Thursday, October 15, 2015

அபாய அறிவித்தல்

பதுளை மாவட்டத்தில் மண் சரிவு, மலை சரிதல் மற்றும் வெள்ளம் போன்ற இயற்கை அனர்த்தங்கள் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் தென்படுவதாகவும். இதனால் அம் மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 50,000 மக்களை அப்பிரதேசத்திலிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.  
இதேவேளை பதுளை மாவட்டத்தில் கடந்த புதன் கிழமை மாலை மிகக் குறுகிய நேரத்தில் 80- 100 மி.லீ வரை மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  
பதுளை மாவட்டம் மட்டுமன்றி நுவரெலியா, கேகாலை, களுத்துறை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களுக்கும் மேற்படி அபாய அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக  அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் இயக்குநர் பிரதீபு பொடிப்பிலி குறிப்பிட்டுள்ளார்.  
காற்றுடன் கூடிய மலை நாட்டின் பல பாகங்களிலும் பெய்யக்கூடுமென வாநிலை அவதான நிலையம் தெரிவிக்கின்றது.
தொடர்ச்சியான மழையினால் நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஒரு வான் கதவு திறக்கப்பட்டுள்ளது. அப்பிரதேசத்தை அண்டிய மக்களை அவதானத்துடன் இருக்குமாறு அதிகாரிகள் பணித்துள்ளனர்.
தொடர்ந்து மழை பெய்யுமானால் நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்படும்  என தெரிவிக்கின்றனர். இதேவேளை நுவரெலியா, ஹட்டன், கினிகத்தேன உட்பட மலையகத்தின் பல பகுதிகளில் அதிக பனி மூட்டம் காணப்படுவதால் வாகனங்களை செலுத்வோர் மிக அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
 
இறம்பொடை, வெதமுல்ல கயிறுக்கட்டி தோட்டத்திலுள்ள 2ஆம் லயன் குடியிருப்பிலிருந்து 7குடும்பங்களைச் சேர்ந்த 25 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். மேற்படி லயன் குடியிருப்புத் தொகுதியின் பாதுகாப்பு கருதி அமைக்கப்பட்டிருந்த மதில் இடிந்து விழும் அபாயமுள்ளதாக தெரிவித்தே குறித்த 7குடும்பங்களும் வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

No comments: