Thursday, January 28, 2016

மலையக மக்களை அடையாளப்படுத்துவதற்கு தவறியதால் விளைவுகளுக்கு முகம் கொடுக்கும் நிலை

மலை­யக மக்கள் உரி­ய­வாறு அடை­யா­ளப்­ப­டுத்­த­ப்ப­டா­மையின் கார­ண­மாக பாத­க­மான விளை­வு­க­ளுக்கு முகம் கொடுக்க வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. இந்­நி­லையில் இந்­தி­ய­வம்­சா­வளி மலை­யக தமி­ழர்கள் என்ற பொது வரை­ய­றையின் மூலம் மலை­யக மக்கள் அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட வேண்டும்.
தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் நிபுணர் குழு­விலும் இவ்­வி­டயம் கலந்­து­ரை­யா­டப்­பட்­டுள்­ளது என்று மலை­யக மக்கள் முன்­ன­ணியின் செய­லாளர் நாயகம் ஏ.லோறன்ஸ் தெரி­வித்தார்.
அதி­காரப் பகிர்வு மற்றும் அர­சியல் யாப்பு சீர்­தி­ருத்­தத்­திற்­கான தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் முத­லா­வது அமர்வு கடந்த செவ்­வாய்க்­கி­ழமை மலை­யக புதிய கிராமம், உட்­கட்­ட­மைப்பு மற்றும் சமூக அபி­வி­ருத்தி அமைச்சில் இடம்­பெற்­றது.
நிபுணர் குழுவின் தலைவர் பெ.முத்­து­லிங்கம் தலை­மையில் இடம்­பெற்ற இவ்­வ­மர்வு குறித்து கருத்து வின­வி­ய­போதே லோறன்ஸ் இவ்­வாறு தெரி­வித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரி­விக்­கையில்,
அர­சியல் யாப்பு சீர்­தி­ருத்த நட­வ­டிக்­கைகள் தற்­போது இடம்­பெற்று வரு­கின்ற நிலையில் மலை­யக மக்கள் விழிப்­புடன் செயற்­பட தேவை காணப்­ப­டு­கின்­றது. சீர்­தி­ருத்த விட­யத்தில் எம்­ம­வர்கள் அச­மந்தப் போக்­குடன் நடந்து கொண்டால் பின்னால் வருத்­தப்­பட வேண்­டிய நிலைமை உரு­வா­வதை தவிர்க்க முடி­யாது.
அர­சியல் யாப்பு சீர்­தி­ருத்த விட­யத்தில் மலை­யகம் சார்ந்த பல்­வேறு கருத்­துக்­க­ளையும் முன்­வைப்­ப­தற்கு தனி­ம­னி­தர்­களும் குழுக்­களும் தயா­ராகி வரு­கின்­றன. இந்­நி­லையில் இது தொடர்பில் ஆராயும் பொருட்டு தமிழ் முற்­போக்கு கூட்­டணி நிபுணர் குழு­வினை ஏற்­ப­டுத்தி இருக்­கின்­றது. இக்­கு­ழுவின் முத­லா­வது அமர்வு செவ்­வாய்க்­கி­ழமை நிறைவு பெற்­றுள்ள நிலையில் நாங்கள் பல்­வேறு விட­யங்கள் குறித்தும் ஆராய்ந்­தி­ருக்­கின்றோம்.
மலை­யக மக்கள் இந்­நாட்டின் மிகப்­பெரும் சக்­திகள். இவர்­க­ளது அடை­யாளம் உரி­ய­வாறு உறு­திப்­ப­டுத்­தப்­பட வேண்டும். இல்­லா­த­பட்­சத்தில் பல்­வேறு பாதக விளை­வுகள் ஏற்­ப­டு­வ­தனை தவிர்க்க முடி­யாது. மலை­யக மக்­களை அடை­யா­ளப்­ப­டுத்­து­வதில் குழப்­ப­நிலை காணப்­ப­டு­கின்­றது. மலை­யக மக்கள், இந்­திய வம்­சா­வளி தமி­ழர்கள் என்­றெல்லாம் இவர்கள் அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றார்கள். இவை மாற்­றப்­பட்டு ஒரே பெயரில் மலை­யக மக்கள் அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட வேண்டும். மலை­யக மக்­களின் உண்­மை­யான சனத்­தொகை 4.3 சத­வீதம் என்று சில ஆவ­ணங்கள் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளன.
எனினும் மலை­யக மக்­களின் தொகை ஏழு சத­வீ­த­மாக உள்­ளது என்­பதே உண்­மை­யாகும். இத்­த­கைய நிலை­மைகள் குள­று­ப­டி­யினை தோற்­று­விக்கும். எனவே மலை­யக மக்­களை பொது­வான வரை­ய­றையின் கீழ் இந்­திய வம்­சா­வளி மலை­யக தமி­ழர்கள் என்­ற­வாறு அடை­யா­ளப்­ப­டுத்­தப்­ப­டு­வது பொருத்­த­மாகும்.
இந்த அடை­யா­ளத்தின் ஊடாக நாம் எமது பிர­தி­நி­தித்­து­வத்தை உறு­திப்­ப­டுத்திக் கொள்­வ­தோடு மேலும் பல நன்­மை­க­ளையும் பெற்­றுக்­கொள்ளக் கூடி­ய­தாக இருக்கும்.
இலங்­கையில் பல்­லின மக்கள் வாழு­கின்­றார்கள். அவர்­களின் உரி­மைகள் யாப்பு ரீதி­யாக உறு­திப்­ப­டுத்­தப்­பட வேண்டும். பாரா­ளு­மன்­றத்தில் மேல்­சபை, கீழ்­சபை என்று இரண்டு சபைகள் உரு­வாக்­கப்­ப­டுதல் வேண்டும் என்ற கருத்தும் நிபுணர் குழுவின் அமர்வில் முன்­வைக்­கப்­பட்­டது. இலங்கை தொழி­லாளர் காங்­கி­ரஸும் நிபு­ணர்கள் குழு ஒன்­றினை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. எனவே கருத்­துகள் ஆரா­யப்­பட்டு பொது­வான இணக்­கப்­பா­டுகள் எட்டப்படுவதும் வரவேற்கத்தக்கதாகும். பல்வேறு தரப்பினரும் முன்மொழிவுகளை அரசியல் யாப்பு சீர்த்திருத்தக் குழுவிடம் முன்வைப்பது அவசியமாகும். ஒத்த கருத்துகளை முன்வைப்பதும் மிகவும் முக்கியமாகும். தமிழ் முற்போக்கு கூட்டணியின் நிபுணர் குழுவில் எதிர்வரும் காலங்களில் மேலும் பல விடயங்கள் இது தொடர்பில் ஆராயப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும் என்றார்.

No comments: