Wednesday, July 8, 2015

ஆறுமுகன் தொண்டமான் சத்தியாக்கிரக போராட்டம்

கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களில் ஒன்றான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமான நள்ளிரவு 12.30 மணிமுதல் ஹட்டன் மல்லியப்பு சந்தியில் சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆறுமுகன் தொண்டமான் அங்கு செய்தியாளர்களுக்கு தெரிவிக்கையில் தொழிலாளர்களின் நியாயமான சம்பளம் 1000 ரூபாவை கோரி முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியபோது அவர்களின் தீர்மானங்கள் எங்களுக்கு ஒத்துவராத காரணத்தினால் தொழிலாளர்களை மெதுவான பணிகளில் ஈடுபடுமாறு அறிவித்திருந்தோம்.
இதனைத் தொடர்ந்து முதலாளிமார் சம்மேளனம் தோட்டத்தில் பணிபுரியும் உத்தியோகத்தர்கள், வெளிக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் காரியாலய உத்தியோகத்தர்கள் அனைவரையும் தொழிலில் ஈடுபட வேண்டாமென்று கேட்டுக்கொண்டதற்கிணங்க சகல தோட்டங்களில் பணிபரியும் தோட்ட உத்தியோகத்தர்கள் நேற்று மாலை முதல் வேலைக்கு செல்லவில்லை தேயிலை தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதோடு தொழிலாளர்கள் பறித்த கொழுந்து அத் தோட்டங்களில் உள்ள கொழுந்து மடுவங்களில் கிடக்கிறது. கொழுந்தை தொழிற்சாலைக்கு கொண்டு செல்ல வாகனங்களை தருவதற்கு கூட தோட்ட நிர்வாகம் அனுமதிக்கவில்லை.
போராட்டத்தில் ஈடுபட்டததன் காரணமாக பொலிஸாரும், அரச அதிகாரிகளும் உடனடியாக இவ்விடத்திற்கு வந்துள்ளார்கள். தற்போது இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. போராட்டம் தொழிற்சங்களுக்கும் கம்பனிக்கிடையிலேயே நடைபெறுகிறது.
இதற்கும் தொழிலாளர்களின் பிள்ளைகளும், சிறுவர் நிலையத்திற்கும், தோட்ட உத்தியோகஸ்தர்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனவும் இவ்வாறு செயல்படுகின்ற கம்பனிகளுக்கு நல்ல பாடம் புகட்ட வேண்டும் எனவும் தெரிவித்ததோடு தொழிலாளர்களுக்கு போதிய சம்பளம் பெற்று தரும் வரை நாங்கள் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட போவதாக அவர் மேலும் தெரிவித்தார்

No comments: