Tuesday, August 30, 2016

அமரர் சௌமி­ய­மூர்த்தி தொண்­டமான் - 103ஆவது ஜனன தினம்

மலை­யக மக்­களின் பெரும் சொத்­தா­கவும், தொழிற்­சங்­கங்­க­ளுக்கு மூலா­தா­ர­மாக விளங்­கி­ய­வரும் ஒடுக்­கப்­பட்ட மக்­களின் நல்­வாழ்­வுக்கும் தன்­னையே அர்ப்­ப­ணித்த இ.தொ.கா ஸ்தாபகத் தலைவர் அமரர் சௌமி­ய­மூர்த்தி தொண்­டமான் 103ஆவது ஜனன தின­மான இன்று அவரை மலை­ய­கமும், மலை­யக மக்­களும் நினைவு கூரும் நன்­னா­ளாகும்.
அன்னார் தமது 26 வய­தி­னி­லேயே இலங்கை இந்­திய காங்­கி­ர­சிலும், இலங்கை இந்­திய காங்­கிரஸ் தொழி­லாளர் சங்­கத்­திலும் இணைந்து பணி­யாற்றத் தொடங்­கினார். இதைத் தொடர்ந்து அவ­ரது தொழிற்­சங்கப் பய­ணமும் அதன் பின் அர­சியல் வாழ்வும் கரடு முர­டா­கவும், சோத­னை­களும், வேத­னை­களும், உள்­ள­டங்­கி­ய­தா­கவே இருந்­தது.
ஆனால் இவை ஒவ்­வொன்றும் இந்­திய வம்­சா­வளி மக்­களின் தொழிற்­சங்க, சமூக, அர­சியல், பொரு­ளா­தார மறு­ம­லர்ச்­சிக்கும், வெற்­றிக்கும் கார­ணி­களாய் அமைந்­தன. இவைகள் அனைத்தும் சரித்­திரம் படைக்­கப்­பட்­டவை.
முதற்கண் அமரர் தொண்­டமானை நாம் அனை­வரும் மிக மரி­யா­தை­யுடன் ஐயா என்று தான் அழைப்போம். எனவே அவர் பிறந்த தின நினை­வு­களை வெளிப்­ப­டுத்தும் பொழுது அவர் எமது சமூ­கத்­திற்கு செய்து ஈட்­டிய அரும்­பெரும் காரி­யங்­களை உங்­க­ளுடன் பகிர்ந்து கொள்­வதில் மிக்க மகிழ்ச்சி அடை­கின்றேன்.
அமரர் தொண்­டமான் தொழிற்­சங்­க­வா­தி­யாக ஆற்­றிய சேவைகள், போராட்­டங்கள் பல. இவரின் தொழிற்­சங்க நட­வ­டிக்­கை­களே அர­சியல் பிர­வே­சத்­திற்கு ஏது­வாக இருந்­தது. இவை­களில் வர­லாறு காணும் போராட்­ட­மாக உரு­ள­வள்ளி போராட்­ட­மாகும். மற்றும் முல்­லோயா, கந்­த­ஹேன, ஹைபொரஸ்ட், வன­ராஜா, கலா­பொக்க, மொண்­டி­கி­றஸ்டோ, கடி­யேன்­லேன போன்­றவை. தொழி­லா­ளர்­களின் உரி­மை­களை பெறு­வ­தற்­கான நடாத்­திய போராட்­டங்­க­ளாகும்.
அமரர் தோட்­டப்­புற மக்­களின் தொழிற்­சங்க, அர­சியல் போராட்­டங்­க­ளோடு நிற்­க­வில்லை. தோட்­டப்­புறக் கல்­வியை மேம்­ப­டுத்த பல முயற்­சி­களை எடுத்­தி­ருந்தார். அதன் பய­னா­கவே தோட்­டப்­புற பாட­சா­லைகள் அனைத்தும் இன்று அர­சாங்க பாட­சா­லை­க­ளாக ஆகி உள்­ளன. தோட்­டப்­புற சந்­த­திகள் இன்று அர­சாங்க உத்­தி­யோ­கங்­க­ளிலும், மருத்­துவ, பொறி­யியல் ஏனைய துறை­க­ளிலும் நுழைய வாய்ப்பு ஏற்­பட்டு இருக்­கி­றது.
விசே­ட­மாக கூறினால் இந்­திய வம்­சா­வ­ளி­யி­னரை நாடற்­றவர் என்ற கூற்­றி­லி­ருந்து விடு­வித்­தவர் அமரர் தொன்­ட­மானே! அவரின் விடா­மு­யற்­சி­யினால் தான். நாடற்­ற­வர்­க­ளுக்கு பிரஜா உரிமை வழங்கும் விசேட சட்டம். 1988 நவம்பர் 9ம் திகதி பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­பட்­டது. இந்­திய வம்­சா­வ­ளி­யினர் இந்த நாட்டின் பிர­ஜைகள் ஆனார்கள். நாற்­பது வரு­டங்­க­ளாக அர­சியல் இழு­ப­றி­களால் தீர்வு காணாத பாரிய பிரச்­சினை தீர்ந்­தது. இவரின் சாணக்­கிய அணுகு முறை­யி­னாலும் இவர் தலைமை தாங்­கிய இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் பலத்­தி­னாலும், இது சாத்­தி­ய­மா­னது. இது இல ங்கை சரித்­தி­ரத்­திலும், சட்­ட­வாக்­க­த்திலும் தொண்­டமான் செய்த பெரிய சாத­னை­யாக விளங்­கு­கி­றது.
இவர் வெற்றி கண்ட சாத­னைதான் 1989 ஏப்ரல் 26ஆம் திகதி பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­பட்ட வாக்­கு­ரிமை வழங்­கு­வ­தற்­கான திருத்­தச்­சட்டம். இந்த சட்டம் புதி­தாக பிர­ஜா­வு­ரிமை பெற்ற இந்­திய வம்­சா­வ­ளி­யி­னரை தம்மை வாக்­கா­ள­ராக பதிவு செய்த ஏற்­பா­டாகும். இந்த இரண்டு சாத­னை­க­ளினால் தான் இன்று இந்­திய வம்­சா­வளி மக்கள் தலை­நி­மிர்ந்து, ஏனைய சமூ­கத்­த­வர்­க­ளோடு சரி­ச­மமாய் உரிமை பெற்று அர­சியல், பொரு­ளா­தார, சமூக, கல்வி மற்றும் அனைத்து துறை­க­ளிலும் பங்கு கொள்ள வாய்ப்பு பெற்­றி­ருக்­கி­றார்கள். இவர் கல்­வித்­து­றையில் ஈட்­டிய சேவைகள் பல. தோட்டப் பாட­சா­லை­களை அர­சாங்கம் பொறுப்­பேற்று நடத்த அய­ராது பாடு­பட்டார். தோட்டப் பாட­சா­லைகள் அபி­வி­ருத்­தியில் மிக அக்­கறை கொண்டார். சிறி­பாத கல்­வியியல் கல்­லூ­ரியில் தொழி­லா­ளர்­களின் பிள்­ளை­க­ளுக்கு 75 வீதம் இட ஒதுக்­கீட்­டுக்கு அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் கோரி வெற்றி பெற்­ற­வரும் அமைச்சர் சௌமி­ய­மூர்த்தி தொண்­ட­மானே. இந்த அங்­கீ­காரம் பெற அமைச்­ச­ரவை விஞ்­ஞா­ப­னத்தை வரை­வ­தற்கு நான் கிரா­மிய கைத்­தொழில், உல்­லா­சத்­துறை அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செய­லா­ள­ராக இருக்கும் பொழுது அமைச்சர் தொண்­ட­மானால் பணிக்­கப்­பட்­டி­ருந்­தமை எனது பாக்­கி­யமாய் கரு­து­கிறேன்.
அன்­னாரின் நாமத்தை எதிர்­கால சந்­த­தி­யினர் எடுத்துச் செல்ல வேண்டும். அவரால் ஸ்தாபிக்­க­ப்பட்ட இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் இன்று ஒரு பொிய ஆல­ம­ரமாய் எமக்கு அர­சியல், பலத்­தையும், சமூக, பொரு­ளா­தார வளர்ச்­சிக்கு உந்து சக்­தி­யா­கவும் விளங்­கு­கின்­றது. நக­ர­ச­பைகள், மாந­க­ர­ச­பைகள், பிர­தே­ச­ச­பைகள், மாகா­ண­ச­பைகள், பாரா­ளு­மன்றம் அனைத்­திலும் எமக்கு அர­சியல் பிர­தி­நி­தித்­துவம் இருக்­கி­றது. இந்த பலத்தை நாம் இப்­பொ­ழுது விசே­ட­மாக மத்­திய மாகா­ணத்­திலும், ஊவா மாகா­ணத்­திலும், சப்­ப­ர­க­முவ மாகா­ணத்­திலும் நிரூ­பித்­துள்ளோம். இதை நாம் விரி­வு­ப­டுத்தி இந்­திய வம்­சா­வளி மக்கள் வாழும் ஏனைய மாகா­ணங் களிலும் அர­சியல் பலத்தை நிலை­நாட்ட வேண்டும். அமரர் தொண்­டனைத் தொடர்ந்து இன்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸுக்கு தலைமை தாங்கும் அவரின் பேரனாரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான கௌரவ ஆறுமுகன் தொண்டமானின் பணி இந்நாட்டு மக் களுக்கு விசேடமாக இந்திய வம்சாவளி மக்களுக்கு மென்மேலும் போய்ச்சேர அனைவரும் ஒன்றுபடல் வேண்டும். அவ ரின் கைகளைப் பலப்படுத்த வேண்டும்.
ஆகவே, இன்றைய நாளில் அமரர் விட்டுச் சென்ற பணிகளை கௌரவமாக நினைவு கூர்ந்து எமது அஞ்சலியை அவர் பாதங்களுக்கு சமர்ப்பிக்கின்றோம்.
கா.மாரிமுத்து
உப தலைவர் 

Monday, August 29, 2016

தோட்டத் தொழி­லா­ளர்கள் பக­டைக்­காய்­களா?


சம்­பள விவ­கா­ரத்தில் தோட்டத் தொழி­லா­ளர்­களை அர­சி­யல்­வா­தி­களும் தொழிற்­சங்­க­வா­தி­களும் பக­டைக்­காய்­க­ளாக்கி விளை­யா­டு­கின்­றனரா என இலங்கை தேசிய தொழி­லாளர் காங்­கி­ரஸின் பொதுச் செய­லாளர் இரா.தங்­கவேல் கேள்வியெழுப்பியுள்ளார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்து குறிப்­பி­டு­கையில், 2015ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் திகதி கூட்டு ஒப்­பந்­தத்தில் விதிக்­கப்­பட்ட நிபந்­த­னைக்கு ஏற்ப ஏற்­க­னவே முடிவு செய்த சம்­பளத் தொகை மீள்­ப­ரி­சீ­ல­னைக்­கான காலம் முடி­வ­டைந்து கூட்டு ஒப்­பந்தம் ஏற்­ப­டுத்­தப்­பட்ட அடிப்­படை கார­ணி­க­ளுக்கு அமை­வாக புதிய சம்­பள நிர்­ணயம் இது­வ­ரை­காலம் இழுத்­த­டிப்­ப­தற்கு முக்­கிய காரணம் தோட்ட முத­லா­ளிமார் சம்­மே­ள­னமும், அவர்­க­ளுக்கு உந்துசக்­தி­யாக செயல்­ப­டு­கின்ற போலி தொழிற்­சங்­கங்­க­ளு­மே­யாகும்.

ஒவ்­வொரு முறையும் சம்­பளப் பேச்சு வார்த்­தையின் போதும் தொழி­லா­ளர்கள் சார்பில் முன்­வைக்­கப்­பட்ட நியா­ய­மான சம்­பளக் கோரிக்­கை­களைத் தட்டிக் கழிப்­ப­தையே தமது செயற்­பா­டாக முன்­னெ­டுத்து வந்­தது கண்­கூடு.

இது ஒன்றும் தொழிற்சங்­கங்­க­ளுக்கோ தொழி­லா­ளர்­க­ளுக்கோ புதிய அனு­பவம் அல்ல. மாறாக தோட்ட முத­லா­ளிமார் சம்­மே­ள­னத்­தி­னதும், சில முத­லா­ளி­மார்­க­ளதும் கொள்ளை இலா­பத்தைக் குறி­வைத்தே செயற்­ப­ட­ுவது முத­லா­ளி­மார்­க­ளது ஆதங்கம் என்­பது அனை­வரும் அறிந்­ததே.

அதே போன்று தொழி­லா­ளர்கள் பெற்ற சம்­பள உயர்வு அனைத்­துமே போராடிப் பெற்­றதே என்­பது மறுக்­கவோ மறைக்­கவோ முடி­யாத வர­லாற்று உண்மை.

ஆனால் இந்த முறை தோட்ட முத­லா­ளிமார் சம்­மே­ள­னத்தின் செயற்­பா­டு­க­ளுக்கும் அதன் விடாப்­பி­டித்­தன்­மைக்கும், முரட்டுப் பிடி­வா­தத்­திற்கும் பின்­ன­ணியில் மலை­யக தொழிற்­சங்­க­வா­திகள் என்று தம்மைக் கூறிக் கொண்டு தோட்டத் தொழி­லா­ளர்­களின் நியா­ய­மான கோரிக்­கைக்கு முட்­டுக்­கட்­டை­யாக திகழ்­வது குரோத அர­சியல் தொழிற்­சங்க கோட்­பாட்டைக் கொண்ட சக்­தி­க­ளே­யாகும்.

இச்­சக்­திகள் இலங்கைத் தொழி­லாளர் காங்­கி­ரஸின் ஆயிரம் ரூபா சம்­பளக் கோரிக்­கையை தோட்ட முத­லா­ளிமார் ஏற்­றுக்­கொண்டால் தமது கையா­லாகத் தன்மை வெளிப்­பட்­டு­விடும், அதே நேரத்தில், தொழி­லாளர் சம்­பள உயர்வைப் பெற்றுக் கொடுப்­ப­தற்கு தாம் தடை­யாக உள்ளோம் என்ற உண்மை வெளிப்­பட்டு விடுமே என்­பதே மூலக்­கா­ரணம்.

இந்த சக்­திகள் மலை­யக வர­லாற்­றி­லேயே அனைத்து சம்­பள உயர்­வு­க­ளையும் பெற்றுக் கொடுத்­தது இலங்கைத் தொழி­லாளர் காங்­கிரஸ் என்ற உண்­மையை உணர்ந்து கொள்ள வேண்டும்.

அதே­வேளை இ.தொ.காங்­கி­ரஸின் கோரிக்­கை­க­ளுக்கு வர­லாற்று ரீதி­யாக முட்­டுக்­கட்டை போட்ட சக்­தி­க­ளையும் அவர்­க­ளது முக­மூ­டிகள் அவ்­வப்­போது கிழிக்­கப்­பட்­டன என்­ப­தையும் புரிந்து கொள்ள வேண்டும். எது எப்­படி இருந்த போதிலும் கடந்த 26 ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் முன்­வைத்த சம்­பளக் கோரிக்கை மிக நியா­ய­மா­னதும், தொழி­லா­ளர்­களின் இன்­றைய பொரு­ளா­தார நிலைப்­பாட்டை மாத்­தி­ர­மன்றி, தோட்­டங்கள் தமது பொரு­ளா­தார வனப்­பையும் எதிர்­கால வளர்ச்­சி­யையும் மைய­மாகக் கொண்டே முன்­வைக்­கப்­பட்ட கோரிக்கை என்­ப­தையும், தோட்டத் தொழி­லா­ளர்­க­ளி­னதும், தோட்டத் தொழிற்­சங்­கங்­க­ளி­னதும் அக்­கறை கொண்ட அனை­வரும் ஏற்றுக் கொள்­வார்கள் என்­பது எமது உறு­தி­யான நம்­பிக்கை.

எனவே இந்த தொழிற்­சங்க கூட்டு ஒப்­பந்த பேச்சுவார்த்­தையை முன்­னெ­டுப்­ப­தற்கு வகை செய்யும் விதத்தில் தொழில் அமைச்சர் டபிள்யூ.டி.ஜே. சென­வி­ரட்ன, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகியோர் தலை­யிட்டு முட்டுக் கட்­டையை தகர்ப்பதற்கு ஆக்­க­பூர்­வ­மான முறையில் செயற்­பட வேண்டும்.

இல்லை என்றால் மலையகத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் முன்வைத்துள்ள நியாயமான சம்பளக் கோரிக்கையை வென்றெடுப்பதற்கு, தொழி

லாளர்கள் எப்படி இந்த அரசை ஆட்சி யில் அமர்வதற்கு எவரது சிபாரிசும் வழிகாட் டலும் இன்றி செயற்பட்டார்களோ அதே போன்று இந்த ஆயிரம் ரூபா சம்பளக் கோரிக்கையை வென்றெடுப்பதற்கும் வழமை யான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுப டும் எனவும் தெரிவித்தார்.

பொருத்துவீடு: மலையகத்துக்குப் பொருந்துமா?

போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வடக்கு கிழக்கில் அமைக்கப்படவிருந்த 65,000 இரும்பு பொருத்து வீடுகள் எதிர்ப்பு காரணமாக செயலிழந்துள்ள நிலையில் அது மலையகத்திற்குப் பொருத்தமானதா என்பது பற்றி பரிசீலிக்கும் படி தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர், அமைச்சர் மனோ கணேசன் பிரதமரிடம் சிபாரிசு செய்திருப்பதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.

“அடுத்த ஐந்து வருடங்களில் ஐம்பதாயிரம் தனி வீடுகள் மலைநாட்டில் கட்டப்படுவது தமிழ் முற்போக்குக் கூட்டணியின் இலக்குகளில் ஒன்றாகும். இதன் மூலமாகவே தோட்டத்துறை வாழ் தமிழ் மக்களின் லயன் வாழ்க்கை முறைமையை முழுமையாக ஒழித்து, வீடில்லா பிரச்சினையை தனி வீடுகள் மூலம் தீர்க்க முடியும். இந்நிலையில், தனி வீடுகளை அமைப்பதில் நாம் எதிர்கொள்ளும் பிரதான பிரச்சினை வீடுகள் கட்டப்படுவதற்கான மூலப்பொருட்களை மலைநாட்டில் திரட்டுவதாகும். இதனால், பாரிய தாமதம் ஏற்படுகிறது. ஆகவே, மாற்று மூலப்பொருட்களைப் பயன்படுத்தி உதிரிப் பாகங்களை தொழிற்சாலைகளில் செய்து, அவற்றைக் கொண்டு வந்து பொருத்தி வீடுகளை சடுதியாகக் கட்டும் திட்டத்தை நாம் ஆராய வேண்டும். உலகின் பல குளிர்வலய பகுதிகளில் சடுதியாக வீடுகள் கட்டப்பட வெற்றிகரமாக வழி ஏற்படுத்தியுள்ள பொருத்து வீட்டுத் திட்டம், மலைநாட்டில் நடை முறையாக்கப்பட வாய்ப்பு உள்ளதா என்பதை நாம் ஆலோசித்து பார்க்கவேண்டும். இத்திட்டம் மலையக சீதோஷ்ண நிலைமைகளுக்கு பொருந்துமா என்பது விஞ்ஞானபூர்வமாக பரிசீலிக்கப்பட்டு நடைமுறையாக்கப்படுமானால் அடுத்த ஐந்து வருடங்களில் ஐம்பதாயிரம் தனிவீடுகள் என்ற எங்கள் திட்டம் மலையகத்தில் வெற்றி பெற பெரும் வாய்ப்பு உள்ளது.”

அமைச்சர் மனோகணேசன் மேற்கண்டவாறு தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.

பொருத்து (இரும்பு) வீட்டுத்திட்டம் அமுல்படுத்துவது குறித்து பரிசீலித்து, ஆலோசித்து, ஆராய்ந்து பார்த்து முடிவெடுப்போம் என்ற தீர்மானத்துக்கு அமைச்சர் மனோ கணேசன் வர முன்னர் உண்மையிலேயே இந்த வீட்டுத்திட்டம் 200 வருடங்களுக்கும் மேலாக லயன் அறைகளில் வாழ்ந்துவரும் மக்களுக்கு பொருந்துமா? என்பது குறித்து சிந்தித்துப் பார்ப்பது அவசியமாகிறது.

வடக்கு – கிழக்கு பகுதிகளில் பொருத்து வீடுகள் கட்டப்படுவதற்கு எதிர்ப்புகள் வலுத்தமை வெறுமனே சீதோஷ்ண நிலைமையை மட்டும் காரணமாக முன்வைத்து அல்ல என்பது அமைச்சர் மனோ கணேசனும் அறிந்திருக்க வாய்ப்பிருக்கிறது.

சீதோஷ்ண நிலைமையைத் தவிர ஏனைய அனைத்து பிரச்சினைகளும் மலையகத்துக்கும் பொருந்தும் என்பதை விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்க வேண்டிய அவசியம் இருக்காது என்றே நான் நினைக்கிறேன்.

இந்தப் பொருத்து வீட்டுத் திட்டம் தொடர்பான பின்னணியை கொஞ்சம் பார்த்துவிட்டு வருவோம்.

‘ஆர்சிலர் மிட்டல்’

வடக்கு கிழக்கில் நிறுவப்படவிருந்த பொருத்து வீட்டுத்திட்டத்தை ஆர்சிலர் மிட்டல் எனும் பல்தேசிய நிறுவனம்தான் அமுல்படுத்தப் போவதாக மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் நாடாளுமன்றில் குறிப்பிட்டிருந்தார். அந்த நிறுவனம் தெரிவு செய்யப்பட்டதில் பல குளறுபடிகள் இருப்பதாக ‘சண்டே டைம்ஸ்’ பத்திரிகை கட்டுரைகள் வெளியிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

கடந்த வருடம் சர்வதேச பங்குசந்தையில் ஆர்சிலர் மிட்டலின் பங்குகளில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டிருந்தது. அதனால், தனது இலாபப்பங்கை இரத்துச்செய்து, நிறுவன விஸ்தீகரிப்புக்கான திட்டங்களை நிறுத்தி, ஏற்கனவே இயங்கிக்கொண்டிருக்கின்ற தொழிற்சாலைகளை மூடி நிறுவனத்தின் மொத்த கடன் தொகையாகிய 15.7 பில்லியன் அமெரிக்க டொலர்களை மீளக்கட்டுவதற்கு முயற்சி எடுத்துக்கொண்டு இருக்கின்றது.

இந்த நிலையில், தனது இருப்பில் இருக்கின்ற – விற்கமுடியாமல் இருக்கும் இரும்புகளை இலங்கையில் குவிப்பதனால் இலாபத்தை ஈட்ட முடியும் என்றும், இதனாலேயே இலங்கை அரசுக்கு சில சலுகைகளை வழங்குகிறது என்றும், இதே திட்டத்தை கல்வீடுகளாக கட்டித்தருமாறு கேட்டிருந்தால் இச்சலுகைகள் கிடைத்திருக்காது என்றும் பொறியியலாளர் கலாநிதி. முத்துகிருஷ்ண சர்வானந்தன் குறிப்பிடுகின்றார்.

ஆகவே, விற்கமுடியாமல் இருக்கின்ற இரும்புகளை கொட்டும் இடமாக இலங்கையின் வடக்கு கிழக்கை மீள்குடியேற்ற அமைச்சு முதலில் தெரிவுசெய்திருந்தது. அவர்கள் விழித்தெழ தற்போது மலையகத்தை தெரிவுசெய்திருக்கிறது தமிழ் முற்போக்குக் கூட்டணி.

ஏனைய பிரச்சினைகள்

இந்த வீட்டுத்திட்டத்தின் கீழ் பொருத்தப்படும் வீடுகள் இரும்பிலான கட்டமைப்புக்களினையும், ஏற்கனவே தொகுதியாக்கப்பட்ட அமைப்புக்களினையும் கொண்டிருக்கும். ஒவ்வொரு வீட்டுக்குமான செலவு ரூபாய் 2.18 மில்லியன் ஆகும் (ஒப்பந்தக்காரர்கள் மூலமாக மலையகத்தில் கட்டப்படும் வீட்டின் பெறுமதி ரூபா 1.2 மில்லியன் என்றும், இராணுவத்தினரைக் கொண்டு மீரியாபெத்தை மக்களுக்காக நிறுவப்படும் வீட்டின் பெறுமதி ரூபா 1.3 மில்லியன் என்றும் மீள்குடியேற்ற அமைச்சின் அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது).

ஒரு கொங்கிரீட் வீட்டிற்கு அதிகபட்சம் ரூபாய் 1 மில்லியன் மாத்திரமே செலவாகும் என துறைசார் நிபுணர்கள் கூறுகிறார்கள். எனவே, பொருத்து வீடு ஒன்றிற்கு ரூபா 2.18 மில்லியன் என்ற அடிப்படையில் மொத்தம் ரூபா 141 பில்லியன்கள் இந்த வீட்டுத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

மேலும், தொகுதியாக்கப்பட்ட இரும்புகளைப் பொருத்தி வீடுகள் அமைப்பதற்கு குறைந்த செலவே செல்கிறது. முன்தயாரிக்கப்பட்ட இரும்புத் தகடுகளை வீடு கட்டப்படும் இடத்தில் பொருத்துவதனால் வீடுகட்டுவதற்கான கூலித்தேவை இல்லாதுபோகிறது. எனவே, கல்வீடொன்று கட்டுவதை விடவும் இரண்டு மடங்கு பொருத்து வீட்டுக்கு செலவாகிறது என்பது பலத்த சந்தேகத்தை எழுப்புகிறது.

உலோகத்தினால் வீட்டின் முழுக்கட்டமைப்பும் உள்ளதால் வீட்டை புதுப்பிக்கவோ, திருத்தவோ முடியாத நிலை காணப்படுகிறது. பொருத்திய நிறுவனத்தை நாடி செல்லவேண்டிய நிலை ஏற்படும்.

ஒவ்வொரு வீடும் 520 சதுர அடி பரப்பைக் கொண்டிருக்கும் எனவும், ஒவ்வொரு வீட்டிற்கான நிதியில் தொலைக்காட்சி, சில தளபாடங்கள் மற்றும் சூரியஒளிச் சேகரிப்பான் (சோலர்) போன்றன உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனாலும், வடக்கே அமைக்கப்பட்டிருந்த வீடொன்றைச் சென்று பார்வையிட்டவர்கள், பின்வருமாறு கருத்துக்களை வெளியிட்டிருந்தனர்:

அத்திவாரம் பலமாகப்போடப்படவில்லை. கொங்கிரீட் ஒரு படை அளவே அத்திவாரத்திற்கு போடப்பட்டுள்ளது. யன்னல்களுக்கு கம்பிகள் போடப்படவில்லை. வீட்டு யன்னல்களை பொருத்தும் ஆணிகள் வீட்டின் வெளிப்புறமாகவே காணப்படுகின்றன. வீட்டின் சுவர்கள் வீட்டை பொருத்தி ஒரு மாதத்திற்குள்ளேயே பிளவுபடத் தொடங்கிவிட்டதாகவும் அவதானிப்புக்கள் உள்ளது. வீட்டினுள் புகை போக்கிகளோ அடுப்புகளோ அமைக்கப்படவில்லை. இதற்குப் பதிலாக வாயு அடுப்பு (கேஸ்) வழங்கப்பட்டுள்ளது. எனவே, இவ் வீடுகளில் வாழும் குடும்பங்கள் எரிபொருளுக்கு வாயு சிலிண்டர்களையே நம்பி இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

60 ஆண்டு ஆயுள்காலம்

ஆகவே, இன்னும் 5 ஆண்டுகளில் 50,000 வீடுகளை எப்படியாவது, என்ன செய்தாவது, இரும்பு வீட்டையாவது கட்டிமுடித்து அடுத்துவரும் தேர்தலில் மக்கள் முன் சென்று நிற்பது மட்டும்தானா முற்போக்குக் கூட்டணியின் இலக்கு? 200 ஆண்டுகளுக்கும் மேலாக லயன் அறைகளில் வாழ்ந்துவரும் மக்களுக்கு தரமான வீடுகளை அமைத்துக்கொடுக்காமல் 60 ஆண்டுகள் ஆயுள்காலத்தைக் கொண்ட பொருத்து வீட்டுத் திட்டத்தை கொடுக்க முனைவது எந்தளவு நியாயமாகும்ஸ?

