Thursday, October 15, 2015

தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும்

தோட்டத் தொழி­லா­ளர்­களின் சம்­பள உயர்வு தொடர்­பான கூட்டு ஒப்­பந்தம் காலா­வ­தி­யாகி ஆறு மாதங்கள் ஆகியும் புதிய ஒப்­பந்தம் செய்து கொள்­ளப்­ப­ட­வில்லை. அதனால், தொழி­லாளர்­க­ளுக்கு சம்­பள உயர்வும் கிடைக்­க­வில்லை.

மேலும் தீபா­வளிப் பண்­டிகை காலத்தில் அத்­தி­யா­வ­சியப் பொருட்­களின் விலையும் நாளுக்கு நாள் அதி­க­ரித்துச் செல்கின்­றது. எனவே, தொழி­லா­ளர்­களின் சம்­பள உயர்வைப் பெற்றுக் கொடுக்க அர­சாங்கம் உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என மலை­யக மக்கள் முன்­னணி உப தலைவர் செல்­லையா சிவ­சுந்­தரம் வேண்­டுகோள் விடுத்­துள்ளார்.
அவர் மேலும் தமது அறிக்­கையில், தீபா­வளிப் பண்­டிகை நெருங்கி வரும் வேளையில் பருப்பு, சீனி முத­லான அத்­தி­யா­வ­சியப் பொருட்­களின் விலை நாளுக்கு நாள் அதி­க­ரித்த வண்ணம் இருக்­கின்­றது. இதனால் குறைந்த வரு­மானம் பெறு­கின்ற தோட்டத் தொழி­லா­ளர்கள் பெரும் பொரு­ளா­தாரச் சுமைக்கு முகங் கொடுக்க வேண்­டிய நிலைக்குத் தள்­ளப்­பட்­டுள்­ளனர்.
 
கடந்த வரவு செலவுத் திட்­டத்தில் அர­சாங்க ஊழி­யர்­க­ளுக்கும், தனியார் துறை ஊழி­யர்­க­ளுக்கும் அறி­விக்­கப்­பட்ட சம்­பள உயர்வு வழங்­கப்­பட்­டுள்­ளது. எனினும், இந்த சம்­பள அதி­க­ரிப்பு தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்குக் கிடைக்­க­வில்லை. மேலும், அவர்­க­ளுக்கு கடந்த ஏப்­ரல் மாதத்­தி­லி­ருந்து கிடைக்க வேண்­டிய சம்­பள உயர்வும் கிடைக்­க­வில்லை.
 
அதற்­காக தொழிற்­சங்­கங்­க­ளுக்கும் கம்­ப­னி­க­ளுக்கும் இடையில் இடம்­பெற்ற பேச்­சு­வார்த்­தைகள் அனைத்தும் தோல்­வியிலேயே முடிவடைந்­துள்­ளன. இந்­நி­லையில் அடுத்த மாதம் 10 ஆம் திகதி தீபா­வளிப் பண்­டி­கையைக் கொண்­டாடும் தோட்டத் தொழி­லா­ளர்கள் புத்­தாடை கொள்­வ­னவு செய்­யவும், பண்­டி­கைக்குத் தேவை­யான பல­கா­ரங்­களைத் தயா­ரிக்­கவும் பெரும் சிர­மத்தை எதிர்­நோக்கி வரு­கின்­றார்கள். பண்­டிகை காலத்­துக்குத் தேவை­யான அத்­தி­யா­வ­சியப் பொருட்கள் அனைத்­தி­னதும் விலை­வாசி திடீ­ரென அதி­க­ரித்­துள்­ளது. இதனால் ஏற்­க­னவே, பொரு­ளா­தாரச் சுமையில் சிக்கித் தவிக்கும் தொழி­லா­ளர்கள் மேலும் சுமைக்கு ஆளாகி இருக்­கின்­றார்கள். கம்­ப­னி­க­ளுக்கும், தொழிற்­சங்­கங்­க­ளுக்கும் இடையில் இடம்­பெறும் பேச்­சு­வார்த்­தைகள் தொடர்ந்து இழு­பறி நிலையில் காணப்­ப­டு­கின்­றது. எனவே, கடந்த ஜனா­தி­பதித் தேர்­த­லிலும், பாரா­ளு­மன்றத் தேர்­த­லிலும் இன்­றைய அர­சாங்கம் ஆட்­சி­ய­மைக்க பெரு­ம­ளவில் நம்­பிக்­கை­யுடன் வாக்­க­ளித்த
 
