Saturday, July 24, 2010

195 புதிய கிராம சேவகர் பிரிவுகள் மலையகத்திற்கு அவசியம்

பொது நிர்வாக அமைச்சுக்கு சமர்ப்பிக்கும் நோக்கில் தயாரிக்கப்பட்டுள்ள ஆலோசனை அறிக்கை சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டவை



புதிய கிராம சேவகர் பிரிவுகளை அமைத்தல், மற்றும் பிரதேச செயலகங்கள் தொடர்பாக யோசனைகளை முன் வைக்குமாறு பொதுநிர்வாக அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

மலையகத்தில் 195 புதிய கிராம சேவைப் பிரிவுகள் அமைக்கப்பட வேண்டும் என்று மலையக அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் புத்திஜீவிகள் சமூக ஆர்வலர்கள் ஆகிய தரப்பினரின் ஒத்துழைப்புடன் பொது நிர்வாக அமைச்சுக்கு சமர்ப்பிக்கும் நோக்கில் தயாரிக்கப்பட்ட அறி;க்கை சம்பந்தமாக நடத்தப்பட்ட கலந்துரையாடப்பட்டது. பி.பி. தேவராஜ் அவர்களின் தலைமையில் வர்த்தகரும் மொறிசியஸ் நாட்டுக்கான கௌரவ தூதுவருமான தெ. ஈஸ்வரன், மற்றும் எக்ஸ் பிரஸ் நியூஸ் பேப்பர் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் குமார் நடேசன் ஆகிய மூவர் கொண்ட இக் குழு அறிக்கையை தயாரித்தது

பி.பி. தேவராஜ் குழுவினர் மலையகத்துக்கு வெளிக்கள விஜயங்களை மேற்கொண்டு கிராமசேவையாளர்கள், புத்திஜீவிகள், சமூக ஆர்வலர்கள், ஆகியோருடன் சந்திப்புக்களை நடத்தியும், புள்ளி விபரவியல் திணைக்களம், மாவட்ட செயலகங்கள், உள்ளிட்ட பல அமைப்புக்களிடமும் தரவுகளை பெற்று அறிக்கையை தயாரித்துள்ளனர்.

இந்த அறிக்கை தொடர்பாக ஆராயும் நிகழ்வில் கலந்துகொண்ட உரையாற்றிய இலங்கை திறந்த பல்கலைகழக சட்டத்துறை விரிவுரையாளர் யசோதா கதிர்காமத்தம்பி இந்த அறிக்கை பல தரப்பினரின் ஆதரவுடனே தயாரிக்கப்பட்டது. முக்கியமாக பிரதேச செயலக பிரிவுகள், தமிழ் மக்கள் செறிந்து வாழும் பகுதிகள், தற்போது காணப்படும் கிராமசேவை பிரிவுகள் ஆகிய விடயங்களை அடிப்படையாகக் கொண்டோம்.

அதனடிப்படையில் நுவரெலியா, பதுளை, இரத்தினபுரி, மாத்தளை, கண்டி, கேகாலை, களுத்துறை, மற்றும் கொழும்பு மாவட்டத்தில் சில பகுதிகளை கருத்திற் கொண்டோம். ஆதன்படி பதுளை மாவட்டத்தில் புதிதாக 34 கிராம சேவைப்பிரிவுகளும், நுவரெலியா மாவட்டத்தில் 94 புதிய கிராமசேவை பிரிவுகளும் (நுவரெலியா மாவட்டத்தில் தற்போது 487 கிராம சேவை பிரிவுகள் உள்ளன) கண்டி மாவட்டத்திற்கு 11 புதிய பிரிவுகளும்( கண்டி மாவட்டத்தில் தற்போது 1188 பிரிவுகள் உள்ளன) மாத்தளை மாவட்டத்திற்கு 15 புதிய பிரிவுகளும்,( மாத்தளை மாவட்டத்தில் 550 பிரிவுகள் உள்ளன) கேகாலை மாவட்டத்திற்கு 15 புதிய பிரிவுகளும், இரத்தினபுரி மாவட்டத்திற்கு 15 புதிய பிரிவுகளும் களுத்துறை மாவட்டத்திற்கு 9 புதிய பிரிவுகளும் தேவையாகும். கொழும்பில் மட்டக்குளி பதியை மட்டுமே ஆராய்ந்தபோது 20,000 பேருக்கு ஒரு கிராம சேவை பிரிவு உள்ளது என்றார்

பி.பி. தேவராஜ் அங்கு கருத்துத் தெரிவிக்கையில் மலையகத்தில் புதிதாக கிராம சேவையாளர் பிரிவுகளை அமைப்பது தொடர்பான யோசனை குறித்து ஆராயும் நோக்கில் பல தரப்பினரும் ஒன்றாக அமர்ந்து கலந்தரையாடக் கிடைத்தமை நாம் பெற்ற பாரிய வெற்றியாகும்.