பொருளாதார ரீதியில் வளமில்லாமல் இருக்கும் தோட்டத் தொழிலாளர்கள் 60 ஆண்டுகளுக்குப் பின்னர் என்ன செய்வதுஸ? அதற்கு இந்த லயன் அறை வாழ்க்கை சிறந்தது எனலாம்.

மூலப்பொருள் கிடைப்பதில் தாமதமா?

கல்வீடுகளை அமைக்க மலையகத்தில் மூலப்பொருட்களை திரட்ட முடியாத காரணத்திற்காக பொருத்து வீட்டுத்திட்டத்தை பரிசீலிக்கச் சொல்வது மலையக மக்களை எப்படியும் ஏமாற்றலாம் என்ற தோற்றப்பாட்டையே காட்டுகிறது. ஒரு கல்வீடு கட்டுவதற்கான மூலப்பொருட்களாக கருங்கல், மணல், செங்கல் அல்லது சீமேந்துக் கல், சீமேந்து, கூரை வேய மரங்கள் தேவைப்படுகின்றன. இங்கு அமைச்சர் மூலப்பொருட்களாக கருங்கல், மணல், செங்கல் அல்லது சீமேந்துக் கல்லையே குறிப்பிடுகின்றார். வெறும் 50,000 வீடுகளைக் கட்டிமுடிக்க மூலப்பொருட்கள் பெறுவதில் தாமதம் ஏற்படுவதாகக் கூறும் அமைச்சர் மனோகணேசன் இலங்கையின் ஏதாவது அபிவிருத்தி நடவடிக்கை ஒன்றில் இவ்வாறு தாமதம் ஏற்பட்டிருக்கின்றது என்று கூறுவாரா?

அத்தோடு, சீன அரசாங்கத்துடன் நல்லாட்சி அரசாங்கம் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் படி நிதிநகரம் (துறைமுக நகரம்) 695 (2011) இலிருந்து 670 ஏக்கராக விஸ்தீரமடைந்திருக்கிறது. 670 ஏக்கர் கடல்பகுதியையும் நிரப்பி நிலமாக்க பெரும்பாலும் மலையகப் பகுதிகளில் உள்ள கருங்கல் மலைகளே குடைந்தெடுக்கப்படவுள்ளன. அங்குள்ள ஆறுகளிளே மணலும் அள்ளப்படவிருக்கிறது. இந்த அபிவிருத்தித் திட்டத்தில் மூலப்பொருளால் தாமதம் என்ற பேச்சுக்கே இடமிருக்காது என்பதை அமைச்சரும் அறிந்திருப்பார். ஆனால், மலையகத்தில் செறிந்து கிடக்கும் மூலப்பொருட்கள் மக்களது அபிவிருத்திக்காக மட்டும் தாமாக தாமதிக்கிறதா?

65,000 பொருத்து வீட்டுத் திட்டத்திற்காக செலவாகும் ரூபா 141 பில்லியனில் அதைவிட இரண்டு மடங்கு கல் வீடுகளை மலையகத்தில் அமைக்கலாம் என்ற விடயத்தை புரிந்துகொண்டு அதனை அமுல்படுத்த பிரதமரின் ஆலோசனையைக் கேட்டிருக்கலாம்.

அவ்வாறு செய்யாமல், பசித்தவனுக்கு கஞ்சியைக் காட்டிவிட்டு வேண்டுமா வேண்டாமா என்று கேட்டால்ஸ இதையும் விட்டால் ஒன்றும் கிடைக்காது என்ற நிலையில் பொருத்து வீட்டையும் மக்கள் ஏற்கத்தான் செய்வார்கள்.

இவை யாவற்றையும் கவனத்தில் கொள்ளாமல் பிரதமரிடம் கிரீன் சிக்னல் கிடைக்கப்பெற்று பொருத்து வீட்டுத் திட்டம் மலையகத்தில் அமுல்படுத்தப்படுமாக இருந்தால் அது ஏமாற்றுவதற்கான திட்டம் என்பதை தோட்டத் தொழிலாளர்கள் அறிந்திருப்பது அவசியம்.

-செல்வராஜா ராஜசேகர் - 
(மாற்றம் )

Tuesday, August 16, 2016

வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான நடமாடும் சேவை


வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்று சென்ற பலர் அதிலும் விசேடமாக வீட்டுப் பணிப்பெண்களாக சென்றுள்ள பெண்களில் பலர் பல்வேறு விதமான பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இடைத்தரகர்களால் ஏமாற்றப்படுதல், மத்திய கிழக்கில் வேலை செய்யும் வீடுகளில் துன்புறுத்தப்படுதல், துன்புறுத்தல் தாங்க முடியாமால் அந்த வீடுகளில் இருந்து தப்பியோடி தூதரகத்தில் தஞ்சமடைதல், தற்கொலை செய்துகொள்ளுதல் ஒப்பந்த காலம் முடிவடைந்த பின்னரும் திருப்பி அனுப்பாமல் வீட்டு எஜமானர்களால் தடுத்து வைக்கப்படுதல், நீண்ட காலம் வீட்டாரோடு தொடர்புகள் இல்லாத நிலையில் இருத்தல், காணமால் போகுதல், சம்பளம் முறையாக கிடைக்காமை போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு இவர்கள் முகங்கொடுக்கின்றனர். 

இவ்வாறனவர்கள் தங்கள் பிரச்சினைகளுக்கு நிவாரணம் பெற வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியத்தில் முறைப்பாடு செய்ய வேண்டும். 

இவ்வாறானவர்களுக்கு உதவுவதற்காக நடமாடும் சேவைகளை பிரிடோ நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. 

நடமாடும் சேவையில் பங்குபற்றுபவர்களின் முறைப்பாடுகளை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணிகயத்தின் முறைப்பாட்டு பிரிவுக்கு சமர்ப்பித்து உகந்த நடவடிக்கை மேற்கொள்ள பிரிடோ நிறுவனம் உதவிகளை மேற்கொள்ளும். 

இந்த நடமாடும் சேவை 17.08.2016 அன்று புதன் கிழமை காலை 9 மணிமுதல் டயகம நகர மண்டபத்தில் நடைபெறும். மேற்கூறிய பிரச்சனைகள் உள்ளவர்கள் தங்களிடம் உள்ள ஆவணங்களுடன் இந்த நடமாடும் சேவையில் கலந்து கொண்டு பயன் பெறலாம். 

இதன்போது கொண்டு வர வேண்டிய ஆவணங்கள் தொடர்பான விபரங்களை 0772277441 - 071 4661486 என்ற இலக்கத்தோடு தொடர்பு கொண்டு அறிந்து கொள்ள முடியும். 

நன்றி- அததெரண

Thursday, August 11, 2016

தொழிலாளர்களுக்கு ஏமாற்றத்தைத் தந்துள்ள 2,500 ரூபா

அரசாங்கத்தினால் தோட்டத் தொழிலாளர்களுக்கு இடைக்கால கொடுப்பனவாக வழங்கப்பட்ட 2500 ரூபா  தொழிலாளர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தைத் தந்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உப தலைவரும் சிரேஷ்ட தொழிலுறவு இயக்குனருமான எம்.வேங்குருசாமி இ.தொ.கா தலைமை காரியமான சௌமியபவனில் இடம்பெற்ற தோட்டத் தலைவர்களுடனான சந்திப்பின் போது தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் தெரிவிக்கையில் மலையக சமூகத்திற்காக தம்மை அர்ப்பணித்து செயற்படுகின்ற மலையக தொழிற்சங்கங்களோ, அல்லது இதர சமூக அமைப்புக்களோ எதுவாக இருந்தாலும் மலையக சமூகத்திற்காக பொறுப்பு கூறும் கடையிலிருந்து தவறு விடுவார்களேயானால் வரலாற்றில் மேலும் தவறிழைத்தவர்களாகவே கருதப்படுவார்கள். 

மலையக சமூகம் நேற்று இன்றல்ல இரண்டு நூற்றாண்டுகளை கொண்ட சமூகமாக திகழ்ந்துகொண்டிருக்கிறது. 2,500 ரூபாவை பெற்றுக்கொடுத்துவிட்டோம் என மார்தட்டிக் கொள்பவர்களின் அறிக்கை போர்களும் செய்தியாளர்களின் மாநாடுமே திருப்தியை கண்டதே தவிர வேறொன்றுமில்லை. 

15,16 நாட்கள் வேலை செய்தாலே போதும் 2,500 ரூபா தொழிலாளர்களுக்கு கிடைத்துவிடும் என்று வாய் கூசாமல் கூறி வருபவர்கள் வேலை செய்த நாட்களுக்கு மாத்திரமே நாளொன்றுக்கு 100 ரூபா வழங்கப்படுகிறது. அதுவும் அரசாங்கத் தோட்டங்களில் இத்தொகை வழங்கப்படுவதில்லை. எவ்வாறாயினும் இரண்டு மாதங்களுக்கு மாத்திரமே வழங்கப்படுகின்ற இக் கொடுப்பனவானது பெருந்தோட்ட மக்களை மேலும் ஏமாற்றி அவர்களை கடனாளிகளாக கையேந்தும் நிலைமையை உருவாக்கியுள்ளது. 

இ.தொ.கா தனது இலட்சியத்திலிருந்து விலகிச்செல்லாது தொழிற்சங்கங்களுக்கு மூலாதாரமாக விளங்கிய அமரர் எஸ்.தொண்டமானின் கொள்கைப்படி தொழிலாளர்களை நட்டத்தில் வீழ்த்தாமல்  அவர்களது வருமானத்துக்கு தடையில்லாதவாறு சாத்வீக போராட்டங்கள் மூலமாக பிரச்சினைகளை வென்றெடுக்கும். 1984ம் ஆண்டு தொட்டமானின் அணுகுமுறைப்படி பிரார்த்தனை இயக்கம் முழு மலையக தோட்டங்கள் அனைத்திலும் தோன்றியது. மூன்று நாட்களுக்குப் பின்னர் தோட்டத் தொழிலாளர்களின் பிரஜாவுரிமை விடயத்தில்  அமரர் தொண்டமான் வெற்றி கண்டார். 

கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப்பிரச்சினைக்கு ஒரு காத்திரமான தீர்வை இ.தொ.கா பெற்றுக்கொடுக்கும். பிரச்சினை என்றிருந்தால் அதற்கான தீர்வு கட்டாயம் உண்டு. 2,500 ரூபா விடயத்தில் அவர்கள் கூறியபடி தொடர்ந்து பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். 

தொழிலாளர் பிரச்சினையில் ஒருமித்த கொள்கையே அவசியம்

மலையகத்தில் உள்ள அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்களுக்கிடையில் மாறுபட்ட கொள்கைகள் இருக்கலாம். ஆனால் தோட்டத் தொழிலாளர்களின உரிமைகளை பெற போராடும்போது ஒருமித்த கொள்கையுடன் செயற்பட வேண்டுமென அஸீஸ் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் அஷ்ரப் அஸீஸ் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் பெருந்தோட்டத் தொழிலார்களது சம்பள உயர்வு விவகாரத்தை நிர்ணயிக்கும் கூட்டு ஒப்பந்தமானது இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை கைச்சாத்திடப்படும். ஆனால் கடந்த 2015 மார்ச் மாதம் 31ம் திகதியுடன் அது நிறைவடைந்து அடுத்த இரண்டாண்டுக்கான புதிய ஒப்பந்தம் இதுவரை கைச்சாத்திடப்படவில்லை. 

இதற்கான காரணம் தொழிற்சங்கங்களுக்கிடையில் ஒற்றுமை இல்லாமையே. தொழிற்சங்கங்கள் இந்த விடயத்தில் கொள்கைகளை பற்றி சிந்திக்காமல் தோட்டத் தொழிலார்களுக்கு சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்கும் போராட்டத்தில் ஒருமித் கொள்கையுடன் செயற்பட்டால் இதற்கான தீர்வை பெற்றுக்கொள்ள முடியும்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு நன்மைபயக்கும் விதத்தில் கம்பனிகள், தொழிலாளர்களை ஏமாற்றாத வகையில் கூட்டு ஒப்பந்தம் அமைய வேண்டும்.. அத்தோடு இந்த ஒப்பந்தத்தில் காணப்படும் தொழிலாளர் நலன் சார்ந்த ஏனைய விடயங்களும் தற்போதைய கால சூழலுக்கேற்ப அமைய வேண்டும். 

இடைக்கால கொடுப்பனவு பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தற்காலிகமாக மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும் எல்லா தொழிலாளர்களுக்கும் இது கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. அரச பெருந்தோட்ட நிர்வாகத்தில் உள்ள தோட்டத் தொழிலாளர்களுக்கு இக்கொடுப்பனவு வழங்கப்படவில்லை என்று புகார் தெரிவிக்கப்படுகிறது. 
இந்த விடயத்திலும் கூட்டுத் தொழிற்சங்கங்கள் உரிய கவனம செலுத்த வேண்டும். மலையகச் சமூகத்தின் பல்வேறு உரிமைகளையும் சலுகைகளையும் வென்றெடுக்க வேண்டும். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதற்கிணங்க சமூகத்தின் ஒற்றுமையிலே இது தங்கியுள்ளது என்றார். 

Wednesday, August 10, 2016

2500 ரூ கொடுப்பனவு- தொழிலாளர்கள் தெளிவற்ற நிலை

தோட்டத் தொழிலாளர்களுக்டகு அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டு கம்பனி நிர்வாகங்களால் 26-07-2016 தொடக்கம் வழங்கப்பட்டு வரும் 2500 ரூபா கொடுப்பனவு தொடர்பாக தொழிலாளர்களும், தொழிற்சங்கங்களும் தெளிவற்ற நிலையில் உள்ளதாக விவசாய தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் எம்.கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

அவர் இந்த விடயம் குறித்து மேலும் தெரிவிக்கையில் அரசாங்கத்துடன் இடம்பெற்ற பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் பின்னர் முதலாளிமார் சம்மேளனம் இக்கொடுப்பனவை இரண்டு மாதத்திற்கு மாத்திரம் வழங்குவதாக ஒப்புக்கொண்டு ஜூன், ஜூலை மாதத்திற்கான கொடுப்பனவுகளை வழங்கி வருகின்றது. கடந்த வரவு செலவுத் திட்டத்தின் போது அரசாங்க ஊழியர்களுக்கு 10,000 ரூபா, தனியார் ஊழியர்களுக்கு 2500 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்பட வேண்டுமென அறிவித்திருந்தது. 10,000 ரூபா சம்பள அதிகரிப்பு அரசாங்கத்துறையில் அனைவருக்கும் பாகுபாடின்றி வழங்கப்பட்டு வருகின்றது.  

எனினும் தனியார் துறையில் மாதம் 10,000 ரூபாவிற்குள் சம்பளம் பெறும் தொழிலாளர்களுக்கு 2,500 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என அரசாங்கம் வரையறை செய்துள்ளது. தனியார்துறையில் சேலை செய்பவர்கள் இன்று 10 ஆயிரம் ரூபாவிற்கு அதிக சம்பளம் பெறுகின்றனர் என்பதை அரசாங்கம் அறியாமல் இருக்க வாய்ப்பில்லை. இக்கொடுப்பனவு வாழ்க்கைச்செலவு என்ற அடிப்படையில் வழங்கப்படுகின்றது. வேலை செய்தாலும் செய்யாவிட்டாலும் கொடுப்பனவு வழங்கப்படுவது அவசியமாகும். 

தோட்டக்கம்பனிகள் நட்டத்தில் இயங்குவதாக அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது. எதிர்காலத்தில் சம்பள அதிகரிப்பைக் கோரும்போது இதன் காரணமாக பாரிய சிக்கல்கள் தோன்றலாம். கூட்டு ஒப்பந்தம் காலாவதியாகி 15 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் 1000 ரூபா சம்பள உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை இன்னமும் இழுபறி நிலையிலேயே உள்ளது. 
தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்ற 2,500 ரூபா வங்கிகளிலிருந்து கடனாக பெற்று வழங்கப்படுகின்றது. இதற்கான வட்டியை தொழிலாளர்களின் சம்பளத்தில் அறவிடவுள்ளனர். இந்த நடைமுறை தொழிலாளர்களின் இடைக்கால கொடுப்பனவில் மட்டுமே உள்ளது. 
கூட்டு ஒப்பந்தம் நடைமுறையில் உள்ள நிலையில் தோட்டங்கள் உப குத்தகைக்கு விற்கப்பட்டு வருகின்றன. இது இவ்வொப்பந்தத்துக்கு எதிரான செயற்பாடாகும். நிலவிவரும் வரட்சியினுடனான காலநிலையினால் அதிகமான தோட்டங்களில் பறிக்கப்படும் பச்சைக்கொழுந்து கிலோ 25 ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்படுகின்றது. ஆனாதல் தனியார் துறையினரின் பச்சைச்கொழுந்து கிலோ 65 ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்படுகின்றது.  இது தொடர்பாகவும் அரசாங்கம் அறிந்திருக்கின்றது. 

தொழிலாளர்களுக்கு 07 பேர்ச் காணியில் வீட்டுரிமை பெற்றுக்கொடுப்பதிலும் இழுபறி நிலையே இருந்து வருகிறது 07 பேர்ச் காணியில் வீட்டுரை கொண்டவர்களுக்கு உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படுவது அவசியமாகும். இவ்விடயங்களில் தொழிற்சங்கங்கள் பேதங்களை மறந்து செயற்பட்டால் மாத்திரமே தொழிலாளர்களுக்கு விமோசனம் கிடைக்கும் என்றாhர் கிருஷ்ணசாமி.

Tuesday, August 9, 2016

தேசிய தொழிலாளர்களுடன் கைகோர்த்து பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினையை மட்டுமே மலையக அரசியல்வாதிகள்,; தொழிற்சங்கவாதிகள் பேசி வருகின்றனரே தவிர மலையக மக்களின் ஏனைய இன்னோரன்ன பிரச்சினைகள் மழுங்கடிக்கப்பட்டு வருகின்றன என்று ஜே.வி.பி யின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சமகால முன்னெடுப்புக்கள் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் இதுகுறித்து மேலும் தெரிவிக்கையில் எந்தவொரு நாட்டிலும் தொழிலாளர்கள் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக கருதப்படுகிறார்கள். அவர்களின் உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தை வழங்கி சகல துறைகளிலும் தொழிலாளர்களை முன்னேற்ற வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு இருக்கின்றது. இதிலிருந்து அரசாங்கம் ஒருபோதும் விலகிச்செல்ல முடியாது. ஊலகளாவிய ரீதியில் தொழிலாளர்கள் நெருக்கடிகளுக்கு உள்ளாகி வருவதையும் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. தொழிலாளர்களின் உன்னதமான போராட்டங்கள் கொச்சைப்படுத்தப்படுகின்றன. தொழிலாளர்களுக்குரிய உரிமைகள் வழங்கப்படாத நிலையில் அவர்கள் பல்வேறு வழிகளில் புறக்கணிப்புக்கு உள்ளாக்கப்பட்டள்ளார்கள். நாளுக்குநாள் தொழிலாளர்கள் மீதான சுமைகள் அதிகரித்து வருகின்றன. எனினும் இது தொடர்பாக யாரும் உரிய கவனம் செலுத்துவதாக இல்லை என்பது இங்கு குறிப்பிடப்பட வேண்டிய விடயம் என்றார் சந்திரசேகரன். 

இலங்கையைப் பொறுத்தளவில் விசேடமாக நாம் மலையகத் தொழிலாளர்களை குறிப்பிட வேண்டும். இவர்களுக்கு அநீதி அதிகரித்து காணப்படுகின்றது. மலையக அரசியல்வாதிகளும் தொழிற்சங்கவாதிகளும் இவர்களுக்கு உரிய உரிமைகளை பெற்றுக்கொடுக்கின்றனரா என்பது கேள்விக்குரியாகும். தொழிலாளர்களின் சம்பளப்பிரச்சினையை மட்டுமே முதன்மைப்படுத்தி கோசங்களை எழுப்பி வருகின்றனர். மலையக மக்களின் இன்னோரன்ன பிரச்சினைகளான வீடு, காணி, மக்களின் சமூக வாழ்க்கை, கல்வி, தொழில், சுகாதாரம் என ஏனைய பிரச்சினைகள் பற்றி குறிப்பிடுவதாகத் தெரியவில்லை. எனினும் இதனையும் உருப்படியாக செய்ததாக தெரியவில்லை. நல்லாட்சி இடம்பெறுவதாக தெரிவிக்கின்றார்கள் இன்று நல்லாட்சியில் இருக்கின்ற ஜனாதிபதி, பிரதமர் மற்றும் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் என பலரும் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வினை பெற்றுத் தருவதாக கூறினார்கள். இவர்களின் வாக்குறுதிகள் அனைத்தும் இப்போது காற்றில் பறந்து விட்ட நிலையில் தொழிலாளர்களை கைவிட்டள்ளார்கள். 

தேசிய ரீதியில் தொழிலாளர்கள் இருந்தும் மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களை மலையக அரசியல்வாதிகள் பிரித்து வைத்திருக்கிறார்கள். அவ்வாறு பிரிந்து வைத்திருப்பதால் பாதக விளைவுகளே ஏற்படுகின்றன. பாழாய் போன தொழிற்சங்கங்களையும் மலையக அரசியல்வாதிகளையும் மலையகத் தொழிலாளர்கள் நம்பிக்கொண்டிருக்கின்றார்கள். இதற்கும் அப்பால் வர்க்க ரீதியாக நாம் பார்க்கின்றபோது தொழிலாளர் சக்தி என்ற ஒன்று இருக்கிறது. மலையக தொழிலாளர்கள் நாட்டின் ஏனைய தொழிலாளர்களுடன் ஒன்று சேர்கின்றபோது தொழிலார் சக்தி பலமடைகின்றது. காத்திரமான வெற்றிகளை பெறக்கூடிய வாய்பர்பு அதிகமாகவே காணப்படுகின்றது.

தோட்ட மக்களுக்கு இப்போது சமூக ரீதியான பிரச்சினை ஒன்றும் உள்ளது மலையக பெருந்தோட்டங்களில் வாழ்வதா இல்லையா என்ற சிந்தனையுடன் இவர்கள் தொடர்ந்தும் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் தோட்டத் தொழிலாளர்கள் நாட்டில் உள்ள ஏனைய தொழிலாளர்களுடன் கைகோர்த்து போராட்டத்தின் ஊடாக தமது பிரச்சினைக்கான பெற்றுக்கொள்ள முன்வர வேண்டும். தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதில் மலையக அரசியல்வாதிகளும், தொழிற்சங்கங்களும் தோல்வி கண்டிருக்கின்றன. எனவே தொழிலாளர்கள் தேசிய போராட்டத்தினை முன்னெடுப்பதே சிறந்ததாகும். 

68 வருட காலமாக முதலாளித்துவ ஆட்சியாளர்களும் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க தவறியுள்ளனர். எனவே பொதுவாக நாட்டு மக்களுக்கு புதிய பாதை என்ற ஒன்று தேவைப்படுகின்றது. தோட்டத் தொழிலாளர்களின் மகிமையை தோட்டத் தொழிலாளர்களை பிரநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் மழுங்கடிப்பு செய்கின்றன. இந்த நிலையில் இருந்து தொழிலா ளர்கள் மீண்டெழுதல் வேண்டும். அதற்கான காலம் இப்போது உதயமாகி இருக்கின்றது என்றார்.

Sunday, August 7, 2016

மலையக சமூகத்தின் எழுச்சிக்காக அரசாங்கம் தோள் கொடுக்க வேண்டும்

மலை­யக மக்­களின் பல்­வேறு விடங்கள் தொடர்­பா­கவும் காலத்­துக்­குக்­காலம் ஆய்­வுகள் மேற்­கொள்­ளப்­ப­டுதல் வேண்டும். இந்த ஆய்­வு­களின் அடிப்­ப­டையில் அபி­வி­ருத்­திக்கு வழி­காட்­டுதல் வேண்டும் என்று திறந்த பல்­க­லைக்­க­ழக சிரேஷ்ட விரி­வு­ரை­யாளர் கலா­நிதி ஏ.எஸ்.சந்­தி­ரபோஷ் தெரி­வித்தார். மலை­யக மக்­களின் சம­கால போக்­குகள் தொடர்பில் கருத்து வின­விய போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். இது குறித்து சந்­தி­ரபோஷ் மேலும் கருத்து தெரி­விக்­கையில் மலை­யக சமூகம் என்­பது இந்­நாட்டில் முக்­கி­யத்­துவம் மிக்க தனித்­துவம் வாய்ந்த ஒரு சமூ­க­மாகும். இச்­ச­மூ­கத்தின் கலா­சார விழு­மி­யங்கள் பெறு­மதி மிக்­க­ன­வாக விளங்­கு­கின்­றன.
ஏனைய இனங்­க­ளி­லி­ருந்தும் வேறு­பட்ட விசே­டித்த போக்­குகள் இம்­மக்­க­ளி­டையே காணப்­ப­டு­கின்­றன. இம்­மக்­களின் மகத்­துவம் சரி­யாக உண­ரப்­ப­டுதல் வேண்டும். நாட்டின் அபி­வி­ருத்­திக்கு தோள் கொடுக்கும் மலை­யக சமூ­கத்­தி­னரின் எழுச்­சிக்­காக அர­சாங்கம் தோள் கொடுக்க வேண்­டி­யதும் மிகவும் அவ­சி­ய­மாக உள்­ளது.
மலை­யக மக்கள் பல்­வேறு புதிய பரி­மா­ணங்­க­ளையும் கொண்டு விளங்­கு­கின்­றனர். இப்­ப­ரி­மா­ணங்கள் தொடர்பில் ஆங்­காங்கே கலந்­து­ரை­யா­டல்கள், கருத்துப் பரி­மா­றல்கள் என்­பன இடம்­பெற்று வரு­கின்­றன. பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் மற்றும் ஆர்­வ­லர்கள் எனப் பலரும் இது தொடர்­பான விட­யங்­களில் ஈடு­பட்டு வரு­கின்­றனர். கலா­சாரம், பண்­பாடு, பொரு­ளா­தாரம் உள்­ளிட்ட பல விட­யங்கள் தொடர்­பா­கவும் கவனம் செலுத்­தப்­பட்டு வரு­கின்­றது.
எனினும் சம­கா­லத்தில் மலை­யக மக்­க­ளி­டையே ஏற்­பட்­டுள்ள பண்­பாடு, கலா­சாரம் உள்­ளிட்ட பல்­வேறு விட­யங்கள் தொடர்­பான மாற்­றத்­தி­னையும் ஒட்­டு­மொத்­த­மாக பார்க்க முடி­யாத ஒரு நிலையில் இருக்­கின்றோம். துறை­சார்ந்த நிபு­ணர்கள், துறை­சார்ந்த ஆர்­வ­லர்கள் குறித்த விட­யங்­களை அறிந்து கொள்­வ­திலும் சிக்கல் நிலை மேலோங்கிக் காணப்­ப­டு­கின்­றது. சமூ­கத்தில் பல்­வேறு மாற்­றங்கள் ஏற்­பட்டு வரு­கின்ற நிலையில் இந்த மாற்­றங்கள் குறித்து அறிந்து கொள்ள வேண்­டி­யதும், இடர்­பா­டு­களை களைந்து அபி­வி­ருத்­திக்கு இட்டுச் செல்ல வேண்­டி­யதும் மிகவும் முக்­கி­ய­மா­ன­தாக விளங்­கு­கின்­றது.
மலை­யக மக்­களின் பல்­வேறு விட­யங்கள் குறித்தும் காலத்­துக்கு காலம் ஆய்­வுகள் மேற்­கொள்­ளப்­ப­டுதல் வேண்டும். இந்த ஆய்­வு­களின் ஊடாக நாம் பல்­வேறு விட­யங்­க­ளையும் விளங்கிக் கொள்ளக் கூடி­ய­தாக இருக்கும். வருடா வருடம் இத்­த­கைய ஆய்­வு­களை மேற்­கொள்ள முடி­யா­விட்­டாலும் குறிப்­பிட்ட ஒரு காலப்­ப­கு­தியை மையப்­ப­டுத்தி இந்த ஆய்­வுகள் மேற்­கொள்­ளப்­ப­டுதல் வேண்டும். ஆய்­வுகள் செய்து அபி­வி­ருத்தி செய்வோம் என்­பது ஒரு தொனிப்­பொ­ரு­ளாகும். வர­லாற்றைப் பார்த்து முன்­னோக்கிச் செல்வோம் என்­பதும் ஒரு முக்­கி­ய­மான கருத்­தாகும். இந்த நிலைகள் உரி­ய­வாறு கடைப்­பி­டிக்­கப் ­ப­டுதல் வேண்டும். ஆய்வு என்­பது சகல மட்­டங்­க­ளிலும் முக்­கி­யத்­துவம் பெற்று விளங்­கு­கின்­றது. உலக நாடுகள் பல­வற்றில் சமூகம் குறித்த கருத்துப் பரி­மா­றல்­க­ளுக்கு கள­மாக ஆய்வு அமைந்­தி­ருக்­கின்­றது என்­ப­தனை மறுத்­து­விட முடி­யாது.
யாழ்ப்­பாணம் மற்றும் கிழக்கு பல்­க­லைக்­க­ழ­கங்­களில் இடம்­பெறும் ஆய்­வுகள் பலவும் சமூக ரீதியில் புதிய பரி­மா­ணங்கள் பல­வற்­றையும் ஏற்­ப­டுத்­து­வ­தற்கு உந்து சக்­தி­யாக அமை­கின்­றது என்­பதே உண்­மை­யாகும். இந்­தி­ய­ வம்­சா­வளி மலை­யக சமூ­கத்­தினர் இன்று பதி­னைந்து இலட்­சத்­துக்கும் அதி­க­மா­ன­வர்கள் உள்­ளனர்.
எனினும் துறை­சார்ந்த நிபு­ணர்­களை இனங்­காண்­ப­தற்கோ சம­கால பார்­வை­யினை செலுத்­து­வ­தற்கோ போது­மான தர­வுகள் எம்­மிடம் இல்லை. எனவே ஆய்­வுத்­து­றையை வளர்த்­தெ­டுக்க வேண்­டி­ய­தென்­பது மிகவும் அவ­சி­ய­மா­கின்­றது. மேற்­கத்­தேய நாடு­களைப் பொறுத்­த­வ­ரையில் கருத்­த­ரங்கு, கலந்­து­ரை­யா­டல்கள், ஆய்­வுகள் என்­பன அடிக்­கடி இடம்­பெற்று வரு­கின்­றன. சாதக, பாதக விளை­வுகள் ஆரா­யப்­ப­டு­கின்­றன. இத்­த­கைய நிலை­மைகள் சமூக அபி­வி­ருத்­திக்கு உந்து சக்­தி­யாக அமைந்து வரு­கின்­றன.
மலை­யக கல்வி தொடர்பில் மாநாடு நடத்­தப்­பட வேண்­டு­மென்று பேரா­சி­ரியர் தனராஜ் போன்­ற­வர்கள் வலி­யு­றுத்தி வரு­கின்­றனர். தனராஜ் கல்விப் புலத்தில் நீண்ட கால அனுபவமுள்ள ஒருவர். தேசிய சர்வதேச மாநாடுகள் பலவற்றிலும் அவர் பங்கேற்றுள்ளார். எனவே இந்த நிலையில் மலை­யக கல்வி தொடர்பில் மாநாடு ஒன்­றினை நடத்­து­வது குறித்தும் நாம் விசேட கவனம் செலுத்த வேண்டும். இதற்கு அனைத்துத் தரப்­பி­னரும் ஒத்­து­ழைப்பு வழங்க வேண்டும். பல்­வேறு ஆய்­வு­கள் சமூ­கத்தின் மேம்­பாட்­டுக்கும் அபி­வி­ருத்­திக்கும் பக்­க­ப­ல­மாகும் என்­ப­தனை நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

நன்றி- வீரகேசரி

பால்பண்ணையாளர்கள் சங்கம்

Etnuypah kw;Wk; mk;gfKt gpuNjr ghy; gz;izahsu;fis cs;slf;fp rq;fnkhd;iw mq;Fuhu;gzk; nra;atpUg;gjhf njhptpj;j ,e;jpa tk;rhtsp kf;fs; Kd;ddpapd; gpujp jiytu; R.g.Rg;gpukzpak; %ytsq;fspd; cr;r gad;ghl;bd; %yk; Etnuypah khtl;lj;jpy; jythf;fiy> nfhl;lfiy kw;Wk; mk;gfKt Mfpa gpuNjrq;fspy; fhy;eil Jiwapy; mgptpUj;jpia cWjpg;gLj;Jtjw;F nghJkf;fis Cf;fg;gLj;j Ntz;Lk; vd;whH.

fle;j 03-08-2016 md;W nfhl;lfiyapy; ghy;gz;izahsu;fs; rq;fnkhd;iw mikg;gJ njhlHghf  gz;izahsu;fis re;jpj;Jf; fUj;J njhptpj;j R.g.Rg;gpukzpak; Etnuypah khtl;lj;jpy; fhy;eilfis tsu;f;f $ba mjpfkhd tsq;fs; fhzg;gLfpd;wJ. Njrpa fhy;eil mgptpUj;jp rig kw;Wk; jdpahu; ghy; cw;gj;jpahsu;fs; Clhf fpilf;fg;ngWk; cr;r fl;l gyd;fs;> fle;j rpy tUlq;fshf fhy;eil tsu;g;ghsu;fis nrd;wilatpy;iy.
Njrpa fhy;eil mgptpUj;jp rig mur tptrha $l;Ljhgd rl;lj;jpd; fPo; 1973Mk; Mz;by; cUthf;fg;gl;lJ. mjd; ntspf;fs eltbf;iffs; 1974Mk; Mz;L Muk;gpf;fg;gl;lJ. md;W njhlf;fk; kiyaf kf;fs; cs;spl;l ehl;by; midj;Jg; gpuNjr kf;fSk; nghUshjhu epiyikfis Nkk;gLj;j fhy;eil cw;gj;jp kw;Wk; ghy; cw;gj;jp mikg;Gfs; Clhf nraw;gl;lJ.  Njhl;lj; Njapiy njhopiy khj;jpuk; ek;gpapUf;Fk; njhopyhsu;fs; jq;fsJ tho;thjhuj;ij cWjp nra;Ak; nghUl;L Ranjhopyhf fhy;eil tsu;g;ig Nkw;nfhz;ldu;. ,Ue;Jk; fle;j fhyq;fspy; fhy;eil tsu;g;G mUfp tUfpd;wJ. ,e;j epiyapy; Njhl;lg; gFjpfs; kw;Wk; ngUe;Njhl;l fpuhkg;gFjpfspy; ghy; cw;gj;jp kpfTk; Fiwtile;J tUfpd;wJ vdf;Fwpg;gpl;lhH.


,e;j tplak; njhlHghf mk;gfKt gpuNjr kw;Wk; Etnuypah gpuNjrj;jpy; ghy; gz;izahsu;fSf;F cjtpfis ngw;Wf;nfhLf;f rq;fk; xd;W ,y;yhjjd; fhuzkhfNt jdpkdpj Nghuhl;lj;Jf;F jhk; MshfptUtjhf ghy; gz;izahsu;fs; njuptpf;fpd;wdu;  vdf; Fwpg;gpl;lhu;. MfNt> gpuNjr gz;izahsu;Sf;fhf tpiutpy; rq;fk; xd;iw mq;Fuhg;gzk; nra;ag;NghtjhfTk; mt;thW Muk;gpf;fg;gLk; rq;fj;jpd; Clhf fhy;eil tsu;f;f $ba gapw;rpfs; tsq;fis ghJfhf;f $ba topKiwfs; ghy; cw;gj;jpia> ngUf;f $ba etPd Ntiyj;jpl;lq;fs; Gjpa njhopy;El;g Kiwfs;> Cf;Ftpg;Gfs;>  fhy; eil tsu;g;gjpy; Mu;tj;jpid J}z;b Ranjhopiy Nkw;nfhs;Sk; mstpyhd gapw;rpfs; kw;Wk; fz;fhl;rpfs; Nghd;wtw;iw elhj;j murhq;f kl;lj;jpy; eltbf;if Nkw;nfhs;sg;gLk;. ,jw;nfd fhy;eil cw;gj;jp Rfhjhu jpizf;fsk; kw;Wk; fhy;eilts mikr;R kw;Wk; r%f mgptpUj;jp mikr;R Mfpatw;wpd; cjtpfis ngUtjw;fhd eltbf;iffs; Kd;ndLf;fg;gl;Ls;sjhfTk; Rg;gpukzpak; Fwpg;gpl;lhH.

நிரந்தர கொடுப்பனவை பெற்றுத்தர லாய்க்கற்ற தமிழ் முற்போக்கு கூட்டணி

இடைக்கால கொடுப்பனவான 2,500 ரூபாயை முழுமையாகப் பெற வேண்டுமெனில், ஒரு தொழிலாளி கட்டாயமாக  25 நாட்களுக்கு வேலை செய்திருக்க வேண்டும். எந்தக் கம்பனி, தொழிலாளிகளுக்கு 25 நாட்கள் வேலை வழங்குகின்றது' என்று கம்யூனிஸ்ட் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் கே.கணபதி கேள்வி எழுப்பியுள்ளார். 

தோட்டத் தொழிலாளர்களுக்கு 2,500 ரூபாயை பெற்றுக்கொடுத்துவிட்டோம். இதற்காக முதல் முறையாக அரச திறைச்சேரியிலிருந்து நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது மாபெரும் வெற்றியாகும் என சிலர் கூறித்திரிகின்றனர். தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்குவதாக சொல்லப்படுகின்ற 2,500 ரூபாய் என்பது சம்பள உயர்வல்ல.   இடைக்கால கொடுப்பனவு மாத்திரமே என்பதை தொழிலாளர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். அதிலும், தொழிலாளி பெற்றுக்கொள்ளும் சம்பளத்தோடு 2,500 ரூபாய் கொடுப்பனவை முழுமையாக வழங்கும் எந்த ஏற்பாடும் கிடையாது. மாறாக நாளுக்கு 100 ரூபாய்தான் வழங்கப்படும்' எனவும் அவர் குறிப்பிட்டார். 

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது, 'இடைக்கால கொடுப்பனவை மாபெரும் சாதனையாகக்காட்டி அரசியல் இலாபத்தை அறுவடைச் செய்யத்துடிக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணியினர்,  2,500 ரூபாய் ஒரிரு மாதங்களுக்கு மட்டுமே   தொழிலாளருக்கு கிடைக்கும் என்பதை சொன்னால் சிறப்பாக இருக்கும். 

தனியார்த்துறை தொழிலாளர்களுக்கு 2,500 ரூபாய் கொடுப்பனவு வழங்க வேண்டும் என சட்டம் இயற்றிய மார்ச் மாதத்திலிருந்து, இம்மாதம் வரையிலான நிலுவையையும் இணைத்து தோட்டத் தொழிலாளருக்கு வழங்க வேண்டும்' என்றார். 'நல்லாட்சிக்காரருக்கு வாக்குகளை வாரி வழங்கிய பெருந்தோட்டத் தொழிலாளருக்கு, 2,500 ரூபாய் கொடுப்பனவை முழுமையாகவும் நிரந்தரமாகவும் வழங்க அரசாங்கம் மறுப்பதால் தோட்டத் தொழிலாளர்களை பாரபட்சமாக நடத்துவது அம்பலமாகியுள்ளது. அத்துடன், நிரந்தர கொடுப்பனவை பெற்றுத்தர லாய்க்கற்ற தமிழ் முற்போக்கு கூட்டணியினரின் இயலாமையும் அம்பலத்துக்கு  வந்துள்ளது' என அவர் கூறினார்.

Tuesday, August 2, 2016

25 நாட்களுக்கான வேலையை உறுதிசெய்யவும்

தோட்டத் தொழிலாளர்களுக்கு மாதத்துக்;கு 25 நாட்களுக்கான வேலையை, உறுதி செய்யுமாறு மலையக தொழிலாளர் முன்னணியின் மாநில நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.வரதராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் மேலும் கூறிய அவர், 'மஸ்கெலியா பிளான்டேசன் நிர்வாகத்துக்கு உட்பட்ட சென்கிளையர், ட்றூப் தோட்டங்களில் வாரத்துக்;கு நான்கு நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்படுவதாகவும் வெள்ளி, சனிக்கிழமைகளில் வேலை வழங்கப்படுவதில்லை எனவும் தொழிலாளர்கள் முறையிட்டுள்ளனர்.   

ஆனால், தொழிலாளர்களுக்கு வெள்ளி, சனிக்கிழமை நாட்களிலும் வேலை வழங்கும் வகையில், அவ்வவ் தோட்டங்களில் வேலை வாய்ப்புகள் உள்ளன என்று  தொழிலாளர்கள் முறையிட்டதற்கு இணங்க, இதனை கம்பனி நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளேன். தேயிலை மலைகளில் கொழுந்து அதிகமாக வளர்ந்துள்ளது. இதேவேளை, மலைகளில் அதிகளவான புற்களும் வளர்ந்துள்ள நிலையில், மேற்படி தோட்டத் தொழிலாளர்களுக்கு வேலை வழங்குவதற்கு நிர்வாகம் ஏன் தயங்குகின்றது. 

கூட்டொப்பந்த சரத்தின்படி நிர்வாகங்கள், மாதத்துக்கு 25 நாட்கள் வேலை வழங்க வேண்டும். ஆனால், வேலை வழங்க கூடிய நாட்களிலும் வேலை வழங்காமலிருப்பது திட்டமிட்ட செயலே ஆகும். இது தொடர்பாக தலவாக்கலை, சென்கிளையார் தோட்ட முகாமையாளருக்கும் ட்றூப் தோட்ட முகாமையாளருக்கும் ஹட்டன் உதவி தொழில் ஆணையாளருக்கும் பிரதிகள் இட்டு கடிதம் எழுதியிருக்கின்றேன். எனவே, மேற்படி விடயங்களை ஆட்சேபித்து, தொழிலாளர்கள் தொழிற்;சங்க நடவடிக்கைகளில் ஈடுபட தீர்மானித்துள்ளதால் இவ்விடயத்தில் உடனடியாக தலையிட்டு, இங்குள்ள தொழிலாளர்களுக்கு போதிய வேலை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தியுள்ளேன்' என்றார். 

தரகர்கள் தேவையில்லை

நல்லாட்சி அரசாங்கத்தின் மலையக பிரதிநிதிகள், தரகர்களுக்கூடாக வேலைவாய்ப்புகளை பெற்றுத்தருவதாக கூறி மலையக இளைஞர், யுவதிகளை முட்டாள்களாக்க  திட்டமிட்டுள்ளனர். தனியார் துறைகளில் வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொள்வதற்கு தரகர்கள் தேவையில்லை என்று அம்பகமுவ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் வெள்ளையன் தினேஸ் கூறினார். 

'மலையக இளைஞர், யுவதிகளுக்கு தனியார் துறைகளில் வேலை வாய்ப்புகளை பெற்றுக்கொடுப்பதாக கூறி,  அரசாங்கத்தில் இருக்கின்ற மலையக அமைச்சர்கள் சிலர், ஹட்டன் உள்ளிட்ட நகரங்களில் இளைஞர், யுவதிகளை வரவழைத்து நேர்முக பரீட்சை நடத்துகின்றனர் என்றும் அவர் கூறினார். இது தொடர்பில் தொடர்ந்தும் தெரிவித்துள்ள அவர், 'ஒரு காலத்தில் மலையகத்தின் கல்வி வளர்ச்சிக்கு வடக்கு, கிழக்கு பகுதியைச் சேர்ந்த ஆசிரியர்கள் பெரும்பங்காற்றியிருக்கிறார்கள். அக்காலத்தில் ஆசிரியர் தொழிலை பெற்றுக்கொள்ளும் தகுதியை கொண்டவர்களாக மலையகத்தில் மிக, மிக சொற்ப தொகையினரே இருந்தனர். ஆனால், தற்போது நிலைமை அவ்வாறில்லை. பாடசாலைகளில் நிலவும் கணித, விஞ்ஞான ஆசிரியர் தேவையை நிவர்த்திக்க தேவையான பட்டதாரிகள் மலையகத்திலேயே இருக்கின்றனர். 1982, 1983ஆம்  ஆண்டுகளில் சௌமிய மூர்த்தி தொண்டமான் 500 ஆசிரியர் நியமனங்களை மலையகத்துக்கு பெற்றுக்கொடுத்தார். அன்றிலிருந்து இன்றுவரை 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆசிரியர் நியமனங்களை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மலையகத்துக்கு பெற்றுக்கொடுத்துள்ளது' என்றார். 

'அன்று தோட்டங்களில் மாட்டு பட்டிகள்போல் காணப்பட்ட பாடசாலைகள் மாடி கட்டடங்களாக மாறியுள்ளன. ஐந்தாம் வகுப்பு வரை மட்டுப்படுத்தப்பட்ட பாடசாலைகளில் உயர்தரம் வரையிலான வகுப்புக்கள் நடத்தப்படுகின்றன. பல்லாயிரக்கணக்கானவர்கள்   அரசதுறைகளில் தொழில்களை பெற்றுள்ளனர்.  இவ்வாறு எண்ணிலடங்காத சேவைகளை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மலையக சமூகத்துக்காக முன்னெடுத்துள்ளது' என அவர் சுட்டிக்காட்டினார். 'அரசாங்கத்தில் பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்புகள் குவிந்த வண்ணமுள்ளன. அதனை எமது இளைஞர், யுவதிகளுக்கு பெற்றுக்கொடுப்பதற்கு முயற்சிக்காமல் அவர்களை முட்டாள்களாக எண்ணி தனியார் துறைகளிடம் வேலை வாய்ப்புகளை பெற்றுக்கொடுப்பதாக கூறி நேர்முகப் பரீட்சைகளை நடத்தி வருகின்றார்கள். இதனை ஏற்றுக்கொள்ள எமது இளைஞர், யுவதிகள் ஏமாளிகள் அல்ல. எனவே, நல்லாட்சி அரசாங்கத்தில் இருக்கின்ற மலையக பிரதிநிதிகள் மக்களின் தேவைகளை அறிந்து செயற்பட வேண்டும்' என்றார்.