Wednesday, August 12, 2015

மலையக கட்சிகளின் பதில் என்ன?

இலங்கை அரசியலில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி யுள்ளது. ரணில் தலைமை யிலான ஐக்கிய தேசிய முன்ன ணிக்கும் மஹிந்த தலைமை யிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கும் இடையே பலமான போட்டி நிலவுகிறது. மலையகத்தில் போட்டியிடுகின்ற திகாம்பரம், ராதாகிருஷ்ணன் சார்ந்துள்ள கட்சிகள் ரணிலுக்கு ஆதரவு வழங்குவதோடு, ரங்காவின் கட்சியும் ஆறுமுகம் தொண்டமானின் காங்கிரஸ் கட்சியும் மஹிந்தவுக்கு ஆதரவு வழங்கி புதிய ஆட்சியைக் கைப்பற்ற முழு மூச்சுடன் களத்தில் நிற்கின்றன.
மலையகம் சார்ந்த தமிழ் கட்சிகளில் ரங்காவின் கட்சியைத் தவிர திகாம்பரம், ராதாகிருஷ்ணன், ஆறுமுகம் தொண்டமான் சார்ந்த கட்சிகள் பதுளை, நுவரெலியா பிரதேசங்களில் ஆசனங்களைப் பெற வாய்ப்புகள் அதிகம் உள்ளன. மலையகத்தின் ஏனைய பிரதேசங்களில் தமிழ் வாக்குகளை யானைக்கும் வெற்றிலைக்கும் பெற்றுக்கொடுப்பதில் மலையகக் கட்சிகள் ஆர்வத்தோடு செயற்படுகின்றன. தமது அணிக்கு வெற்றி வாய்ப்பைப் பெற்றுக்கொடுத்து நாடாளுமன்ற ஆசனங்களை பெற்றுக் கொள்ளத் துடிக்கும் மலையக அரசியல்வாதிகள் தமது அணிசார்ந்து பெருந்தோட்டத்துறை வாழ் மக்களுக்கும் பொதுவாக மலையகத்துக்கும் பெற்றுக்கொடுக்கப் போவது என்ன? மக்களைக் கவரும் மேடைப் பேச்சுக்களோ, துண்டுப்பிரசுரங்களில் குறிப்பிடப்படுபவை போன்றன என்றும் ஏட்டுச்சுரக்காய்தான்.
முன்னைய மஹிந்தரின் ஆட்சியிலும், இவ்வருடம் ஜனவரியில் பதவியேற்ற ரணில் தலைமையிலான அரசும் தொழிலாளர்களுக்கு 7 பர்ச்சஸ் காணி என்பதையே உறுதிப்படுத்திவிட்டன. இரண்டாவது, சம்பள ஒப்பந்த விடயம். தேர்தல் முடிந்ததும் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும். இதனை விட வேறு விடயங்கள் உள்ளனவா?
பெருந்தோட்டங்களை உள்ளடக்கி மலையக வாழ் தமிழர்களின் தனித்துவமிக்க அடையாளங்களை பேணிப்பாதுகாக்கவும் சமூக, கலை, கலாச்சார, பாதுகாப்பு விடயமாகவும் மண்சார்ந்த பொருளாதார அபிவிருத்தி தொடர்பாகவும் முன்னெடுக்கப்படும் அரசியல் நகர்வுகள் என்ன?
இலங்கையின் மொத்த மக்கள் தொகையில் 1911இல் 13 வீதமாக இருந்த மலையகத் தமிழர்கள் 2011இல் 4.8 வீதமாக குறைந்திருப்பதற்கான சமூக அரசியல் பின்னணி என்னவென ஆராய வழிவகுக்கப்படுமா? இதன் பாதிப்புகள் வெளிக்கொணரப் படுமா? (பெருந்தோட்ட ஆரம்பப் பாடசாலை கள் பிள்ளைகளின் வரவின்றி தொடர்ச்சியாக மூடப்படுகின்றன).
அரசு பெருந்தோட்டங்களை பொறுப்பேற்றுக் கொண்டதும் JEDB, SLSPC, எல்கடுவ பிளான்டேஷன் கம்பனி ஆகியவற்றிடமும் பெருந்தோட்டங்கள் நிறுவைக்குக் கொடுக்கப்பட்டன. இத்தோட்டங்களில் தொழில்புரிந்தோரின் EPF, ETF பணமான ரூபா 1888 மில்லியனுக்கும் அதிகமான தொகை மிக நீண்டகாலமாக மத்திய வங்கியில் வைப்பிலிடப்படவில்லை என்று கூறப்படுகிறது. இப்பணத்தின் உரிமையாளர்களான தொழிலாளர்களுக்கு வழங்கும் பாதுகாப்பு உத்தரவாதம் என்ன?
பெருந்தோட்டங்களைப் பொறுத்தவரை 1904இல் – 1320, 1980இல் – 668, 1992இல் – 506, 2013இல் – 427 என தோட்டங்கள் குறைந்துகொண்டு வருகின்றன. இதனால், இத்துறை சார்ந்த தொழிலாளர்களுக்கு ஏற்படும் சமூக பாதிப்புகள் பற்றி ஆராயப்படுமா?
தொழிலாளர்களாக 1981இல் – 497,995 பேர், 1992இல் – 376,498 பேர், 2013இல் – 193,412 பேர் எனக் குறைந்துள்ளதோடு, தொழிலாளர்கள் சுயமாகவே பெருந்தோட்டங்களை விட்டு வெளியேறுவதற்கான பின்புலங்கள் திட்டமிட்டே உருவாக்கப்படுகின்றமைக்கான அரசியல் பொருளாதார காரணிகள் கண்டறியப்படவும், இவர்கள் தமது வாழ்விடங்களில் தொடர்ந்து பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட திட்டங்கள் உள்ளனவா?
மேலும், 1995இல் 82,000 ஹெக்டேயராக இருந்த சிறு தோட்டங்க ள் 2012இல் 120,000 ஹெக்டேயராக அதிகரித்துள்ளதோடு, தேயிலை உற்பத்தியில் 70 வீதத்தினை இவர்களே மேற்கொள்கின்றனர். இன்று ஐந்து இலட்சத்திற்கும் அதிகமானோர் சிறுதோட்ட உரிமையாளர்களாக உள்ளனர். இந்நிலைக்கு 200 ஆண்டுகால அனுபவம் வாய்ந்த மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களும் உயர்த்தப்படுவார்களா?
மலையகப் பெருந்தோட்ட தொழிலாளர் சம்பள மற்றும் நல விடயமாக 2 வருடத்திற்கு ஒருமுறை ஒப்பந்தம் செய்துக்கொள்ளப்படுகிறது. அதற்காக போலிப் போராட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றன. இந்நிலையில் இருந்து பெருந்தோட்டத் தொழிலாளர்களை விடுவித்து நிலத்தோடு ஒட்டிய சுயபொருளாதாரத்தில் அபிவிருத்தியடைய வகுத்துள்ள திட்டம் என்ன?
பெருந்தோட்ட தொழிலாளர்களில் 32 வீதமானோர் ஏழ்மை நிலையில் உள்ளனர் என்றும், 11.4 வீதமானோர் தேசிய வறுமைக் கோட்டுக்குக் கீழ் நிலையில் வாழ்கின்றனர் என்றும் கடந்தகால புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இந்நிலை போக்க எடுக்கப்படவுள்ள உடனடி நடவடிக்கைகள் ஏதும் உண்டா?
பெருந்தோட்டங்கள் தோறும் சிறுவர் பராமரிப்பு நிலையங்களும் பாலர் பாடசாலைகளும் உருவாக்கப்படுகின்றன; வரவேற்றகத் தக்கது. இது தொழில் காரணங்களுக்காகவே உருவாக்கப்பட்டுள்ளன. இதை யாவரும் அறிவர். இந்நிலையில், வாழ்வின் இறுதிவரை உழைத்து வயதுமுதிர்ந்த நிலையில் ஆதரவற்று இருப்போருக்காக வயோதிப இல்லங்கள் உருவாக்கப்பட திட்டங்கள் உள்ளனவா?
பெருந்தோட்டக் கம்பனிகள் தமது பயன்பாட்டிலிருந்து வருடாந்தம் ஒதுக்கப்படும் காணிகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்ற நிலையில், அதாவது, 2005 – 2011 காலப்பகுதியில் வருடாந்தம் 1,650 ஹெக்டேயர் காணிகள் பாவனையிலிருந்து நீக்கப்படுவதாகக் கூறப்படுகின்றது. பெருந் தோட்டங்கள் தொடர்ச்சியாக நட்டமடைவதாகக் கூறுகின்ற இக்காலக்கட்டத்தில் காணி சட்டத்தின் கீழ் மீண்டும் அரசு பெருந்தோட்ட காணிகளைப் பொறுப்பேற்று பிரதேச செயலர்கள் ஊடாக மலையக மக்களுக்கு காணிகள் பகிர்ந்தளிக்க புதிய திட்டங்கள் வகுக்கப்படுமா?
இறுதியாக மலையக மக்களும் இந்நாட்டில் வாழும் இன்னுமொரு தேசிய இனம் என்பதற்கான அனைத்து அடையாளங்களும், உரிமைகளும் கொண்டிருப்பவர்களாக விளங்குகின்றனர். இலங்கை வாழ் மலையக மக்கள் எனும் கௌரவ நிலையை அரசியல் சாசனம் ஊடாக உறுதிப்படுத்த முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் என்ன?
மலையக அரசியல்வாதிகளே எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் உங்களுக்கான சலுகைகளையும் பாதுகாப்பையும் அதிகரித்துக் கொள்வீர்கள். பாதுகாப்புப் படைகளோடு உலாவருவீர்கள். உங்களுக்கு வாக்களித்த மக்கள் இந்நாட்டின் கௌரவ பிரஜைகளாக வாழ அரசியல், பொருளாதார, சமூக பாதுகாப்பைப் பெற்றுக்கொடுக்கத் தீட்டப்படும் திட்டங்கள் மூலமே உங்களுடைய எதிர்காலம் நிலையானதாக அமையும் என்பதை கருத்திற்கொள்ளப்பட வேண்டும் என்பது சமூக அக்கறை கொண்ட அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.
அருட்தந்தை மா. சத்திவேல்
நன்றி: மாற்றம்

Tuesday, August 11, 2015

மெதுவாக பணி செய்த காலத்துக்குரிய சம்பளம் இல்லை

1,000 ரூபாய் சம்பளத்தை வலியுறுத்தி கடந்த ஜூலை மாதம் 6ம் திகதி முதல் 16ம் திகதிவரை பெருந்தோட்ட தொழிலாளர்கள் முன்னெடுத்து வந்த மெதுவாக பணி செய்த காலத்துக்குரிய பணம் மாதாந்த வேதனத்தில் சேர்க்கப்படாததால் தொழிலாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தையின் 4ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் நிறைவடைந்ததால், அப் பேச்சுவார்த்தையிலிருந்து இ.தொ.கா. வெளிநடப்பு செய்ததுடன் ஜூலை 6ம் திகதி முதல் பெருந்தோட்ட தொழிலாளர்களை மெதுவாக பணிசெய்யும் போராட்டத்தில் ஈடுபடுமாறு பணித்தது.

இதற்கமைவாக பெருந்தோட்டங்களைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள் 1,000 ரூபாய் சம்பளத்தை வலியுறுத்தி மெதுவாக பணிசெய்யும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இக் காலப் பகுதியில் வழமையாக எடுக்கும் கொழுந்தின் நிறைக்கு பதிலாக 3 கிலோ கிராம் கொழுந்தே எடுத்தனர். இது தோட்ட கம்பனிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதால் தோட்ட அதிகாரிகளும் பணிப் பகிஷ்கரிப்பை மேற்கொள்ள தொடங்கினர்.

இருதரப்பு போரட்டங்களும் நீடித்ததில் எடுக்கப்பட்ட கொழுந்துகள் பிரயோசனமற்ற நிலையில் குப்பைகளில் கொட்டப்பட்டன.

நிலைமையை கருத்தில் கொண்டு மீண்டும் தொழிற்சங்கங்களுக்கும் 23 கம்பனிகளுக்குமிடையிலான பேச்சுவார்த்தை கடந்த மாதம் 15ஆம் திகதி அமைச்சர் எஸ்.பி.நாவின்ன தலைமையில் தொழில் அமைச்சில் நடைபெற்றது.

இப் பேச்சுவார்த்தையில் மெதுவாக பணி செய்த காலத்துக்குரிய வேதனத்தையும் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டுமென பிரதான தொழிற்சங்கமான இ.தொ.கா வலியுறுத்தியது.

இப் பேச்சுவார்த்தை எவ்வித முடிவுகளும் எட்டப்படாத நிலையில் தேர்தலுக்கு பின் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், ´இம் மாத வேதனம் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதுள்ளதாகவும் மெதுவாக பணிசெய்த காலத்துக்குரிய வேதனத்தை தவிர்த்தே மாதாந்த சம்பளம் வழங்கப்பட்டுள்ளதால் தாம் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதனால், கடன் வாங்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றும் தமது பிள்ளைகளை வழியனுப்புவதற்கு கூட பணம் வழங்க முடியாத நிலையில் அவல வாழ்வை எதிர்கொண்டுள்ளதாகவும் இம் மக்கள் தெரிவிக்கின்றனர்.  சில தோட்டங்களில் இன்று (10) மாதாந்த சம்பளம் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்தோடு தோட்ட தொழிலாளிகளுக்கு இம்முறை சம்பளம் 40 வீதம் குறைவாக காணப்பட்டிருப்பதாகவும் அத்தோடு தோட்ட கம்பனியால் மேலதிகமாக முற்கொடுப்பனவாக 2000 ரூபாய் தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தோட்ட கம்பனி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Friday, August 7, 2015

மனசாட்சி உடன்படிக்கையில் மலையக மக்களுக்கும் தீர்வு

மக்கள் விடுதலை முன்னிணியின் மனசாட்சி உடன்படிக்கையில் தமிழ், சிங்கள, முஸ்லிம்,கிறிஸ்தவ மக்கள் உட்பட மலையக மக்களின் பிரச்சினை களுக்கும் தீர்வு உள்ளடக்கப்பட்டுள்ளதாக  இரத்தினபுரி மாவட்ட வேட்பாளர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.
தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினை க்கு சரியான தீர்வு பெற்று கொடுப்பதோடு அவர்களின் சம்பள உயர்வு விடயத்தில் நாம் போராட்டம் நடத்தி அதை பெற்றுகொடுக்க முன்னின்று செயல்படுவோம் என்று தெரிவித்துள்ள சுந்தரலிங்கம் பிரதீப் ஊழல் இல்லாத அரசியல் கட்சியாக மக்கள் விடுதலை முன்னணி செயற்பட்டு வருகின்றது. தவறு செய்பவர்களை தட்டி கேட்கக்கூடிய தகுதி, இக்கட்சிக்கு  மட்டுமே உள்ளது என்றார்.
'கடந்தகால தேர்தல்களைவிட இம்முறை தேர்தலில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக நான்கு இன மக்களும் என்றும் இல்லாதவாறு இன்று, மக்கள் விடுதலை முன்னணியை ஆதரிக்கின்றனர். இதனால், இரத்தினபுரி மாவட்டத்தில் ம.வி.மு.இன் பிரதிநிதி ஒருவர் நிச்சயமாக நாடாளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்படுவது உறுதியாகிவிட்டது.
'மக்களின் கஷ்டங்களை நன்கு அறிந்த ம.வி.மு மக்களுக்காக குரல் கொடுப்பதற்கு என்றுமே தயாராக உள்ளது. இன,மத,மொழி,பேதங்களின்றி ஒரே குறிக்கோளுடன் செயற்பட்டு வரும் மக்கள் விடுதலை முன்னணியுடன் நாம் அனைவரும் ஒன்றிணைவோம்' என அழைப்புவிடுத்தார்.

23,500 ரூபா சம்­பளம் என்­பதில் உண்­மை­யில்லை

பெருந்­தோட்டப் பாட­சா­லை­க­ளுக்­கென்று நிய­மனம் பெற்ற உதவி ஆசி­ரி­யர்­க­ளுக்கு கூடுதல் சம்­பளம் பெற்றுக் கொடு க்­கப்­ப­டு­மாயின் முதலில் மகிழ்ச்­சி­ய­டை­பவன் நானா­கவே இருப்பேன். ஆனால் உதவி ஆசி­ரி­யர்­க­ளுக்கு 23 ஆயி­ரத்து ஐநூறு ரூபா என்­ற­டிப்­ப­டையில் கூடுதல் சம்­ப­ள த்தைப் பெற்றுக் கொடுப்­ப­தாகக் கூறி வரு­வது உண்­மைக்குப் புறம்­பா­ன­தா­கு­ மென்று இ.தொ.கா வின் உப தலைவர் செந்தில் தொண்­டமான் தெரி­வித்தார்.
 
மடுல்­சீமை, ஊவா பர­ண­கமை, அப்­புத்­தளை போன்ற இடங்­களில் நடை­பெற்ற இ.தொ.கா. வின் தேர்தல் பிர­சா­ரக்­கூட்­டங்­களில் இ.தொ.கா. உப தலைவர் செந்தில் தொண்­டமான் கலந்து கொண்­பே­சு­கை யில் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். தொடர்ந்து அவர் பேசு­கையில்;
 
‘‘கடந்த ஆட்­சியின் போது இ.தொ.கா. எடுத்துக் கொண்ட முயற்­சி­களின் பல­னாக மூவா­யிரம் உதவி ஆசி­ரியர் நிய­ம­னங்கள் வழங்க அரசு இணக்கம் தெரி­வித்­தி­ருந்­தது. அதற்­க­மைய புதிய ஆட்­சயின் போது ஒரு தொகுதி உதவி ஆசி­ரி­யர்­க­ளுக்கு நிய­ம­னங்கள் வழங்­கப்­பட்­டன. இந்­நி­ய­ம­ன ங்­களில் ஊவா மாகா­ணத்தில் 599 பேர் உள்­வாங்­கப்­பட்­டி­ருந்­தனர். இவர்­க­ளுக்கு 23 ஆயி­ரத்து ஐநூறு ரூபா என்ற அடிப்­ப­டை யில் கூடுதல் சம்­பளம் பெற்றுத் தரு­வ­தாக மாகாண அமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரி­வித்­தி­ருந்தார்.அவ்­வு­தவி ஆசி­ரி­யர்­க­ளுக்கு கடந்த மாதம் வழங்­கப்­பட்ட சம்­ப­ளமும் வர்த்த மானி அறி­வித்­தலில் குறிப்­பிட்­டி­ருந்­த­ப டியே வழங்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. அவர்­களுக்கு கூடுதல் சம்­ப­ளத்தைப் பெற்றுக் கொடுப்­ப­தற்­கான எந்­த­வொரு முயற்­சியும் எடுக்­கப்­ப­ட­வில்லை. கூடுதல் சம்­பளம் பெற்றுக் கொடுப்­ப­தாக கூறப்­படும் கூற்­று க்கள் அனைத்தும் உண்­மைக்குப் புறம்­பா­ன­தாகும். புத்­தி­ஜீ­வி­க­ளான ஆசி­ரியர் சமூ­கத்­தையே ஏமாற்­றி­யி­ருக்கும் இவர்கள் பாமர மக்­களை எவ்­வ­கையில் ஏமாற்­று­வார்கள் என்­பது அம் மக்­க­ளுக்கே தெரிந்த விட­ய­மாகும்.
 
கூடுதல் சம்­பளம் பெற்றுக் கொடுப்­பது தொடர்­பான உண்மை நிலை­யி­னை­ய­றிய சம்­பந்­தப்­பட்­ட­வர்­களை அணுகி வின­வி­ய­போது, ‘‘நிய­ம­னங்கள் வழங்­கப்­பட்ட உதவி ஆசி­ரி­யர்­க­ளுக்கு வர்த்­த­மானி அறி­வித்­தலில் குறிப்­பிட்­டுள்ள பிர­காரம், சம்­பளம் வழங்­கப்­பட்டு வரு­கின்­றது. கூடுதல் சம்­பளம் வழங்­கப்­பட வேண்­டு­மென்­பது குறித்து எத்­த­கைய தீர்­மா­னங்­களும் எடுக்­கப்­ப­ட­வில்லை” என்று கூறினர்.
 
தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்­கான ஆயிரம் ரூபா சம்­பள உயர்­ வினை இ.தொ.கா. பெற்றுக் கொடுப்­பது உறு­தி­யாகும். பெற்றுக் கொடுக்க முடி­யா­விட்டால் இ.தொ.கா. அக் கோரிக்­கையை முன்­வைக்­காது. தோட் டக் கம்­ப­னி­களின் ஆத­ர­வா­ள ர்­க­ளாக செயல்­பட்­டு­வரும் மலை­யக தொழிற்­சங்­கங்கள் சில ஆயிரம் ரூபா சம்­பள உயர்­வினை வழங்க மறுக்கும் கம்­ப­னி­யா­ளர்­களை எதிர்க்­காமல் சம்­பள உயர்­வினைப் பெற்றுக் கொடுக்க முனையும் இ.தொ.கா. வை எதிர்க்­கவும், விமர்­ச னம் செய்­ய­வு­மான செயல்­பா­டு­களை மேற்­கொள்­கின்­றனர். பெருந்­தோட்ட மக்கள் குறித்து அக்­க­றை­ யு­டனும் உணர்வு பூர்­வ­மா­கவும் செயற்­ப டும் ஒரே அமைப்பு இ.தொ.கா. மட்­டு­மே­யாகும்.
 
ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறிசேனவிற் கும் இ.தொ.கா. விற்கும் இடையில் பூரண நல்லுறவுகள் தொடர்ந்த வண்ணமேயு ள்ளன. அந் நல்லுறவுகளின் பயனாக மேலும் மூவாயிரம் தமிழ் ஆசிரியர்களுக்கு நியமனங்களைப் பெற்றுக் கொடுக்கவும், தோட்டப் பிரிவுகள் அடிப்படையில் ஒவ் வொரு தோட்டப் பிரிவிற்கும் கிராம சேவை உத்தியோகத்தர்களை நியமிக்கவும் ஏற்பாடுகளை செய்து வருகின்றோம் என் றார்.