இங்கு கூடியுள்ள அரசியல் கட்சிகள், சிpவல் சமூக அமைப்புக்கள் தொழிற்சங்கங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகளும் புத்திஜீவிகளும் வேறுபாடான கருத்துக்களை முன் வைத்தாலும் அனைவரினதும் நோக்கங்கள்ள் ஒன்றானதாகவே அமைந்துள்ளன. அதாவது இறுதியில் நாங்கள் பயணிக்க வேண்டிய இடம் ஒன்றாகவே உள்ளது.

மலையக மக்கள் நன்றாக வாழ வேண்டும். அவர்களுக்கு வசதிகள் கிடைக்க வேண்டும் என்ற பொதுவான நோக்கங்களே மலையகத்தைச் சேர்ந்த அனைவருக்கும் இருக்கின்றன. முக்கியமாக இங்கு வித்தியாசமான கருத்துக்கள் மற்றும் வேறுபாடான அபிப்பிராயங்கள் இருந்தாலும் அனைவரும் ஒன்று கூடியுள்ளமை விசேட அம்சமாகும். வேறுபாடான கருத்துக்களை பல்வேறு தரப்பினர் ஒன்று கூடுமிடத்து எம்மால் உடனடியாக சிறந்த முடிவை எதிர்பார்க்க முடியாது. ஆனால் ஒற்றுமையின் ஆரம்ப கட்டமாகவும் முதற்படியாகவும் எம்மால் எடுத்துக் கொள்ள முடியும். நாம் இந்த விடயங்களை கவனமாக ஆராய வேண்டும். கண்ணும் கருத்துமாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சில இடங்களில் தமிழ் பேசும் கிராம சேவையாளர்கள் இல்லை. சில இடங்களில் 20,000 பேருக்கு ஒரு கிராம சேவகர் கடமையாற்றுகின்றார். கிராம சேவகரை காணாத மக்களும் உள்ளனர். எனவே நாம் இவை தொடர்பில் அவதானமாக செயற்பட வேண்டும்.

இதேவேளை புதிதாக அமைக்கப்படவுள்ளதாக கூறப்படும் மக்கள் சபைகள் தொடர்பில் மலையக சமூகத்தினரும் அரசியல் கட்சிகளும் விழிப்புடன் இருப்பதாக தெரியவில்லை. இது தொடர்பில் நாம் அவசரமாக விழிப்படைய வேண்டிய நேரம் வந்துள்ளது.

மேற்படி அறிக்கை தொடர்பில் குறைபாடுகள் இருப்பதாக சுட்டிக்காட்டிய பல்கலைகழக விரிவுரையாளர் விஜயசந்திரன் இந்த முயற்சியை நாம் பாராட்ட வேண்டும். 2010 அம் ஆண்டில் நாம் இருக்கிறோம். எனவே அதற்கேற்ற வகையில் அறிக்கைக்கு தரவுகள் பெறப்பட்டிருக்க வேண்டும். அடுத்து புதிதாக கிராமசேiயாளர் பிரிவுகளை பிரேரிக்கும் போது மக்களின் எண்ணிக்கை குறித்து கவனம் செலுத்த வேண்டும். அப்போது எதிர்காலத்தில் மக்கள் சபைகளில் மக்களின் பிரதிநிதிகள் அதிகரிக்க முடியும் என்றார்.

திறந்த பல்கலைகழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சந்திரபோஸ் இவ்வாறான ஆலோசனை அறிக்கைகளை தயாரிக்கும் போது தமிழ் மக்கள் என்று குறிப்பிடுவதைவிட தோட்ட மக்கள் என்ற பதத்தை முன் வைக்கின்றேன் என்றார்.

இ.தொ.கா தலைவர் முத்துசிவலிங்கம் நாட்டின் தற்போதைய நிலைமைகளை கருததிற்கொண்டே நாங்கள் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் எம்மால் முடியுமானவரை கோரிக்கைகளை முன்வைக்கலாம். அதேநேரம் அவற்றின் சாத்திய தன்மைகளை ஆராய வேண்டும் என்றார்.