தோட்டத் தொழி­லா­ளர்­களை வெளியே­று­மாறு பிர­தேச செய­லாளர் உத்­த­ர­விட்டும் அவ் உத்­த­ர­வினை தொழி­லா­ளர்கள் செவி­ம­டுக்­க­வில்லை. அதை­ய­டுத்து பொலி­ஸாரின் துணை­யுடன் தோட்டத் தொழி­லா­ளர்கள் உட­ன­டி­யாக குறிப்­பிட்ட இடத்­தி­லி­ருந்து வெளியேற்றப்பட்டு அம்­பிட்­டி­கந்த தமிழ் வித்­தி­யா­ல­யத்தில் தங்­க­வைக்­கப்­பட்­டனர். இவர்­க­ளுக்­கான அனைத்து வச­தி­க­ளையும் அனர்த்த முகா­மைத்­துவ அமைச்சுப் பதுளை மாவட்டப் பணி­யகம் மேற்­கொண்­டுள்­ளது.
 
அத்­துடன், ஹப்­புத்­தளைப் பகு­தியின் உட­வே­றியா தோட்­டத்தின் 50 க்கும் மேற்­பட்ட தொழி­லா­ளர்கள், அங்­கி­ருந்து வெளியேற்­றப்­பட்டு, பாது­காப்­பான இடங்­களில் குடி­ய­மர்த்­தப்­பட்­டுள்­ளனர்.
கால­நிலை மாற்­றத்­தினால் பதுளை மாவட்ட மக்­களின் இயல்பு வாழ்க்கை முற்று முழுதாக பாதிக்கப்பட்டுள்ளது தொடர்ந்தும் மழை பெய்து கொண்டிருப்பதால் இந்நிலை ஏற்பட்டுள்ளது.