மக்­க­ளுக்கு நிவா­ரணம் கிடைக்கும் வகையில் அர­சாங்கம் தலை­யிட்டு நியா­ய­மான சம்­பள உயர்வைப் பெற்றுக் கொடுக்க நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் எனவும் செல்­லையா
சிவ­சுந்­தரம் வேண்­டுகோள் விடுத்துள்ளார்.

அரிய வகை உயிரினங்கள் அழியும் அபாயம்

இலங்கையில் மட்டுமே உள்ளதாக கூறப்படும் அரிய வகை உயிரினங்கள் அழியும் நிலை ஏற்பட்டுள்ளதாக சுற்றுச் சூழலியலாளரான பிரதீப் சமரவிக்கிரம தெரிவித்தார்.

"கொள கொடையா" என்றழைக்கப்படும் மீனினம், 4 அரியவகை பச்சோந்திகள், 10 வகையான வண்ணத்துப்பூச்சிகள், 11 வகையான முலையூட்டிகளே இவ்வாறு அழியும் நிலையை எதிர்கொண்டுள்ளன.

இவை, மகாவலி கங்கையை சூழ அமைந்துள்ள சிறிய சிறிய தீவுகளில் வாழ்ந்து வருவதாகவும் இக்கங்கையில் கொட்டப்படும் கழிவுகள் மற்றும் இராசாயன பதார்த்தங்கள் காரணமாக அவை அழியும் நிலையை எதிர்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அபாய அறிவித்தல்

பதுளை மாவட்டத்தில் மண் சரிவு, மலை சரிதல் மற்றும் வெள்ளம் போன்ற இயற்கை அனர்த்தங்கள் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் தென்படுவதாகவும். இதனால் அம் மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 50,000 மக்களை அப்பிரதேசத்திலிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.  
இதேவேளை பதுளை மாவட்டத்தில் கடந்த புதன் கிழமை மாலை மிகக் குறுகிய நேரத்தில் 80- 100 மி.லீ வரை மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  
பதுளை மாவட்டம் மட்டுமன்றி நுவரெலியா, கேகாலை, களுத்துறை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களுக்கும் மேற்படி அபாய அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக  அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் இயக்குநர் பிரதீபு பொடிப்பிலி குறிப்பிட்டுள்ளார்.  
காற்றுடன் கூடிய மலை நாட்டின் பல பாகங்களிலும் பெய்யக்கூடுமென வாநிலை அவதான நிலையம் தெரிவிக்கின்றது.
தொடர்ச்சியான மழையினால் நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஒரு வான் கதவு திறக்கப்பட்டுள்ளது. அப்பிரதேசத்தை அண்டிய மக்களை அவதானத்துடன் இருக்குமாறு அதிகாரிகள் பணித்துள்ளனர்.
தொடர்ந்து மழை பெய்யுமானால் நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்படும்  என தெரிவிக்கின்றனர். இதேவேளை நுவரெலியா, ஹட்டன், கினிகத்தேன உட்பட மலையகத்தின் பல பகுதிகளில் அதிக பனி மூட்டம் காணப்படுவதால் வாகனங்களை செலுத்வோர் மிக அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
 
இறம்பொடை, வெதமுல்ல கயிறுக்கட்டி தோட்டத்திலுள்ள 2ஆம் லயன் குடியிருப்பிலிருந்து 7குடும்பங்களைச் சேர்ந்த 25 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். மேற்படி லயன் குடியிருப்புத் தொகுதியின் பாதுகாப்பு கருதி அமைக்கப்பட்டிருந்த மதில் இடிந்து விழும் அபாயமுள்ளதாக தெரிவித்தே குறித்த 7குடும்பங்களும் வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது