Thursday, March 3, 2011

உள்ளுராட்சி சபைகள் ஆரம்பிக்கப்பட்டு 20 வருடங்களாகியும் மக்களின் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை


பிரதேச சபைகள் ஆரம்பிக்கப்பட்டடு 20 வருடங்கள் ஆகின்றன. ஆரம்பிக்கப்பட்ட காலம் தொடக்கம் பிரதேச சபைகளை ஆட்சி செய்தவர்கள் எமது சமூகத்தின் தேவைகளை அறிந்து சேவை செய்யாததால் எமது மக்கள் அடிப்படை வசதிகளின்றி இந்நாட்டில் அடிமைகளாக வாழ்ந்து வருவதாக எஸ்.சதாசிவம் உள்ளுராட்சிசபை பிரச்சாரக் கூட்டமொன்றில் உரையாற்றும் போது தெரிவித்தார்

மேலும். அங்கு குறிப்பிடுகையில் நுவரெலியா மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி சபைகளை ஐ.தே.க, இ.தொ.கா, ஐ.ம.சு.முன்னணி, மலையக மக்கள் முன்னணி போன்ற அரசியல் கட்சிகள் ஆட்சி செய்த கடந்த காலங்களில் எமது பெருந்தோட்ட மக்களுக்கு எந்தவித நன்மையும் கிடைக்கவில்லை. இம் மாவட்டத்தில் மாவட்டத்தில் வெற்றி பெற்ற உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் பெருந்தோட்ட மக்களுக்கு சட்டரீதியாக அரசாங்க சேவைகளை பெற்றுக்கொடுக்க முடியாதென தட்டிக்கழித்துள்ளனர்.பெருந்தோட்ட தொழிலாளர்களின் வாக்குகளை பெற்று அதிகாரத்தை கைப்பற்றும் ஆட்சியாளர்கள் பெருந்தோட்ட மக்களின் வாக்குகளை பெறமுடியுமானால் ஏன் அவர்களின் தேவைகளைக் கேட்டறிந்து சேவை செய்ய முடியாது எனக் கேள்வி எழுப்பினார்.

பெருந்தோட்டங்கள் கிராமங்களாக மாற்றப்பட வேண்டும். இந்நாட்டிலுள்ள கிராமங்களை அபிவிருத்தி செய்வது போல பெருந்தோட்டங்களையும் அபிவிருத்தி செய்து கிராமங்களாக மாற்றுவதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து உள்ளுராட்சி சபைகளை கைப்பற்ற வேண்டும் என்றார்

No comments: